Published:Updated:

கூட்டணி உள்ளரசியல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 தெறிப்புகள்!

கூட்டணி உள்ளரசியல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 தெறிப்புகள்!
கூட்டணி உள்ளரசியல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 தெறிப்புகள்!

இந்த வார ஜூனியர் விகடன்: https://bit.ly/2MVdY4g

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் உற்றுக் கவனிக்கப்படும் கட்சியாக மாறியிருக்கிறது தி.மு.க. கருணாநிதி இல்லாமல் தி.மு.க சந்திக்கும் முதல் தேர்தல் இது. தலைவராக ஸ்டாலின் களம் இறங்கும் முதல் தேர்தலும் இதுவே. கூட்டணிக் கட்சிகளிடம் கருணாநிதி ஆரம்பத்தில் கறார் காட்டினாலும்கூட அதன் பிறகு கனிந்துபோகும் வாய்ப்புகளை, கடந்த தேர்தல்களில் பார்க்க முடிந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். 

கூட்டணி உள்ளரசியல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 தெறிப்புகள்!

"கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியால் ஐந்தாண்டுகள் மக்களவையில் தி.மு.க உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லாத பரிதாப நிலை ஏற்பட்டது. அதற்குப் பரிகாரமாக இந்த முறை அதிக அளவில் தி.மு.க உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் சென்றால் மட்டுமே, டெல்லி அரசியல் லாபியைத் தன் வசம் கொண்டுவர முடியும் என ஸ்டாலின் நினைக்கி றார்."

-  தமிழ்நாட்டில் '40-க்கு 40' என்கிற இலக்குடன் கூட்டணி வியூகத்தை வகுத்துவருகிறது தி.மு.க. அதேசமயம் தொகுதிப் பங்கீடு விஷயத்தில், கட்சித் தலைவர் ஸ்டாலினின் கறார் நடவடிக்கைகளைக் கண்டு கூட்டணி கட்சிகள் ஆடிப்போயிருக்கின்றன. வெளியே ஒற்றுமையாகக் காட்டிக்கொண்டாலும் தொகுதி பேர விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் யுத்தமே நடப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள் கூட்டணியில் உள்விவரம் அறிந்தவர்கள். 'என்னதான் நடக்கிறது தி.மு.க கூட்டணியில்?' என்ற கேள்விக்கு சற்றே விரிவாக பதில் சொல்லியிருக்கிறது 'இது கலைஞர் தி.மு.க அல்ல! - கடுப்பேற்றும் ஸ்டாலின்... கலக்கத்தில் கூட்டணி' எனும் கவர் ஸ்டோரி. 

கூட்டணி உள்ளரசியல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 தெறிப்புகள்!

''தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, தேர்தல் களத்தில் இறங்கி, வியூகம் வகுப்பது ஜெயலலிதாவின் ஸ்டைல். அதையே இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கையில் எடுத்துள்ளார். விருப்ப மனு வழங்கும் பணிகள் தொடங்கியது அப்படித்தான். அமைச்சர்களின் உறவினர்கள் பலரும், விருப்ப மனுக் கொடுத்துள்ளனர். குறிப்பாக, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தர், அமைச்சர்கள் சி.வி.சண்முகத்தின் அண்ணன், சம்பத்தின் மகன், வீரமணியின் உறவினர் என அமைச்சர்களின் ரத்தப் பந்தங்கள் வரிசையாக மனுக்களை வாங்கியுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ள அமைச்சர்களே, தங்கள் உறவுகளுக்கு சீட் கேட்டுக் களத்தில் இறங்கவுள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இந்தக் கோதாவில் குதித்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்..."

- தேர்தல் கூட்டணி விவகாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது... அதிலும் அ.தி.மு.க-தான் முன்னால் இருப்பதாகத் தெரிகிறது. இதன் பின்னணியுடன், மற்ற கட்சிகளின் உள்விவகாரங்களையும் அடுக்கிறது மிஸ்டர் கழுகு பகுதி. 'ஜெயிக்கவில்லை என்றால் ஜெயில்! - அ.தி.மு.க-வுக்கு டெல்லி எச்சரிக்கை' எனும் தலைப்புக்குள் உள்ள ட்விஸ்டை முழுமையாக வாசித்ததும் அறியலாம். 

கூட்டணி உள்ளரசியல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 தெறிப்புகள்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது அல்லவா. அ.தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் மும்முரமாக நடந்தாலும் இன்னொரு பக்கம் உள்கட்சி புகைச்சல்களும் அதிகரித்துள்ளன. 'பேச்சாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி, பொங்கல் பரிசுத்தொகையில் இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி கைவைத்திருக்கிறார்' என்ற புகார் கொடிகட்டிப் பறக்கிறது. இன்னொருபுறம், 'பட்டிமன்ற நடுவராகப் பேச்சாளர்களுக்கு வாய்ப்புகள் தராமல் துணைக் கொள்கைப் பரப்புச் செயலாளர் வைகைசெல்வனே ஆதிக்கம் செலுத்துகிறார்' என்றும் கட்சியினர் புகார் கூறுகின்றனர். வைகைச்செல்வன் தூண்டுதலின் பேரிலேயே தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்படுவதாக வளர்மதி கொந்தளிக்கிறார்.

