Published:Updated:

“ஜெ. இருந்திருந்தால் ஜெயராமனை நீக்கியிருப்பார்!” - கொந்தளிக்கும் கே.சி.பி...

“ஜெ. இருந்திருந்தால் ஜெயராமனை நீக்கியிருப்பார்!” - கொந்தளிக்கும் கே.சி.பி...
பிரீமியம் ஸ்டோரி
“ஜெ. இருந்திருந்தால் ஜெயராமனை நீக்கியிருப்பார்!” - கொந்தளிக்கும் கே.சி.பி...

“ஜெ. இருந்திருந்தால் ஜெயராமனை நீக்கியிருப்பார்!” - கொந்தளிக்கும் கே.சி.பி...

“ஜெ. இருந்திருந்தால் ஜெயராமனை நீக்கியிருப்பார்!” - கொந்தளிக்கும் கே.சி.பி...

“ஜெ. இருந்திருந்தால் ஜெயராமனை நீக்கியிருப்பார்!” - கொந்தளிக்கும் கே.சி.பி...

Published:Updated:
“ஜெ. இருந்திருந்தால் ஜெயராமனை நீக்கியிருப்பார்!” - கொந்தளிக்கும் கே.சி.பி...
பிரீமியம் ஸ்டோரி
“ஜெ. இருந்திருந்தால் ஜெயராமனை நீக்கியிருப்பார்!” - கொந்தளிக்கும் கே.சி.பி...

பொள்ளாச்சி விவகாரம் அ.தி.மு.க கூட்டணியையே கிடுகிடுக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில், அந்தக் கட்சியில் புதிதாக இணைந்துள்ளதாகச் சொல்லப்படும் முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமியின் அதிரடி விமர்சனங்கள், அ.தி.மு.க-வையே நடுநடுங்க வைத்துக்கொண்டிருக் கின்றன. சமீபத்தில், ‘பொள்ளாச்சி ஜெயராமன் பதவி விலக வேண்டும்’ என்று ‘சேம் சைடு கோல்’ அடித்திருக்கும் கே.சி.பழனிசாமியைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ஜெ. இருந்திருந்தால் ஜெயராமனை நீக்கியிருப்பார்!” - கொந்தளிக்கும் கே.சி.பி...

“அ.தி.மு.க-வில் நீங்கள் இணைந்துவிட்டதாகச் சொல்கிறீர்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, நீங்கள் இணையவில்லை என்கிறார். எதுதான் உண்மை?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அ.தி.மு.க-வில் நான் இணைந்துவிட்டேன் என்பதுதான் உண்மை. அதை, ஏன் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்க மறுக்கிறார்கள், அதன் உள்நோக்கம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை.’’

“நீதிமன்றத்தில், ‘கட்சியின் விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதே செல்லாது’ என்று வழக்குத் தொடுத்த நீங்களே, அதே நிர்வாகிகளின் ஒப்புதலுடன் இப்போது கட்சியில் இணைந்திருப்பது முரணாக இல்லையா?’’

‘‘அப்படி இல்லை... ‘கட்சி விதிகளில் திருத்தம் செய்து புதிய நிர்வாகப் பதவிகளை உருவாக்கியது தவறு; மேலும், பொதுச்செயலாளர் பதவிக்கான நபரை, கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்ற அ.தி.மு.க-வின் அடிப்படை விதிகளைக் காக்க வேண்டும்’ என்றுதான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன். எனவே, பொதுச்செயலாளர் இல்லாத சூழ்நிலையில், தலைமைக் கழக நிர்வாகிகளாக உள்ள பொருளாளர் ஓ.பி.எஸ்., தலைமை நிலையச் செயலாளர் ஈ.பி.எஸ் ஆகியோர் கட்சி முடிவுகளை எடுக்கலாம் தானே...’’

“அப்படியென்றால், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை வாபஸ் பெறுவீர்களா?’’

