Published:Updated:

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளரா? எதிர்க்கும் உமா பாரதி

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளரா? எதிர்க்கும் உமா பாரதி
நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளரா? எதிர்க்கும் உமா பாரதி
நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளரா? எதிர்க்கும் உமா பாரதி

மக்களைக் கவரும் அனைவரும் பிரதமர் வேட்பாளராகிவிட முடியாது என்றும்  பிரதமர் வேட்பாளராக அத்வானியே சிறந்த தேர்வாக இருப்பார் என்றும் பா.ஜ.க. துணைத் தலைவர் உமா பாரதி எதிர்ப்பு தெரிவித்துள்ள கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோருடன் ஒப்பிடத்தக்க அளவில் யாரும் இல்லை என்று உமாபாரதி கூறினார்.

##~~##
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த உமாபாரதி, பிரதமர் வேட்பாளராக அத்வானியே சிறந்த தேர்வாக இருப்பார் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அறிவிக்க ஐக்கிய ஜனதா தளம் கெடு விதித்திருக்கும் நிலையில், உமாபாரதியின் இந்த கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.