- இதன் பின்னணியையும், சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளையும் திரட்டித் தருகிறது 'அ.தி.மு.க-வில் பரிசுத் தொகை அபேஸ்! - கழகப் பேச்சாளர்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா?' எனும் செய்திக் கட்டுரை. 

"காசநோயைப் பொறுத்தவரை இங்கே அது தாமதமாகத்தான் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே நோயாளிகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் அதிகம் தேவை. தனியார் மருத்துவமனைகள், இந்த விஷயத்தில் சற்றுக் கவனக்குறைவாகச் செயல்படுகின்றன. ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்குப் பொதுவான நோய்த்தொற்று என்றால் காசநோய்தான். அதனால் ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்கு காசநோய் இருக்கிறதா என்று கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காசநோய் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்வதில்லை. இதனால் நோய் கண்டறியப் படாமல் போவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது..."

- காசநோய் பாதிப்பு அதிகமிருக்கும் மாநிலங்களின் வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். தென்னிந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள மாநிலமும் தமிழகம்தான். 2018-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 1,04,123 பேருக்குக் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக கடந்துசென்றுவிடக்கூடிய விஷயம் அல்ல இது. இப்படியான சூழலில், 2025-க்குள் காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது சாத்தியமா? பின்னடைவுக்குக் காரணம் என்ன? தீர்வுகள் என்ன என்பதை எல்லாம் விரிவாக அலசுகிறது 'காசநோய் பிடியில் தமிழகம்! - காப்பாற்ற வழி என்ன?' எனும் கட்டுரை. 

கூட்டணி உள்ளரசியல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 தெறிப்புகள்!

> "மடத்துக்கு ரூ.600 கோடி அளவுக்கு சொத்துகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?"

"எவ்வளவு சொத்துகள் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. நூறு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் இருக்கும் என்று நினைக்கிறேன்." 

> "மடத்தை நீங்கள் ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்கிறார்களே?"

"என் மடத்தில் நான் இருக்கிறேன். நான் ஏன் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும். என் பெயரில்தான் மடத்துக்கான அனைத்து ஆவணங்களும் உள்ளன."

- ஆன்மிகம் வளர்க்கும் மடங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது புதிது அல்ல. அந்த வரிசையில், கும்பகோணத்தில் இருக்கும் வீரசைவ பெரிய மடத்தில் நடந்தேறியிருக்கும் அடிதடி விவகாரங்கள், ஆன்மிகத் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த மடத்துக்கு கர்நாடகம், இலங்கை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.600 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மடாதிபதியாக நீலகண்ட தேசிக சுவாமி இருந்துவந்தார். திடீரென இவருக்குப் பதிலாக, மடத்தின் கமிட்டி உறுப்பினர்கள், பசவ முருகசாரங்க தேசிக சுவாமிகள் என்பவரைப் புதிய மடாதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்துவைத்தனர். இதனால், இரு தரப்புக்கு ஏற்பட்ட அடிதடி மோதலில் புதிய மடாதிபதி விரட்டியடிக்கப்பட்டார். இந்த விவகாரம் காவல்துறை வரைக்கும் போய், வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தக் களேபரச் சூழலில், நீலகண்ட தேசிய சுவாமிகளைச் சந்தித்து சிறப்புப் பேட்டி வெளியிட்டுள்ளது ஜூ.வி. அதன் தலைப்பு: "என்னைக் கொலைசெய்து சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார்கள்!" - குற்றம்சாட்டும் கும்பகோணம் மடாதிபதி

கூட்டணி உள்ளரசியல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 தெறிப்புகள்!

> பஞ்சுலட்சுமி, கீழடி: "சார், தயவுசெஞ்சு இந்த டாஸ்மாக் கடைங்களை மூடுங்க. எங்களுக்கு வீடுகூட வேண்டாம். நெதமும் குடிச்சிட்டு வந்து என் புருஷன் என்னைப் போட்டு மிதிக்கிறான். டாஸ்மாக் கடைங்களை மூடுனாத்தான் உங்களுக்கு ஓட்டு போடுவோம். இதைக் கண்டிப்பா சொல்லிக்கிறேன்..."

ஸ்டாலின்: "உங்க கோரிக்கையைக் குறிச்சுவெச்சிக்கிறேம்மா..."

