Published:Updated:

நில அபகரிப்பில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஸ்டாலின் கேள்வி

நில அபகரிப்பில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஸ்டாலின் கேள்வி
நில அபகரிப்பில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஸ்டாலின் கேள்வி

கரூர்: நில அபகரிப்பு குற்றச்சாட்டியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறும் ஜெயலலிதா, நில அபகரிப்பு வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

நில அபகரிப்பில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஸ்டாலின் கேள்வி

கரூரி்ல் நேற்றிரவு நடைபெற்ற சேது சமுத்திர எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க பொருளாளர்  மு.க.ஸ்டாலின், சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் கலைஞருக்கு நல்ல பெயர் வந்து விடும் என்பதற்காக அந்த திட்டத்தை ஜெயலலிதா எதிர்க்கிறார்.

சட்டமன்றத்தில் தி்ட்டங்களை பற்றி பேசுவதற்கு ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ளும் அமைச்சர்களும், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களும், அவர்கள் கட்சித் தலைவி ஜெயலலிதாவை பாராட்டி பேசுவதற்கு பல நிமிடங்களை எடுத்துக் கொண்டு அவையின் நேரத்தை வீணடிக்கின்றனர்.

அவர்களை அவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என ஜெயலலிதாவும் தடுக்காமல் அவர்கள் சொல்பாடுவதை ரசித்து சிரிக்கிறார். எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்க எழுந்தாலே அனுமதி மறுத்து அவைக்காவலர்களை விட்டு அலேக்காக தூக்கி வெளியேற்றி விடுகின்றனர். என்னுடைய தாய், தந்தையர் கூட என்னை இப்படி தூக்கி சென்றதில்லை.

##~~##
நில அபகரிப்பு குற்றச்சாட்டியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் கரூரை சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி , கோகுல் என்பவரிடம் இருந்து நிலத்தை அபகரித்த வழக்கில் எந்த பதிலும் சொல்லவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று ஸ்டாலின் கூறினார்.
சாதிக் பாட்சா


படம்:
மணிகண்டன்