Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

ஸ்ரீராம், திருச்சி.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சி.பி.ஐ முன் குற்றவாளிகளாக நிற்கிறார்கள். இவர்களின் கூட்டாளிகளான சேகர் ரெட்டி, ஒப்பந்ததாரர் செய்யாதுரை, கிருஷ்டி ஃபுட்ஸ் நிறுவனம் என்று பெரும் பணக்காரர்கள் பலரிடமும் வருமானவரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை  ஆகியவை சமீபநாள்கள் வரை சோதனைகள் செய்து ஆவணங்களையும் பணத்தையும் அள்ளியுள்ளன. இதற்குப் பிறகும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி போட்டுவிட்டு, ‘ஊழலை ஒழிப்பேன், கறுப்புப் பணத்தை ஒழிப்பேன்’ என்று பிரதமர் மோடி முழங்குவது, அவருக்கே அசிங்கமாகத் தெரியவில்லையா?


தோளில்தான் எப்போதுமே துண்டு இருக்கிறதே!

கழுகார் பதில்கள்!

கே.முரளி, விழுப்புரம்.
கூட்டணி அமைக்கும் விஷயத்தில் ஜெயலலிதா- எடப்பாடி பழனிசாமி அணுகுமுறையில் என்ன வித்தியாசம்?


அது, சசிகலா அண்ட் கோ-வின் அணுகுமுறை. இது, அமித் ஷா அண்ட் கோ-வின் அணுகுமுறை!

ச.புகழேந்தி, மதுரை.
பா.ம.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகளைக் கூட்டணிக்குள் கொண்டுவருவதில் ஸ்டாலின் சாதுர்யமாக இல்லை என்பதுதானே யதார்த்தம்?

‘தேர்தல் கூட்டணியையே அவர் தீர்மானிக்கவில்லை’ என்கிற பொருமல் அந்தக் கட்சிக்குள் கேட்கிறதே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

த.ப.வேலுமணி, நாராயணபாளையம்.
அட்டவணை வகுப்பினரை, பத்திரிகைகளும் ஊடகங்களும் ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்கிற சொல்லைப் பயன்படுத்தி எழுதியும் பேசியும் வருவது சரியா?


சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவைதான் இடஒதுக்கீடு உள்ளிட்ட இழப்பீடுகள். இதற்காக ஆரம்பகாலங்களில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற சொற்களை, தற்போது அரசாங்கமே பயன்படுத்துவதில்லை. சமீபகாலம்வரை பயன்பாட்டில் இருந்த மற்றொரு சொல்லுக்கும் மத்திய அரசு தடை போட்டுள்ளது. ‘அட்டவணை வகுப்பினர்’ என்றுதான் பயன்படுத்தவேண்டும். இதையெல்லாம் மீறுவது, ஒன்று அறியாமையாக இருக்கலாம்... அல்லது அதிகாரத் திமிராக இருக்கலாம். அறியாமை என்றால் திருத்திக்கொள்ளச் சொல்லலாம்... அதிகாரத்திமிர் என்றால், சட்டபூர்வமாகத் தண்டித்தே ஆகவேண்டும். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.
‘அரசாங்கச் சம்பளம் பெற்றுக்கொண்டு ஊழியம் பார்ப்பவர்கள் லஞ்சம் வாங்கினால், தேசத்துரோக வழக்குப் பதிந்து தூக்கில் போடவேண்டும்’ என்கிறதே உயர் நீதிமன்றம்!?

நமக்கு இந்த மாதிரி தீர்ப்பு வேண்டியதுதான். நீதித்துறையில் ஊழலில் ஈடுபட்டுள்ளவர்கள்மீது/பணியாற்றுபவர்கள்மீது இப்படித் தேசத்துரோக வழக்கைப் பதிந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளே இதற்கு வழிகாட்டலாமே!

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
 @ #metoo (#மீடு)-வுக்குப் பிறகு சினிமாத்துறையில் ஆணாதிக்கம் அடங்கியிருக்கிறதா?


சினிமாத்துறையில் மட்டுமல்ல... எல்லாத் துறைகளிலும் இந்தக் கொடுமை இருக்கத்தான் செய்கிறது. எல்லா இடங்களிலும் #metoo இயக்கத்தைத்தான் அடக்கம் செய்துகொண்டுள்ளனர்.

சம்பத்குமாரி, பொன்மலை.
உலகிலேயே மிக ஆரோக்கியமான நாடு என்பதைத் தேடுவதற்காக 169 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், சிறிய மற்றும் வளராத நாடுகளை (இலங்கை -66, வங்கதேசம்-91, நேபாளம்-110)விட, மோசமான இடத்தை இந்தியா (120) பிடித்துள்ளதே?


உண்மையிலேயே நாம் ஆரோக்கியத்தில் வீக்-கான நிலையில்தான் இருக்கிறோம். அதேசமயம், இதுபோன்ற புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு முடிவுக்கு வரக்கூடாது. பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகள் (மருந்து, உணவு, எலக்ட்ரானிக்ஸ்) அனைத்தையும் சந்தைப்படுத்துவதற்காகவே புள்ளிவிவரங்களில் புகுந்து விளை யாடுவது உண்டு. இலங்கை, வங்கதேசம், நேபாளத்தை ஒப்பிடும்போது நாம் பரவாயில்லை என்பதுதான் நிதர்சனம்.

@மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.

தமிழகத்தில் இவ்வாண்டு கோடையில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்குமா... அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?


