Published:Updated:

“பதவியை பர்சேஸ் செய்து விட்டார்!” - ராமநாதபுரம் முஸ்லிம் லீக் சர்ச்சை...

“பதவியை பர்சேஸ் செய்து விட்டார்!” - ராமநாதபுரம் முஸ்லிம் லீக் சர்ச்சை...
பிரீமியம் ஸ்டோரி

ராமநாதபுரம் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கியதால், தொகுதியை எதிர்பார்த்திருந்த தி.மு.க-வினர் அதிருப்தியில் உள்ளனர். மூத்த நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு, கொரியர் நிறுவன உரிமையாளரான நவாஸ் கனியை வேட்பாளராக அறிவித்ததால், முஸ்லிம் லீக் கட்சிக்குள்ளும் அதிருப்தி எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக முதலில் தி.மு.க-வினரிடம் பேசினோம். “கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தொழில் அதிபரான ஜலீல் என்பவர் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டார். ஆனால், அவரைக் கட்சியினரும், மக்களும் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் ம.ம.க சார்பில் ஜவாஹிருல்லா ராமநாதபுரம் தொகுதியில் நிறுத்தப்பட்டார். அவரும் தோல்வியடைந்தார். அதனால்தான், ‘இந்தத் தேர்தலில் தி.மு.க-வே போட்டியிட வேண்டும்; அதுவும் உள்ளூர் வேட்பாளர்களுக்குத்தான் வாய்ப்பளிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், ராமாநாதபுரம் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கியதாக அறிவித்தார்கள். தொடர்ந்து இதே தவற்றைச் செய்வதால், இது அ.தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடும்’’ என்றார்கள்.

“பதவியை பர்சேஸ் செய்து விட்டார்!” - ராமநாதபுரம் முஸ்லிம் லீக் சர்ச்சை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது, “கட்சியில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், சீட் வாங்குவதற்காகவே முஸ்லிம் லீக்கில் சேர்ந்த கொரியர் நிறுவன உரிமையாளர் நவாஸ் கனிக்கு தொகுதியை ஒதுக்கியது அதிர்ச்சியாக உள்ளது. இதன் பின்னணியில் பெரிய பேரம் நடந்திருக்கிறது. தொழிலதிபர்களை மக்கள் அணுகுவது கஷ்டம். காலம் முழுவதும் இந்த இயக்கத்தில் செயல்படுகிறவர்கள் அடிமட்டத்திலேயே இருக்கிறார்கள். பதவி என்று வரும்போது, ஒரு தொழிலதிபர், பதவியை பர்சேஸ் செய்துவிடுகிறார். அதுவும், அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்பாகவே, வேட்பாளர் அறிமுகத்தையும் சென்னையில் நடத்தியிருக்கிறார்கள்’’ என்றார்கள்.

முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் காதர் மைதீனிடம் பேசினோம். ‘‘ராமநாதபுரம் தொகுதியில் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது. கூட்டணிக் கட்சியினர் எங்களுக்கு ஒத்துழைப்புத் தருவார்கள். தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவும் எங்களுக்கு உரிமை உள்ளது. அதனால், இது தேவையற்ற கேள்வி’’ என்றவரிடம், ‘‘கட்சியில் நீண்டகாலமாக உள்ள நிர்வாகிகளுக்கு சீட் வழங்காமல், புதிதாகச் சேர்ந்த தொழிலதிபருக்கு வழங்கியுள்ளார்கள் என்று விமர்சனம் எழுந்துள்ளதே?” என்று கேட்டதற்கு, கோபப்பட்டுத் தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

வேட்பாளரான நவாஸ் கனியிடம் பேசினோம். ‘‘ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள குருவாடி கிராமத்தைச் சேர்ந்தவன் நான். தொழில்ரீதியாக வெளியூரில் வசித்தாலும், இனி ராமநாதபுரம் தொகுதியிலேயே தங்கிப் பணியாற்றுவேன். நான் கட்சிக்குப் புதியவன் அல்ல. 2011 முதல், கட்சியில் பணியாற்றி வருகிறேன். எனது கட்சிப்பணி மற்றும் சமுதாயப் பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமே இந்த வாய்ப்பு. எனது வெற்றியைத் தடுக்க எதிர்த் தரப்பினரால் உருவாக்கப்படும் தவறான தகவல்களைத் தகர்த்து நிச்சயம் வெற்றிபெறுவேன்’’ என்றார் நம்பிக்கையுடன்.

-
செ.சல்மான், இரா.மோகன், படம்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism