Published:Updated:

ஆந்திரா டு தமிழ்நாடு! - பிரதமர் மோடி வருகையும் விஸ்வரூபம் எடுத்த எதிர்ப்பு அலையும்

ஆந்திரா டு தமிழ்நாடு! - பிரதமர் மோடி வருகையும் விஸ்வரூபம் எடுத்த எதிர்ப்பு அலையும்
ஆந்திரா டு தமிழ்நாடு! - பிரதமர் மோடி வருகையும் விஸ்வரூபம் எடுத்த எதிர்ப்பு அலையும்

பிரதமர் நரேந்திர மோடியின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் `#GobackModi’  என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ். இது ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதே சமயம் #TNwelcomesModi என்னும் ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

ஆந்திரா டு தமிழ்நாடு! - பிரதமர் மோடி வருகையும் விஸ்வரூபம் எடுத்த எதிர்ப்பு அலையும்

ஒவ்வொரு முறையும் மோடி தமிழகத்துக்கு வரும்போது எதிர்ப்பு அலைகள் எழுவது வழக்கம். வீடுகளில் கறுப்பு கொடி கட்டி வைப்பது, கறுப்பு பலூன் பறக்கவிடுவது என விதவிதமாக மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வது வழக்கம். மேலும் இணையத்தில் `#GobackModi’ என்னும் ஹேஷ்டேக்கின் கீழ் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள். தமிழகம் மட்டுமில்லை ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களிலும் மோடி வருகைக்கு இதே அளவு எதிர்ப்பு அலைகள் எழுவது வழக்கம். `#GobackModi’ ஹேஷ்டேக்குக்கு எதிர்வினையாகப் பா.ஜ.க ஐ.டி விங்க்கை சேர்ந்தவர்கள் #TNwelcomesModi , #DMKfails  போன்ற ஹேஷ்டாக்குகளை ட்ரெண்ட் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இன்று அதிகாலையில் இருந்தே #GobackModi  அதிகம் ட்ரெண்டாகி வருகிறது. 

ஆந்திரா டு தமிழ்நாடு! - பிரதமர் மோடி வருகையும் விஸ்வரூபம் எடுத்த எதிர்ப்பு அலையும்



 

மோடி வருகை ஏன்?

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, 5 நாள்களில் 10 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மோடி திட்டமிட்டிருந்தார்.  அதே சமயம் அரசு நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் கலந்து கொள்கிறார். இன்று காலை ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி நகர் உருவாக்கப் பணிகள் அடிக்கல் நாட்டு விழாவுக்காக  மோடி ஆந்திரா  சென்றார். அங்கு அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தபடி காந்திய வழி போராட்டம் நடத்தப்பட்டது. மஞ்சள் மற்றும் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். ஆந்திரா முழுவதும் ஆங்காங்கே மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களும் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.  

ஆந்திரா டு தமிழ்நாடு! - பிரதமர் மோடி வருகையும் விஸ்வரூபம் எடுத்த எதிர்ப்பு அலையும்

ஆந்திரா டு தமிழ்நாடு..


ஆந்திர நிகழ்ச்சிகள் முடிந்ததும் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 12.55 மணிக்குப் புறப்படும்  மோடி,  மதியம் 2.35 மணிக்குக் கோவை வந்தடைவார்.  கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் வரும் அவர்,  மாலை 3.15 மணியளவில் பெருமாநல்லூர் வருகிறார். அங்கு அவருக்கு இரண்டு மேடைகள் போடப்பட்டுள்ளன. பா.ஜ.க தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்காக ஒரு மேடையும், அரசு  நிகழ்ச்சிக்காக மற்றொரு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே திருப்பூரில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. இணையத்திலும் நெட்டிசன்ஸ் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.