Published:Updated:

அ.தி.மு.க முடிந்து போன கட்சி! - பொளோர் வெற்றிவேல்

அ.தி.மு.க முடிந்து போன கட்சி! - பொளோர் வெற்றிவேல்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க முடிந்து போன கட்சி! - பொளோர் வெற்றிவேல்

அ.தி.மு.க முடிந்து போன கட்சி! - பொளோர் வெற்றிவேல்

அ.தி.மு.க முடிந்து போன கட்சி! - பொளோர் வெற்றிவேல்

அ.தி.மு.க முடிந்து போன கட்சி! - பொளோர் வெற்றிவேல்

Published:Updated:
அ.தி.மு.க முடிந்து போன கட்சி! - பொளோர் வெற்றிவேல்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க முடிந்து போன கட்சி! - பொளோர் வெற்றிவேல்
அ.தி.மு.க முடிந்து போன கட்சி! - பொளோர் வெற்றிவேல்

ரண்டாம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது அ.ம.மு.க. பெரியதாகக் கூட்டணி சேர்க்காமல், எஸ்.டி.பி.ஐ-யை மட்டும் வைத்துக்கொண்டு சுயபரிசோதனையில் இறங்கியிருக்கிறார், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். பரபரப்பான தேர்தல் அரசியலுக்கு இடையே, தினகரனின் தளபதிகளில் ஒருவரும், சென்னை வடக்கு மாவட்டச் செயலாளருமான வெற்றிவேலிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

“கட்சி தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. எப்படி உணர்கிறீர்கள்?”

“ஓராண்டு முழுவதும் போராட்டக் களம்தான். அம்மா உயிருடன்தான் இருந்தார் என்று வீடியோ ஆதாரம் வெளியிட்டதற்காக என்மீது வழக்குப் பாய்ந்தது. அடுத்து, எடப்பாடி பழனிசாமியின் நெடுஞ்சாலைத் துறை ஊழலை  வெளியிட்டதற்காக, இன்னொரு வழக்கு போட்டார்கள். எடப்பாடி, பன்னீரின் ஆட்டம் இந்தத் தேர்தலுடன் முடிந்துவிடும்.”

அ.தி.மு.க முடிந்து போன கட்சி! - பொளோர் வெற்றிவேல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பொதுவாகவே, ‘நீங்கள் பிரிக்கும் அ.தி.மு.க வாக்குகளால் தி.மு.க லாபம் அடைகிறது. நீங்கள் தி.மு.க-வின் ‘பி’ டீம்’ என்கிறார்களே?”

“பி.ஜே.பி-யின் ‘ஏ’ டீம் அ.தி.மு.க; ‘பி’ டீம் தி.மு.க. வாஜ்பாய் மறைவுக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு பி.ஜே.பி தலைவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லையா? அவரின் மருமகன் சபரீசன் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்தவில்லையா? இந்தத் தேர்தலில், நாங்கள்தான் நெம்பர் ஒன். தி.மு.க உட்பட அனைத்துக் கட்சித் தொண்டர் களின் வாக்குகளும் அ.ம.மு.க-வுக்குதான்.”

“பி.ஜே.பி-க்கு எதிராக விமர்சனத்தை முன்வைக்கிறீர்கள். ஆனால், கடந்த குடியரசுத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்தானே நீங்கள்?”

“பிரதமர் ஆதரவு கேட்டதாக தம்பிதுரை கூறினார். அன்றைய தினம் காவிரிப் பிரச்னை, நீட் தேர்வு, மீனவர் பிரச்னை என்று நிறைய விஷயங்களில் மத்திய அரசின் உதவி தேவைப்பட்டது. அதேசமயம், அன்று நாங்கள் எதிர்த்து வாக்களித்திருந்தாலும், எதிர் தரப்பு வெற்றியடையப்போவதில்லை. அதனால், அன்று அந்த நிலைப்பட்டை எடுத்தோம். இன்று அப்படியல்ல. ‘நான் உயிருடன் இருக்கும்வரை பி.ஜே.பி-யுடன் கூட்டணி கிடையாது’ என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் தினகரன்.”

“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் போட்டியாளர் யார்?”

