Published:Updated:

தமிழக பட்ஜெட் 2019-20 : டாஸ்மாக் கடைகள் குறைப்பு; பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! #TNBudget2019 #LiveUpdates

தமிழக பட்ஜெட் 2019-20 : டாஸ்மாக் கடைகள் குறைப்பு; பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!   #TNBudget2019 #LiveUpdates
தமிழக பட்ஜெட் 2019-20 : டாஸ்மாக் கடைகள் குறைப்பு; பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! #TNBudget2019 #LiveUpdates

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 14-ம் தேதி வரை நடைபெறும் சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வு கூட்டத்தில் தகவல்

ஸ்டாலின் விமர்சனம் ;

ஏழை எளியவர்களுக்கு பயனில்லாத பட்ஜெட். பட்ஜெட்டால் ஒரு பயனுமில்லை!

"வருவாயை பெருக்குவதற்கு எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை" "திவாலான கம்பெனி போல, கொட நாட்டை எப்படி கொள்ளை அடித்தார்களோ அப்படி தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் வகையில் பட்ஜெட்" 

பட்ஜெட் உரை முடிவு :

பட்ஜெட்டை உரையை வாசித்து முடித்தார் ஓ.பன்னீர் செல்வம்

* அரசு ஊழியர்களின் முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக் குழுவின் அறிக்கையும் பரிசீலனையில் உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வருவாய் ரூ 1,197,721 கோடியாக இருக்கும்; அரசின் நிதி பற்றாக்குறை 44,176 கோடியாக இருக்குமென கணிப்பு!

* சத்துணவு திட்டத்திற்காக ₹1,772 கோடி ஒதுக்கீடு

பெண் குழந்தை கல்வி :

பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூ.48.70 கோடி ஒதுக்கீடு!

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்காக ரூ.476.26 கோடி நிதி ஒதுக்கீடு

* விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் இதுவரை, 8.72 லட்சம் ஏழைப் பெண்கள் பயனடைந்துள்ளனர். 2019-2020 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர ரூ.198.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு அநீதி இழைப்பு : 

மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வில் பதினைந்தாவது நிதிக்குழு நியாயமான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். கடந்த காலங்களில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

14 வது நிதிக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்திய பின்னர், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களில் தனது பங்கை மத்திய அரசு கணிசமாக குறைத்துள்ளது. இதனால் மாநில அரசின் நிதிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது. 

* பொறியியல் பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி

* ஆண்டுதோறும் 10,000 வேலையில்லா பொறியியல் பட்டதாரிகள் பயனடைவார்கள்

* 38 கோடி ரூபாய் செலவில் 20 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

* தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்துக்கு ரூ200 கோடி ஒதுக்கீடு

பிரதமருக்கு நன்றி!

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். மேலும் அம்மா மகப்பேறு பரிசு பெட்டகம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள், ஏழை, எளிய நலிவடைந்தோருக்கு கிடைக்க உறுதி. 

உலக வங்கி கடன் உதவியுடன் 2685.19 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்

* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடி நிதி..

* கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் 5259 கோடி ரூபாய் செலவில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்...

* முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவி திட்டத்துக்கு ரூ.959 கோடி ஒதுக்கீடு.

* தமிழகத்தில் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1,031 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிற்றல் கல்வி இயக்கம் ஆகியவற்றின் கீழ் மத்திய அரசு நிதி தரவில்லை. நிதி உதவி கிடைக்காவிட்டாலும் தமிழக அரசு தொடர்ந்து இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறைந்த செலவில் தரமான உயர் கல்வி பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

* மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக ரூ 1362.27 கோடி ஒதுக்கீடு

* 2019-20 ஆம் ஆண்டில் மடிக்கணினி வழங்குவதற்காக ₹1362 கோடி ஒதுக்கீடு

மின்சாரம் தயாரிப்பு :

* பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க ரூ.5,259 கோடி ஒதுக்கீடு!

* புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

* ஜிஎஸ்டி மூலம் கடந்த 9 மாதங்களில் தமிழக அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.31 ஆயிரம் கோடி

* 2011-2012 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 1,03,600 ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம் 2017-2018 ஆம் ஆண்டில் 1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது.

* 2018-19 ஆண்டில் 9.3  லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6118 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது ; இந்த ஆண்டு 10 ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டம்

* பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்தது

* தமிழகத்தில் உள்ள 89 அணைகளில் 745.49 கோடி செலவில் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 43 கோடி ஒதுக்கீடு 

* 37 அணைகளில் கட்டமைப்பை புனரமைக்கும் பணிகளை 2வது கட்டமாக மேம்படுத்தப்படும் 

* 2019 - 2020-ம் ஆண்டில் தமிழக அரசின் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 3,97,495.96 கோடி கடந்த ஆண்டை விட 41,651.96 கோடி அதிகம்.

* ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா

சுற்றுச்சூழல் ; 

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு ரூ.445 கோடி ஒதுக்கீடு

சென்னையைச் சுற்றியுள்ள வனப்பகுதியை பாதுகாக்க ரூ 25 கோடி ஒதுக்கீடு

அடையாறு மற்றும் கூவம் நதி சீரமைப்பு, சதுப்பு நில மீட்டெடுப்பு திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

விவசாயிகள் :

* கரும்பு உற்பத்திக்கான ஊக்கத் தொகையாக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* காய்கறி, பழங்கள் சாகுபடியை ஊக்குவிக்க முதல்வரின் சிறப்பு திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும்.