> நிஷாந்தினி, பசியாபுரம்: "சார், நான் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புல ஊருலேயே முதல் மார்க் வாங்குனேன். இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். அப்பா, அம்மா ரெண்டு பேருமே விவசாயிங்க. குடும்பம் ரொம்ப கஷ்டப்படுது. ஒரு வேலை வாங்கிக் கொடுக்க முடியுமா சார்?

ஸ்டாலின்: (மெளனம்)

> மாலதி, நாகலாபுரம்: "எங்க ஊருல பேருதான் கவர்மென்ட்டு ஆஸ்பத்திரி. எல்லாத்துக்கும் காசு பிடுங்குறாங்க. என்னோட பிள்ளை பிரசவத்துக்கு ஐநூறு ரூவா லஞ்சமா பிடுங்கிட்டாங்க. நடவடிக்கை எடுப்பீங்களா?" 

உதயநிதி ஸ்டாலின்: "சீக்கிரம் சரிசெய்யறோம்மா..."

- தமிழகம் முழுவதுமே தி.மு.க சார்பில் ஊராட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கட்சித் தலைவர் ஸ்டாலின், மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்கும் இந்தக் கூட்டங்களில் கிராம மக்கள் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்கிறார்கள். சரி, என்ன கேட்கிறார்கள் மக்கள்? தி.மு.க தரப்பின் ரியாக்‌ஷன் என்ன? சில சாம்பிள் அடங்கிய 'தி.மு.க ஊராட்சிக் கூட்டம்... என்ன கேட்கிறார்கள் மக்கள்? - என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்?' என்ற தொகுப்பு சொல்லும் செய்திகள் ஏராளம்.

கூட்டணி உள்ளரசியல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 தெறிப்புகள்!

"...கடந்த நவம்பர் 7-ம் தேதி என் மகளை அதே கடையில் வேலை பார்த்துவந்த 42 வயதான சின்னப்பா என்பவர், தன் வீட்டில் விருந்துக்கு வருமாறு கட்டாயப்படுத்தி என் மகளை அழைத்துச் சென்றுள்ளார். அன்று மாலை 3 மணியளவில் என் மகளை மயக்கமான நிலையில் ஆட்டோவில் கொண்டுவந்தனர். அவளுக்கு ரத்தப்போக்கு அதிகமாகி, உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவளைச் சேர்த்தோம். அவள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வேலைக்குச் சென்ற என் மகளை இப்படி அநியாயமாகச் சீரழித்துவிட்டனர். உடனே, கும்பகோணம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். குற்றவாளிகளில் இருவரை மட்டும் கைது செய்தனர். தஞ்சாவூர் போலீஸ் எஸ்.பி மற்றும் கலெக்டரிடம் புகார் செய்தோம். ஆனாலும், நடவடிக்கை இல்லை. எங்களுக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்குங்கள்'' 

- பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்த புகார் கடிதத்தைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணியைச் சொல்லும் 'நீதிபதிகளை உலுக்கிய தாயின் கடிதம்... சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்!' எனும் செய்திக் கட்டுரை கவனத்துக்குரியது.

கூட்டணி உள்ளரசியல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 தெறிப்புகள்!

"என் மகள் சந்தியாவுக்கும் தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கும் 2000-ல் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில மாதங்களிலேயே என் மகளை பாலகிருஷ்ணன் அடித்து சித்ரவதை செய்துவந்தார். 2018-ல் பாலகிருஷ்ணனுடன் இனி வாழ முடியாது என்று கூறி வீட்டுக்கு வந்த சந்தியா, விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். சந்தியாவைச் சமாதானம் செய்து மீண்டும் அழைத்துச் சென்றார் பாலகிருஷ்ணன்..."

"இருவரும் சென்னைக்குக் குடியேறினர். எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் சந்தியாவுக்கு, சினிமா துறை பிரபலங்களின் நட்பு கிடைத்தது. இது, பாலகிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லை. சந்தியா மீது சந்தேகம் அடைந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சந்தியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டவர், அவர் அழகாக இருப்பதால்தான் பிரச்னை என்று சொல்லி அவரது தலைமுடியை அடிக்கடி மொட்டையடித்து விட்டிருக்கிறார்..."

- சினிமாவில் வரும் காட்சிகள் சென்னையில் நிஜமாகியிருக்கின்றன. சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் வெட்டப்பட்ட நிலையில் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்ததுடன், அவரைக் கொலை செய்த சினிமா இயக்குநரான அவரின் கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில், கணவரின் சந்தேகமே கொலை வரை சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது. அதன் முழு பின்னணியைத் தருகிறது 'முதலில் மனைவிக்கு மொட்டை அடித்து டார்ச்சர்... பின்பு தலையை வெட்டி கொடூரம்...' எனும் க்ரைம் ஸ்டோரி. 

இந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2GhtNll