“நிச்சயமாக தி.மு.க-தான். அ.தி.மு.க எங்கள் லிஸ்ட்டிலேயே இல்லை. அது முடிந்துபோன கட்சி. இந்த ஆட்சிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்த ராமதாஸுடனும், ‘37 எம்.பி-க்கள் என்ன செய்தார்கள்?’ என்று விமர்சித்த பிரேமலதா விஜயகாந்துடனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ளார்கள். கருணாநிதியை வைகோ பேசாத பேச்சா? அவரோடு கைகோத்துள்ளார் ஸ்டாலின். கம்யூனிஸ்ட்டுகள் தி.மு.க-வுடன் அணி சேர்ந்துவிட்டதால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது? தன் சொந்தக் கட்சியினரிடம் கூட, நம்பிக்கையில்லாத தலைவராகத்தான் ஸ்டாலின் பார்க்கப்படுகிறார். கீழ்மட்டத்தில் தி.மு.க - காங்கிரஸ் இடையே இணக்கம் இல்லை. விடுதலைச் சிறுத்தைகளை தி.மு.க-வுக்கு உள்ளேயே யாரும் விரும்பவில்லை. அம்மா, கருணாநிதி இல்லாத இந்தத் தேர்தலில் எல்லாக் கட்சிகளுமே புதிய கட்சிகள்தான். ஆட்டம் முதலிலிருந்து ஆரம்பிக்கப்போகிறது.”

“ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமானத் தொகையை இறக்க ஆளுங்கட்சி முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?”

“ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். மக்கள் வாங்கிக்கொண்டு எங்களுக்குத்தானே ஓட்டு போட்டார்கள். பணத்துக்காக வாக்களிப்பது மலையேறிவிட்டது. இந்த ஆட்சிமீது மக்களுக்குக் கோபம் இருக்கிறது. டி.டி.வி.தினகரனை நல்ல தலைமையாகப் பார்க்கிறார்கள். 

“18 தொகுதி இடைத்தேர்தலில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட நீங்கள் அனைவரும் போட்டியிடுகிறீர்களா?”

“யார் போட்டியிட வேண்டும் என்பதைத் தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும். எங்களில் பெரும்பாலானோர் போட்டியிடுகிறோம் என்பதை மட்டும் சொல்ல முடியும். அத்தனை தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றிவாய்ப்புப் பிரகாசமாக உள்ளது.” 

“பொள்ளாச்சி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ விசாரணை என்று தமிழக அரசு வேகம் காட்டியுள்ளதே?”

“பொறுப்பில்லாத அரசு இது. சி.பி.ஐ., மத்திய அரசின் வசமிருக்கிறது. அதைவைத்துத் தேர்தல் முடியும்வரை நாள் கடத்த நினைக்கிறார்கள்.

ஆளும் தரப்பின் அழுத்தம் இல்லாமல் விசாரணை நடைபெற வேண்டுமென்றால், பி.ஜே.பி ஆளாத அண்டை மாநில அரசின் காவல்துறையைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். ஜெயக்குமாரின் ஆடியோ வெளியான அன்றே, அவரது அமைச்சர் பதவியைப் பறித்திருந்தால், இன்று பொள்ளாச்சி ஜெயாராமனுக்கு இந்தத் தைரியம் வந்திருக்குமா? நீங்கள் தவறு செய்யவில்லையென்றால், பதவியைத் துறந்துவிட்டு வெளிப்படையான விசாரணையை ஏற்க வேண்டியதுதானே? அம்மா உயிருடன் இருந்திருந்தால், இந்நேரம் இருவரின் பதவியும் பறிபோயிருக்கும்.”

“இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீடு விசாரணையை மார்ச் 25-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உங்களுக்கு சாதகமானத் தீர்ப்பு கிடைக்கவில்லையென்றால், உங்கள் அடுத்த நடவடிக்கை என்ன?”

“18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வெவ்வேறு சின்னங்கள் கொடுத்தாலும் கவலையில்லை. நாங்கள்தான் ஜெயிக்கப்போகிறோம். அதற்கான வியூகமும், மக்கள் ஆதரவும் எங்களிடம் இருக்கிறது.”

- ந.பொன்குமரகுருபரன்
படம்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism