Published:Updated:

`பட்டாசுத் தொழிலுக்கு தனி தீர்மானம் தேவையில்லை!' - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து

`பட்டாசுத் தொழிலுக்கு தனி தீர்மானம் தேவையில்லை!' - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து
`பட்டாசுத் தொழிலுக்கு தனி தீர்மானம் தேவையில்லை!' - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து

`பட்டாசுத் தொழிலுக்கென தனியாக தீர்மானம் இயற்ற வேண்டியதில்லை. முதல்வர் போராடி நல்ல முடிவை பெற்றுத் தருவார்' என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அப்போது கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறும்போது, ``தமிழக பட்ஜெட் என்பது தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியது போல ஏட்டுச்சுரக்காய் அல்ல. அது கூட்டுச்சுரக்காய். நடிகர் கமலஹாசனுடன் கூட்டணி வைப்பதற்கு ஆட்கள் இல்லை. அவரது கட்சிப் பொதுக்குழுவில் 15 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். தேர்தல் என்று வந்தால் திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 கட்சிகள் தான் களத்தில் நிற்கும். வேறு கட்சிகள் எதுவும் இல்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வேட்பு மனு மட்டுமே தாக்கல் செய்துள்ளார். வேறு முடிவு எதுவும் எடுக்கவில்லை. இதுபற்றி முதல்வரும், துணை முதல்வரும் தான் முடிவு எடுப்பார்கள்.

பட்டாசுத் தொழில் குறித்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் வர உள்ளது. அப்போது நல்ல தீர்ப்பு கிடைக்கும். முதல்வர் இதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பட்டாசுத் தொழிலுக்கு சட்டப் பேரவையில் தனியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை. தமிழக முதல்வர் போராடி நல்ல முடிவை பெற்றுத் தருவார்'' என தெரிவித்தார்.