இந்த ஆண்டு என்ன, தண்ணீர் பஞ்சத்துக்கு எந்த ஆண்டிலும் பஞ்சமே இல்லையே. ஆனால், தண்ணீர் பஞ்சம் சிலருக்கு வரப்பிரசாதம்தான். அதனால், நீர்நிலைகளைத் தூர்வாருகிறேன் என்கிற பெயரில் துட்டுவாருவது, பினாமி பெயரில் குடிநீர் லாரிகளை இயக்கிக் கொள்ளையடிப்பது, தண்ணீர் விநியோக உரிமையை வெளிநாட்டு கம்பெனிகளுக்குக் கொடுத்து கமிஷன் பார்ப்பது என்று ஏகப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழக்கம்போல ஆரம்பித்துவிட்டார்களே!

கழுகார் பதில்கள்!

@மு.க.அழகிரிவேல், ஒதியடிக்காடு
பிரேமலதாவின் பத்திரிகையாளர் சந்திப்பு?


துரைமுருகன், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் என்று அவரது கோபத்தைக் காட்டுவதற்கு மிகப்பெரிய பட்டியலே இருக்கிறது. ஆனால், வெளிப்படையாகத் திட்ட முடியாதே. அந்தக் கோபத்தை, பத்திரிகையாளர்களின் மீது காட்டித் தணித்துக்கொண்டிருக்கிறார். பாவம், இப்படியாவது அவரது ரத்த அழுத்தம் குறைந்ததே என்று விட்டுத்தள்ளுங்கள்!

ஆர்.ராமன், காஞ்சிபுரம்.
சமீபத்தில் தாங்கள் பார்த்துப்  பெருமைப்பட்ட விஷயம்?


சில தினங்களுக்கு முன் நண்பருடைய காரில் பயணித்துக்கொண்டிருந்தேன். சிக்னலில் தள்ளாடித் தள்ளாடி வந்த 75, 80 வயதிருக்கக்கூடிய முதியவர், காரின் கண்ணாடியைத் தட்டினார். காரிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தார் நண்பர். அதை அலட்சியப் படுத்திய முதியவர், தன் கையிலிருந்த பேனாக்களை விற்பதிலேயே குறியாக இருந்தார். ‘பிச்சை வேண்டாம்... உழைத்து வாழ வழிகொடு’ என்கிற அவரது வைராக்கியத்துக்கு சல்யூட் வைத்தேன்!

கே.காந்திமதிநாதன், திருநெல்வேலி.

‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் லட்சிய தி.மு.க போட்டியிடாது’ என அதன் தலைவர் டி.ஆர் கூறியிருக்கிறாரே?


வடபோச்சே!

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
ஒருவழியாக நிர்மலாதேவிக்கு ஜாமீன் கொடுத்துவிட்டார்களே?

கூடவே, ‘ஊடகங்களிடம் பேசக்கூடாது’ என்று வாய்ப்பூட்டும் போட்டுவிட்டார்களே!

கழுகார் பதில்கள்!

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி
கே.சி.பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து அ.தி.மு.க-வில் மீண்டும் சேர்ந்ததையெல்லாம் குறைகூறி கவர்னரிடம் மனுக் கொடுத்திருக் கிறதே தி.மு.க. இது அவசியமா?


தலைமைச் செயலகத்தில் வைத்துக் கட்சியில் சேர்ப்ப தெல்லாம் தவறான செயல்தான். கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே. ஆனால், தி.மு.க ஆட்சியில் இருந்தபோது மட்டும் என்ன வாழ்ந்ததாம். ஒட்டுமொத்தமாக ஆட்சி அதிகாரத்தை, ஆளுங்கட்சியின் அதிகார மையமாக மாற்றி வைத்ததில் கருணாநிதிக்கு இருக்கும் பங்கை மறைத்துவிட முடியுமா?

@சரவணன், ஓ.ஏ.கே.ஆர் சென்னை-2.

நடைபெற உள்ள 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வென்றால்கூட தி.மு.க ஆட்சி அமைப்பது சிரமம்தானா?


தி.மு.க-விடம் தற்போது இருப்பது 88. காலியாக உள்ள 21-க்கும் தேர்தல் நடந்து, அனைத்திலும் வெற்றிபெற்றாலும் கிடைப்பது 109. காங்கிரஸ் 8 முஸ்லீம் லீக் 1 என்று சேர்த்தால் அறுதிப்பெரும்பான்மை கிடைத்துவிடும். 18-லும் வெற்றி என்றால், 88+8+1+18 = 115 ஆகிவிடும். தற்போது அ.தி.மு.கவிடம் இருப்பது 114 மட்டுமே. சபாநாயகரைச் சேர்த்தால், 115. இத்தகைய சூழலில், சுயேச்சையாக நிற்கும் அ.ம.மு.க-வின் தினகரனுக்கு மரியாதை கூடிவிடும். அப்படியொரு ஆபத்து இருப்பதால்தான், சொத்தைக் காரணத்தைச் சொல்லி மூன்று தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை நடத்தாமல் தடைபோட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு வளைகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை. இன்னும் நான்கைந்து தொகுதிகளிலும் திட்டமிட்டே வெளிப்படையாக பணத்தை அள்ளிவிட்டு, ‘பண விளையாட்டு’ என்கிற பெயரில் தேர்தலை நிறுத்தி வைக்கும் உள்ளடி வேலைகளும் நடப்பதாகக் கேள்வி.

@வடபழனி ஆர்.கே.எஸ்.மகேஷ், சென்னை.
நான்கு சீட்கள் வாங்குவதற்காகவா இந்த அலப்பறை?


சேச்சே... நான்கு சீட்களுக்காகவா இத்தனை அலப்பறை செய்வார்கள்!

@இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி
டி.டி.வி.தினகரனின் ‘மாஸ்டர் பிளான்’ நாடாளுமன்றத் தேர்தலில் ஒர்க்அவுட் ஆகுமா?


யு மீன் R-20?

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வி.ஸ்ரீனிவாசுலு, சி.ரவிக்குமார்

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை,
சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism