Published:Updated:

`என்னை அரசியல்வாதியாகப் பார்க்க மக்கள் விரும்பல!'- அழைக்கும் கட்சிகளுக்கு ஐ.எம்.விஜயன் பதில்

`என்னை அரசியல்வாதியாகப் பார்க்க மக்கள் விரும்பல!'- அழைக்கும் கட்சிகளுக்கு ஐ.எம்.விஜயன் பதில்
`என்னை அரசியல்வாதியாகப் பார்க்க மக்கள் விரும்பல!'- அழைக்கும் கட்சிகளுக்கு ஐ.எம்.விஜயன் பதில்

``என்னை அரசியல்வாதியாகப் பார்க்க மக்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் சார்பில் போட்டியிடவேண்டும் என அக்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் என்னைவந்து சந்தித்தனர். எனது வேலையை விட்டு வேறு எதையும் சிந்திக்க எனக்கு சமயம் இல்லை'' என ஃபுட்பால் சாம்பியனும் சினிமா நடிகருமான ஐ.எம்.விஜயன் தெரிவித்தார்.

கேரள அரசியல் களம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பம்பரமாகச் சுழன்று வருகிறது. கேரளத்தின் அனைத்துக் கட்சிகளும் தங்கள் அணியில் வி.ஐ.பி.களை களம்காணவைக்கும் முயற்சியை முடுக்கிவிட்டுள்ளனர். அதில் இந்திய ஃபுட்பால் சாம்பியன் ஐ.எம்.விஜயனும் தப்பவில்லை. இந்திய ஃபுட்பால் அணியின் கேப்டனாக இருந்து பல சாதனைகள் புரிந்தவர் கேரளத்தைச் சேர்ந்த ஐ.எம்.விஜயன். இந்திய அணிக்காக 1989-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை 79 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 40 கோல்களையும் அடித்துள்ளார். இந்திய அணிக்கு நீண்ட காலமாக கேப்டனாகவும் இருந்தார். தமிழில் `திமிரு ' என்ற படத்தில் வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார். கேரளக் காவல்துறையில் பணிபுரிந்துவரும் அதேசமயம் தொடர்ந்து சினிமாவிலும் தலைகாட்டிவருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் கேரள மாநிலம் ஆலத்தூர் தொகுதியில் ஐ.எம்.விஜயன் போட்டியிடப் போவதாகச் செய்திகள் இறக்கைகட்டிப் பறந்தன.

இந்த நிலையில் அரசியலில் தனக்கு விருப்பம் இல்லை என மனம் திறந்துள்ளார் ஐ.எம்.விஜயன். இதுகுறித்து ஐ.எம்.விஜயன் கூறுகையில், ``நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. என்னை அரசியல்வாதியாகப் பார்க்க மக்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் சார்பில் போட்டியிடவேண்டும் என அக்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் என்னைவந்து சந்தித்தனர். எனது வேலையை விட்டு வேறு எதையும் சிந்திக்க எனக்கு சமயம் இல்லை. எல்லா அரசியல் தலைவர்களுடனும் எனக்கு நட்பு உள்ளது. காவல்துறை பணி, ஃபுட்பால், சினிமாத்துறைகளில் இன்னும் உயரத்தில் செல்லவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்" என்றார்.