Published:Updated:

``தினகரன் காதில் பூ கன்பார்ம்!’’ - எம்.பி.வைத்திலிங்கம் ஆருடம்

நாடாளுமன்ற தேர்தலில் தினகரனுக்கு மக்கள் காதி பூ வைப்பார்கள்.ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்கு தமிழக முதலமைச்சரால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.தற்போது அப்பல்லோ நிர்வாகம் விசாரணைக்கு தடை கேட்டு எதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளது என்று தெரியவில்லை என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்

``தினகரன் காதில்  பூ கன்பார்ம்!’’ - எம்.பி.வைத்திலிங்கம் ஆருடம்
``தினகரன் காதில் பூ கன்பார்ம்!’’ - எம்.பி.வைத்திலிங்கம் ஆருடம்

``நாடாளுமன்ற தேர்தலில் தினகரனுக்கு மக்கள் காதி பூ வைப்பார்கள்.ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்கு தமிழக முதலமைச்சரால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.தற்போது அப்பல்லோ நிர்வாகம் விசாரணைக்கு தடை கேட்டு எதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளது என்று தெரியவில்லை'' என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நாடளுமன்ற தேர்தல் குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலேசானை கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு எப்படி தேர்தல் பணிகள் ஆற்றிட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கி பேசியதாவது,கட்சியும்,ஆட்சியும் நம்மிடம் வந்து விடும் என சிலர் கூறிய யோசனையை கேட்டு பலர் அவர்கள் பக்கம் சென்றனர்.அவர்கள் எங்கு தி.மு.கவால் அளிக்கப்பட்டு விடுவோமோ என எண்ணி மீண்டும் அ.தி.மு.க.,விற்கு பலம் சேர்க்கின்ற வகையில் கட்சிக்கு  வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அவ்வாறு வந்தவர்களிடம் அனைவரும் நன்றாக பழக வேண்டும். வர நினைப்பவர்களை வரும் 20ம் தேதிக்குள்ளாக  நம்மிடம் கொண்டு வந்து இணைக்க வேண்டும். ஸ்டாலினும், தினகரனும் ஆட்சி கவிழந்து விடும்,அப்படி கவிழ்ந்து விட்டால், அ.தி.மு.க.,வை அழித்து விடலாம் என்று நினைத்தார்கள் ஆனால் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.ஜெயலலிதாவின் ஆன்மா நம்மை நன்றாக வழி நடத்திக்கொண்டு செல்லுகிறது அதனால் யார் நினைத்தாலும் அ.தி.மு.க,வை அழிக்க முடியாது.வரும் நாடளுமன்ற தேர்தலில் இந்தியாவை ஆளப்போகும் கட்சியை நிர்ணயம் செய்ய கூடிய கட்சியாக அ.தி.மு.க.,இருக்கும்.எனவே கூட்டணி அமையுமா, அமையாதோ என்பதை பற்றி எல்லாம் யாரும் சிந்திக்க வேண்டாம்.தேர்தலில் வெற்றி பெறுவதை பற்றி மட்டுமே சிந்தித்து பணியை தொடங்குகள் என்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,எல்லோரின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்கு தமிழக முதலமைச்சரால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.தற்போது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு தடை கேட்டு எதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளது என்று தெரியவில்லை.தினகரன் விரக்தியின் விளிம்பில் உள்ளார் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு மக்கள் காதில் பூ வைப்பார்கள். கூட்டணி குறித்து இன்னும் முடிவாகவில்லை. தி.மு.க.,அ.ம.மு.க எங்களுக்கு போட்டியில்லை அதே நேரத்தில் தமிழகத்தில் அ.தி.மு.கவிற்கு நிகராக எந்த கட்சியும் இல்லை'' என்றார்.