Published:Updated:

பிட்ஸ்... பிட்ஸ்... பிட்ஸ்...

பிட்ஸ்... பிட்ஸ்... பிட்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ்... பிட்ஸ்... பிட்ஸ்...

பிட்ஸ்... பிட்ஸ்... பிட்ஸ்...

பிட்ஸ்... பிட்ஸ்... பிட்ஸ்...

பிட்ஸ்... பிட்ஸ்... பிட்ஸ்...

Published:Updated:
பிட்ஸ்... பிட்ஸ்... பிட்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ்... பிட்ஸ்... பிட்ஸ்...
பிட்ஸ்... பிட்ஸ்... பிட்ஸ்...

மிழகத்திற்கான பி.ஜே.பி-யின் முதல்வர் வேட்பாளர் என்று அழைக்கப்பட்ட நிர்மலா சீதாராமன், கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட எதிலும் பங்கேற்கவில்லை. காஷ்மீர் நிலவரத்தை, இதற்குக் காரணமாகச் சொல்கிறார்கள். ஆனால், நடந்தது வேறு... நிர்மலாவுக்கு தடா போட்டது அ.தி.மு.க தலைமைதானாம். அவரைத் தவிர்க்கும்படி அ.தி.மு.க மேலிடம் தரப்பில், பி.ஜே.பி  தலைமையிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாம். காரணம், அவரின் அணுகுமுறை இங்குள்ள சீனியர் அமைச்சர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை. சமீபத்தில் அரசு விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்னை வந்தார் நிர்மலா சீதாராமன். அவரை வரவேற்க தமிழக அரசின் குறிப்பிட்ட துறை அதிகாரிகள் சென்றிருந்தனர். லாபியில் அவர்களிடம் நிறையக் கேள்விகள் கேட்டாராம். ‘வரவேற்கத்தான் வந்தோம். விவரங்களை எடுத்துவரவில்லை’ எனப் பணிவுடன் பதில் சொல்லியுள்ளனர். ‘ஸோ கால்டு அமைச்சர்கள் எங்கே?’ என அமைச்சர்களை வறுத்தெடுத்துவிட்டாராம். இதனால்தான் இந்த தடாவாம்!

சென்னை வருமானவரித்துறை முதன்மை ஆணையர் (விசாரணை) பதவியில் இருந்தவர் சுசீ பாபு வர்க்கீஸ். இவர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதியுடன் ஓய்வுபெற்றார். கடந்த காலத்தில் தமிழகத்தில் வி.வி.ஐ.பி-க்களை மையமாகவைத்து நடந்த அனைத்து ஐ.டி ரெய்டுகளுக்கும் தீவிரமாகச் செயல்பட்டவர், கடைசி நேரத்தில் நாமக்கல் கிறிஸ்டி நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றத்தில் காட்டப்பட்ட துரிதகதியைப் பார்த்து அதிர்ச்சியானாராம். அவருக்குப் பிறகு, அந்தப் பதவியில் இதுவரை யாரையும் நியமிக்கவில்லை. தற்காலிகமாக அந்தப் பதவியை இன்னோர் அதிகாரி கவனித்து வருகிறார். கேரள மாநிலம் சென்றுவிட்ட சுசீயை, விரைவில் டெல்லிக்கு அழைக்கப்போகிறார்களாம். இந்தியா முழுவதும் ரெய்டுகளை திட்டமிடும் வருவாய் துறையின்கீழ் வரும் வாரியத்தின் முக்கியப் பொறுப்பில் அவரை நியமிக்கும் யோசனை மத்திய அரசுக்கு இருக்கிறதாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிட்ஸ்... பிட்ஸ்... பிட்ஸ்...

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் பதவியில் இருக்கும் அட்சயக்குமாரின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் முடிகிறது. தமிழகத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஜூலை முதல் தேதி ஓய்வுபெறுகிறார். கிரிஜாவுக்குத்தான் அந்தப் பதவி என்று சென்னை கோட்டையில் பேச்சு. ஐந்து வருடங்கள்வரை புதிய பதவியில் அவர் தொடரலாம்.

பிட்ஸ்... பிட்ஸ்... பிட்ஸ்...

மிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர், உறுப்பினர் பதவிக்குக் கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் நீதிபதிகள், ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் என்று சுமார் 200 பேர் ரேஸில் இருந்தனர். தேர்வு கமிட்டியினர் 16 பேரைச் சிபாரிசு செய்துள்ளனர். வரும் ஜூன் மாதம் ஓய்வுபெறவுள்ள தமிழகச் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யான டி.கே. ராஜேந்திரன், தலைவர் பதவியில் நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

- ஆர்.பி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism