Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

போடி. எஸ். சையது முகமது, சென்னை-93.

கழுகார் பதில்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆங்கிலப் புத்தாண்டையட்டி கட்சிப் பிரமுகர்களுக்கு கருணாநிதி வாழ்த்து வழங்கி இருக்கிறாரே?

கழுகார் பதில்கள்

ஜனவரி 2-ம் தேதி 'முரசொலி’ நாளிதழைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். ஆங்கிலப் புத்தாண்டை கருணாநிதி கொண்டாடிய படங்கள் அதில் பெரிது பெரிதாக இருக்கின்றன. முழு நீள சந்தன மாலை அணிந்து உட்கார்ந்திருக்கும் கருணாநிதியின் படத்துக்கு மேலே, 'சந்தன மாலையில் தமிழ்த் தாயின் தலைமகன்’ என்று தலைப்பு போட்டு இருக்கிறார்கள். ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி முன்னணியினர் வாழ்த்திய வண்ணப் படங்கள் ஒரு பக்கத்துக்கு வெளியாகி இருக்கிறது.

இப்படி விமரிசையாகக் கொண்டாடுபவருக்கு, தமிழ்ப் புத்தாண்டை தை 1-ல் கொண்டாடினால் என்ன? ஏப்ரல் 14-ல் கொண்டாடினால்தான் என்ன?

 ஜெயராம், புதுச்சேரி.

கழுகார் பதில்கள்

'காங்கிரஸ் விரும்பினால் கூட்டணியை முறித்துக்​கொள்ளட்டும்’ என்கிறாரே மம்தா பானர்ஜி. ஆட்சி கவிழ்ந்து விடுமா?

காங்கிரஸை மிரட்டியே காரியம் சாதிக்கும் வித்தையைக் கற்றுக்கொண்டு விட்டார் மம்தா. எனவே, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இத்தகைய மிரட்டல்களைப் படிக்கலாம். ஆனால், வேறு எதுவும் இப்போதைக்கு நடந்துவிடாது!

 வீரகணபதி, சென்னை-17.

கழுகார் பதில்கள்

இந்த வயதிலும் கடலூர் சென்று புயலால் பாதித்த பகுதிகளை கருணாநிதி பார்த்திருக்கிறாரே?

பாராட்டத்தக்க விஷயம்தான். ஆனால், இதை ஸ்டாலின் செய்திருக்க வேண்டும்!

 சரத்பாபு, ஸ்ரீவைகுண்டம்.

கழுகார் பதில்கள்

தமிழ்நாடு அரசுக்கு முல்லைப் பெரியாறு விஷயத்தில் தொடர்ந்து அறிவுரை சொல்லி வருகிறாரே கேரள முதல்வர் உம்மன் சாண்டி?

பாமாயில் கொள்முதல் வழக்கில் குற்றமற்றவர் என்று நிரூபித்து முதலில் வெளியே வரட்டும் உம்மன் சாண்டி. அதன் பிறகு, முல்லைப்பெரியாறு பற்றிப் பேசட்டும். 20 ஆண்டுகளுக்கு முன் கருணாகரன் முதலமைச்சராகவும் இவர் நிதி அமைச்சராகவும் இருந்தபோது எழுந்த குற்றச்சாட்டு அது. இதற்குக் காரணமான அதிகாரி தாமஸ்  மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, சமீபத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து விலகினார். எனவே, இந்தப் புகாரில் இருந்து உம்மன் சாண்டி தப்ப முடியாது என்று கேரளப் பத்திரிகைகள் எழுதுகின்றன. கேரள அரசையே வஞ்சிக்கும் வண்ணம் செயல்பட்டதாகச் சொல்லப்படும் உம்மன் சாண்டி, தமிழகத்தின் மீதுவைக்கும் விமர்சனம் எப்படிச் சரியாக இருக்க முடியும்?

 சித.சுப்பிரமணியம், விருதுநகர்.

கழுகார் பதில்கள்

'தமிழக நலன் சார்ந்தே செயல்படுவோம்’ என்று காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சொல்வது உண்மையா?

அவர் சொல்ல வேண்டாம். செயலில் காட்டட்டும்!

தேனி, கம்பம், போடி மக்கள் தெருவில் இறங்கிப் போராடிய போது, மூன்று வாரங்கள் கழித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சென்னையில் ஓர் அரங்கக் கூட்டம் நடத்தியது. அதில் உணர்ச்சி வசப்பட்டு 'தெரியாமல்’ ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டார் ப.சிதம்பரம். அதையும் டெல்லிக்குப் போனதும் வாபஸ் வாங்கி விட்டார். ஞானதேசிகன் சொல்லும் செயல்பாடு இப்படிப் பட்டதாக  இருந்தால்... தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்படாமல் இருப்பதே நல்லது!

