Published:Updated:

'அம்மா' பட்டம் தான் எனக்கு பெருமை: ஜெயலலிதா பெருமிதம்

'அம்மா' பட்டம் தான் எனக்கு பெருமை: ஜெயலலிதா பெருமிதம்
'அம்மா' பட்டம் தான் எனக்கு பெருமை: ஜெயலலிதா பெருமிதம்
'அம்மா' பட்டம் தான் எனக்கு பெருமை: ஜெயலலிதா பெருமிதம்

சென்னை: "எனது வாழ்க்கையில், போராட்டங்கள் நிறைந்த வாழ்கையில், எத்தனையோ பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.  ஆனால் கிடைத்தற்கரிய பெரிய பேறாக நான் கருதுவது எல்லோரும் வாய் நிறைய "அம்மா" என்று அழைப்பதுதான்" என்று முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் கூறினர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், " இந்த அரசின் சாதனைகளை பாராட்டி, வாழ்த்தி பேசியவர்களின் பொன்மொழிகள் எனக்கு மேலும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளன. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சட்டமன்ற கட்சித் தலைவர்கள் எல்லாம் இந்த அரசின் செயல்பாடுகளையும், திட்டங்களையும் பாராட்டி, வாழ்த்தி பேசியதற்கு எனது இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது வாழ்க்கையில், போராட்டங்கள் நிறைந்த வாழ்கையில், எத்தனையோ பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.  ஆனால் கிடைத்தற்கரிய பெரிய பேறாக நான் கருதுவது எல்லோரும் வாய் நிறைய "அம்மா" என்று அழைப்பதுதான்.

##~~##
வயது என்னவாக இருந்தாலும், அனைவரும், பெரியவர்கள், இளையவர்கள், குழந்தைகள் அனைவருமே என்னை அம்மா என்று அழைப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். எல்லோருக்கும் நல்ல அம்மாவாக இருந்து கடமை ஆற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.  அம்மாவின் அன்பு தன்னலமற்ற அன்பு, சுயநலம் இல்லாத அன்பு. தமிழக மக்கள் நலனே என் நலன் என்று கூறி, தமிழக மக்களுக்கும், இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி" என்றார் ஜெயலலிதா.