மெட்ரோ ரயில் :

மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தின் கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள்

* 160 ஐசாட் - 2 செயற்கைக்கோள் தொலைபேசிகள், நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்கப்படும்.

மீன்வளத்துறை :

* மீன்வளத்துறைக்காக ரூ.927,85 கோடி ஒதுக்கீடு

* மீன்பிடித் தடைக்கால உதவித்தொகைக்காக ரூ170.13 கோடி ஒதுக்கீடு

* 80, ஆழ்கடல் மீன்பிடி படகுக் குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள் வழங்கப்படும்

* பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பெண்குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்துக்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு

* நீதி நிர்வாக துறைக்கு 1265.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ரூ.84 கோடி மானியத்தில் விவசாயிகளுக்கு 2000 பம்புசெட்டுகள்

* பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

வேளாண்மை துறை ;

* வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ.10,559 கோடி ஒதுக்கீடு

* அரசின் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரிகளுக்காக ரூ.79.73 கோடி ஒதுக்கீடு

* தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்துக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு

அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டுக்கு ரூ.132.80 கோடி செலவில் சூரிய ஒளி மின்திட்டம்

அரசு ஊழியர்களுக்கு நிதி :

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலனுக்காக 55,399 கோடி ரூபாயும், ஓய்வூதிய பலன்களுக்காக 29,627 கோடி ரூபாய் ஒதுக்கீடு

எந்த துறைக்கு எவ்வளவு?

*கால்நடைத்துறைக்கு 1,252 கோடி ரூபாய் ஒதுக்கீடு,

* பால்வளத்துறைக்கு 258 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* மீன்வளத்துறைக்கு 927 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 13,605 கோடி ஒதுக்கீடு

மதுக்கடை மூடல்

* 2,698 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன

* கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகையாக ரூ.200 கோடி ஒதுக்கீடு

* பிரதமர் பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் மாநில அரசின் பங்காக ரூ 621.59 கோடி ஒதுக்கீடு

* உள்ளாட்சி துறைக்கு ரூ5,178 கோடி நிதி ஒதுக்கீடு

* வீடு வசதிதுறைக்கு ரூ.6,265 கோடி ஒதுக்கீடு

* நதிக்கரையோரம் வசிக்கும் 38,000 பயனாளிகளுக்கு ரூ.4647.50 கோடி ஒதுக்கீடு

* வருவாய் துறைக்கு மொத்தமாக 6106.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு 169.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

பசுமை வீடுகள் :

நடப்பாண்டில் 20,000 பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


* அண்ணா பல்கலைக்கழக உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்

* ஹார்வேர்டு போன்ற மற்ற சர்வதேச பல்கலைகழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும்

* மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2,681 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

* போக்குவரத்து துறைக்கு 1297 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

* பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடி ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் :

* மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

* சென்னையில் 2.000 செலவில் நிலத்தடி வாகன நிறுத்த வசதிகள் செய்யப்படும்

* விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்துக்கு 1 லட்சம் நிவாரணம்!

* சிறுபான்மையினர் நலத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

* மதுரை திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படும்.

* மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக 825 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள 284.70 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.

* நகராட்சிகளில் குடிநீர் தேவைக்காக 18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* பள்ளி கல்வித்துறைக்கு 28,577 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிப்பு. இது கடந்தாண்டை விட அதிகம்

மின்சார பேருந்துகள் :

சென்னை, கோவை, மதுரை முதல்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்க முடிவு

*ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்

விவசாயிகள் ;

*விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கான விபத்து ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம்

* சமூக பாதுகாப்புஉதவித்தொகை திட்டத்துக்கு 3,958 கோடி ஒதுக்கீடு

* வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

* தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 44,176 கோடியாக இருக்கும் என 2019-20-ம் ஆண்டு பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் :

* தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். தற்போது பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

*எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் வந்தார். 

* ஓ.பன்னீர் செல்வம் தலைமை செயலகம் வந்தார். சரியாக 10 மணி அளவில் தமிழக பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார்.

* பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி தலைமை செயலகத்துக்கு எம்.எல்.ஏக்கள் வர தொடங்கினர்

தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கலாகிறது. நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை காலை 10 மணி அளவில் பேரவையில் தாக்கல் செய்கிறார். 

இந்தாண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த மாதம் 2-ம் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாள் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் மற்றும் முதல்வர் பதிலுரையுடன் ஒரு வாரம் பேரவை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 2019-20-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை. நிதித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் ஓ.பி.எஸ் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக உரையை வாசிப்பார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய பட்ஜெட் போன்றே தமிழக பட்ஜெட்டிலும் பல்வேறு புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் இடம்பெறும் எனத் தெரிகிறது. பட்ஜெட் உரையுடன் இன்றைய பேரவை முடித்துவைக்கப்படும். பின்னர் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி பேரவையை எத்தனை நாள்கள் நடத்தலாம் என முடிவெடுக்கப்படும். தமிழக அரசின் கடன் அளவு மூன்றரை லட்சம் கோடியாக இருக்கும் என ஏற்கெனவே மதிப்பிடப்பட்டது. கஜா புயல் நிவாரண நிதி, பொங்கல் பரிசு, ஆகியவற்றால் தமிழக அரசின் நிதிச்சுமை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.