‘‘தனிப்பட்ட ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் என்ற இருவருக்கும் எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்யவில்லை. கட்சியின் அடிப்படை விதிகளைத் திருத்தம் செய்ததற்கு எதிராகத்தான் வழக்குத் தொடுத்திருக்கிறேன். எனவே, ஒருபோதும் அந்த வழக்கை வாபஸ் வாங்க மாட்டேன்!’’

“கட்சியில் இணைந்துவிட்டதாகக் கூறும் நீங்கள், தொடர்ந்து கட்சிக்கு எதிராகப் பேசிவருகிறீர்களே?’’

“ஜெ. இருந்திருந்தால் ஜெயராமனை நீக்கியிருப்பார்!” - கொந்தளிக்கும் கே.சி.பி...

“பொள்ளாச்சி ஜெயராமன் பதவிவிலக வேண்டும் என்று நான் கூறியதைத்தானே குறிப்பிடுகிறீர்கள். பொள்ளாச்சி சம்பவத்தில் நூற்றுக் கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், இந்நேரம் பொள்ளாச்சி ஜெயராமனைக் கட்சியிலிருந்தே நீக்கியிருப்பார். ஆனால், ‘அம்மாவின் வழியில் ஆட்சி செய்கிறோம்’ என்று கூறிக்கொள்பவர்கள், பொள்ளாச்சி ஜெயராமனின் எம்.எல்.ஏ பதவியையும் கட்சிப் பதவியையும் ராஜினாமா செய்யச் சொல்லியாவது வற்புறுத்தியிருக்க வேண்டாமா? இதேநிலை நீடித்தால், தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு எந்தளவுக்கு இது பாதகத்தை ஏற்படுத்தும் என்பது தெரியாதா?’’

“இவ்விவகாரத்தில், ‘அ.தி.மு.க-வில் உள்ளவர்களேகூட கோஷ்டி மோதல் காரணமாக பொள்ளாச்சி ஜெயராமன்மீது திட்டமிட்டுக் களங்கம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள்’ என்றெல்லாம் பேசப்படுகிறதே?

“யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதெல்லாம் விசாரணைகளில் தான் தெரியவரும். அதுவரை கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், ‘பொள்ளாச்சி ஜெயராமன், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்கிறேன். காவிரி விவகாரத்தில் நான் ஒரு கருத்துச் சொன்னேன் என்பதற்காக என்னைக் கட்சியைவிட்டே நீக்கினார்கள். ஆனால், இந்த விவகாரத்தில், பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களுக்கு சம்பந்தம் இருப்பதாகச் செய்திகள் வெளியான பிறகுதான், கூடுதலாக திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது?’’

“தவறு செய்பவர்களுக்குத்தான் பதவிஉயர்வு கிடைக்கும் என்கிறீர்களா?’’

‘‘டாஸ்மாக்கை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணின் கன்னத்தில் அறைந்த டி.எஸ்.பி பாண்டியராஜனுக்கு, கோவை மாவட்ட எஸ்.பி பதவி பரிசாக வழங்கப்படுகிறது. காவல்துறையும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விவரத்தை வெளியிட்டுவிட்டு, தெரியாமல் நடந்துவிட்டது என்கிறது. சி.பி.ஐ விசாரணை கோரி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படித்துவரும் கல்லூரியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. அப்படியென்றால், இதன் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன... யாராவது இதுகுறித்து மேலும் புகார் செய்தால், உங்களைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்துவோம் என்ற மறைமுக மிரட்டலாகவும் இருக்கலாம்தானே!’’

“சமீபத்திய சந்திப்பின்போது நீங்கள் கேட்ட எம்.பி சீட் மற்றும் பேரங்களை அ.தி.மு.க தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அந்தக் கோபத்தில்தான் நீங்கள் அ.தி.மு.க-வை விமர்சித்து வருவதாகவும் செய்திகள் கசிகின்றனவே?’’

“இது பொய். எம்.பி சீட் வேண்டுமென்று நான்  விருப்பமனு தாக்கல் செய்யவில்லையே. அந்தச் சந்திப்பின்போது, நான் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. அவர்களும் என்னிடம் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை.’’

- த.கதிரவன்
படம்: தே.அசோக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism