Published:Updated:

``தமிழக அரசின் இலவசத்துக்கு மட்டும் 18,000 கோடி செலவு’’ - அதிரவைத்த ஆர்.டி.ஐ !

``தமிழக அரசின் இலவசத்துக்கு மட்டும் 18,000 கோடி செலவு’’ - அதிரவைத்த ஆர்.டி.ஐ !
``தமிழக அரசின் இலவசத்துக்கு மட்டும் 18,000 கோடி செலவு’’ - அதிரவைத்த ஆர்.டி.ஐ !

மிழக அரசு இலவசப் பொருள்களுக்கு மட்டும் 18,000 கோடி செலவு செய்திருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. 

 சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் `அரசாங்கத்தின் இலவசப் பொருள்களுக்கு செய்யப்படும் செலவு தொகைக் குறித்த விவரம் கேட்கப்பட்டிருந்தது. குறிப்பாக, 2006-லிருந்து கலர் டிவி, மடிக் கணினி, கிரைண்டர், மிக்சி, இருசக்கர வாகனம் போன்ற இலவசப் பொருள்களுக்காக அரசாங்கம் செய்யும் ஒட்டு மொத்த செலவீனம் எவ்வளவு எனக் கோரியிருந்தது

. அதற்கு அரசுத் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட பதிலில் ஒட்டு மொத்தமாக 18,000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது கூறியுள்ளது. குறிப்பாக, 2006-லிருந்து இலவச கலர் டிவி திட்டத்தை தி.மு.க அரசு தான் கொண்டு வந்தது. அந்தத் திட்டம் 2012 வரை நிறுத்தப்பட்ட நிலையில் அதற்கு மட்டும் 3,000 கோடி செலவாகியுள்ளது.

அதே போன்று மிக்சி, கிரைண்டர், லேப்டாப், மின்விசிறி, சைக்கிள் போன்ற இலவச பொருள்களுக்கு கோடிக் கணக்கில் செலவாகியிருப்பதாகக் கூறியுள்ளது. இது குறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவில் உள்ள ஆர்வலர் ரங்கபிரசாத் பேசுகையில், தமிழக அரசின் கடந்த ஆண்டின் பட்ஜெட் கடன் தொகை 17,000 கோடி... ஆனால், இந்த ஆண்டு 19,000 கோடியாகக் கடன் தொகை உயர்ந்துள்ளது. அதற்குக் காரணம் பொங்கல் பரிசுத்திட்டம்தான்.பொங்கல் பரிசுத் திட்டத்துக்கு (1,000 ரூபாய் ) 2,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. தமிழக அரசு .கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட இலவசத் திட்டங்களோடு ஒப்பிடுகையில் குறுகிய காலத்தில் செலவு செய்துள்ள இலவசத் திட்டம் பொங்கல் பரிசுத் திட்டம்... டிவி, மிக்சி போன்ற இலவசத் திட்டங்களால் மக்களை மறைமுகமாக கவர பார்த்தனர்... ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள 1,000 ரூபாய் பொங்கல் பரிசுத்திட்டம் பணத்தை நேரடியாகக் கொடுத்து எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் எனச் சொல்லாமல் திட்டத்தை மிக சைலண்டாக நிறைவேற்றியுள்ளனர்’’ என்றார்.