 சுரேந்திரன், குமாரபாளையம்.

கழுகார் பதில்கள்

ஏதாவது ஒரு காமெடி சம்பவம் சொல்லுங்கள்... அரசியல் இல்லாமல்!

##~##

அரசியலில் இல்லாத காமெடி வேறு எதில் இருக்கிறது? முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராம், ஊழல் வழக்கில் சிக்கிக்கொண்டது அனைவருக்கும் தெரியும். ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்தது சி.பி.ஐ. நீதிமன்றம். அதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. உச்ச நீதிமன்றம் போனார் சுக்ராம். அவர்களும் தடை விதிக்க மறுத்து விட்டார்கள். 'சி.பி.ஐ. கோர்ட்டில் சரண் அடையுங்கள்’ என்று உத்தரவு வந்ததும் சுக்ராமின் காமெடி தொடங்கியது.

கோமா நிலையை அடைந்ததாக டெல்லி மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். இதையே மனுவாக போட்டார்கள். 'அவர் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பது உண்மை. ஆனால், கோமா நிலையில் இல்லை’ என்று தலைமை மருத்துவர் சொன்னதுகூட தெரியாமல் தூங்கிக்கொண்டு இருந்தார் சுக்ராம்.

'சி.பி.ஐ. கோர்ட்டில் சரண் அடையாவிட்டால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும்’ என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டதைச் சொல்ல வந்த வக்கீலைக்கூடக் கண் திறந்து பார்க்காமல் படுத்து இருந்திருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்டு எழுப்பிச் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகு பயந்துபோய், 'ஆம்புலன்ஸை வரச் சொல்லுங்க... போயிடுறேன்’ என்று அதில் ஏறிப் படுத்துக்கொண்டாராம். 'கோமா ஸ்டேஜ்ல இல்லைன்னு டாக்டர் சொல்றாரே. அப்புறம் ஏன் படுத்தே இருக்கார்?’ என்று சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி கேட்க... 'கோமாவுல இல்ல... ஆனா, மந்தகதியாவே இருக்கார்’ என்றாராம் சுக்ராம் வக்கீல். 'திகார் சிறைக்குள்ளயே ட்ரீட்மென்ட் கொடுப்பார்கள்’ என்று அனுப்பி விட்டார்கள். மறுபடியும் எதையோ சொல்லி மருத்துவமனைக்கு வந்துவிட்டார். இது எத்தனை நாளைக்கோ?

நாட்டின் நிதி வளத்தை கோமா நிலைக்குத் தள்ளியவர்களின் வாழ்க்கை, கடைசிக் காலத்தில் எப்படி காமெடி ஆகிறது என்று பார்த்தீரா?

 கலையரசன், திருத்தங்கல்.

கழுகார் பதில்கள்

சுப்பிரமணியன் சுவாமி கேட்கும் கேள்விகளுக்கு ப.சிதம்பரம் கோர்ட் படி ஏறிப் பதில் சொல்​வாரா?

கழுகார் பதில்கள்

ஸ்பெக்ட்ரம் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பதில் சொல்வாரா என்பது ஜனவரி 21-ம் தேதிக்குப் பிறகுதான் தெரியும். ஆனால், சுவாமி எழுப்பும் சந்தேகங்களுக்கு, சிதம்பரம் முதலில் மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டும்!

எஸ்.விஜயகுமார், விருத்தாசலம்.

கழுகார் பதில்கள்

தமிழக அமைச்சரவை மாற்றம் எப்போது?

30 பேருக்கு பீதியை உருவாக்கும் கேள்வி இது. ஜனவரி 30 - தமிழக சட்டசபை கூடும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால், இடையில் மந்திரிசபை மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். ஒரு வார காலம் சட்டசபை நடக்கும். இந்த இடைப்பட்ட ஒரு மாதம் ஒவ்வொரு மந்திரிக்கும் 'கோல்டன் பீரியட்’. இதில் அவர்கள் துறை ரீதியாக எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை வைத்தே 'கல்தா’ பட்டியலை முதல்வர் தயாரிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

'சசிகலாவுக்கு வேண்டியவர்கள், ராவணனால் அமைச்சர் ஆக்கப்பட்டவர்கள் என்பதாலேயே ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கத் தேவை இல்லை’ என்று முதல்வர் நினைக்கிறாராம். தகுதி, திறமையை அடிப்படையாகக் கொண்டதாக அடுத்து நடக்கும் மாற்றங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்!

கழுகார் பதில்கள்