எம்.மகேஷ், அச்சரப்பாக்கம்.
தனித்துப் போட்டியிடுவதன் மூலமாக டி.டி.வி. தினகரன் தன் பலத்தை நிரூபித்துக்காட்டுவாரா?

தன் எதிரிகளை பலவீனப்படுத்திக்காட்டுவார்.

@துடுப்பதி வெங்கண்ணா, பெருந்துறை.
குறிப்பிட்ட ஒரு பொருள் பத்து கம்பெனிகளின் தயாரிப்பிலும் வெளியாகிறது. அத்தனை நிறுவனங்களுமே, ‘நாங்கள்தான் இந்தியாவில் நெம்பர் ஒன்’ என விளம்பரம் செய்கின்றன. இதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது?

விளம்பரத்தை வைத்து முடிவுக்கு வரமுடியாது. விற்பனை அடிப்படையில் வேண்டுமானால், யார் முதலிடம் என்பதைக் கண்டறியமுடியும். இதற்காகச் சம்பந்தப்பட்ட 10 நிறுவனங்களின் முதலீடு, உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட அனைத்துப் புள்ளிவிவரங்களும் தேவைப்படும். ஆனால், இவையெல்லாம் எளிதில் தனிநபர்களுக்குக் கிடைத்துவிடாது. விளம்பரம், விற்பனை இதையெல்லாம் தாண்டித் தரம்தான் முக்கியம். ‘தரத்தில் நெம்பர் ஒன்’ என்று விளம்பரப்படுத்தினால், அதை நாம்தான் கண்டுபிடித்து முடிவெடுக்க முடியும். இல்லையென்றால், அந்தப் பொருள்களை உரிய ஆய்வகத்துக்கு அனுப்பிப் பரிசோதித்து முடிவெடுக்கலாம். இது கொஞ்சம் செலவுபிடிக்கும் வேலை. அதேசமயம், ஆய்வக முடிவுகளும் நூறு சதவிகிதம் உண்மையாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நம்பிக்கைதானே வாழ்க்கை!

‘மேட்டுப்பாளையம்’ மனோகர், கோவை.
பிளாஸ்டிக் ஒழிப்புக்கு மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது?

வழக்கம்போல மக்கள் ஒத்துழைப்புக் கொடுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், கண்டுகொள்ள வேண்டியவர்களோ... ஹெல்மெட், டிரைவிங் லைசென்ஸ், கள்ளச்சாராயம் போல இதையும் ‘வசூல் இயந்திரம்’ என்று மாற்றிவிடவே... கிட்டத்தட்ட இந்த முயற்சியே வீணாகிவிடுமோ என்று கவலையாக இருக்கிறது. ஒருவேளை, இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தவர்களின் ‘நோக்கம்’ நிறைவேறிவிட்டதோ... என்னவோ!

@சுஹைல், பரங்கிப்பேட்டை.
அரசியல்வாதிகளுக்குக் கட்டாய ஓய்வுச் சட்டத்தை அமல்படுத்தலாமா?

கண்டிப்பாக அமல்படுத்தியே ஆகவேண்டும். பாவம், வாரிசுகள்... ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போன பிறகு’ ரொம்பவே அவஸ்தைப்படுகிறார்கள்.

தாமரை நிலவன், கீழ்கட்டளை, சென்னை.
ஒரு மாத காலத்துக்குள் தமிழகத்துக்கு மூன்று முறை பயணம் மேற்கொண்டுவிட்டாரே பிரதமர் மோடி?

இப்போது அவருக்குத் ‘தேவை’ இருக்கிறது. மூன்று முறை என்ன, முந்நூறு முறைகூட வருவார்.

@காந்தி லெனின், திருச்சி.
பொள்ளாச்சி சம்பவம் பற்றி பி.ஜே.பி கருத்து ஏதும் கூறவில்லையே?

‘வாயடைத்து’ப் போயிருக்கும்போது வார்த்தைகளுக்கு வழி ஏது!

@பி.எஸ்.எ.ஜெய்லானி, கடையநல்லூர்.
காவல்துறை பாதுகாப்பு, தடியடி, பொதுமக்களுக்குச் சிரமம்... இவற்றை எல்லாம் தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி டிக்கெட்களை விற்பனை செய்யலாமே?

டிக்கெட் கவுன்ட்டரில் மணிக்கணக்கில் காத்திருப்பது; போலீஸ் வந்து அடிதடி நடத்துவது; ரசிகர்கள் தெறித்து ஓடுவது; வீதிகளில் செருப்புகளை விசிறியடிப்பது; தண்ணீர் பாட்டில்கள், தொழில் நிறுவனங்களின் துண்டுப் பிரசுரங்கள் எல்லாம் சாலை முழுக்கச் சிதறிக் கிடப்பது... இப்படியெல்லாம் பரபரப்பைக் கிளப்பினால்தானே கூடுதலாக விளம்பரம் கிடைக்கும், மேற்கொண்டு கூட்டமும் குவியும்.

கே.பாலு, வேர்க்கிளம்பி.
நடிகை கோவை சரளா, ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் வேட்பாளர் நேர்காணல் குழுவில் இடம்பெறும் அளவுக்குத் தகுதி படைத்தவரா?

‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ என்று யாரையாவதுத் தேர்வுக் குழுவில் சேர்த்திருக்க லாமே மிஸ்டர் கமல்ஹாசன்.

@செங்கை. சாந்தஷீலா, ஒதியடிக்காடு.
பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய ‘பார்’ நாகராஜ் திருமண விழாவில் முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் அனைவருமே முன்பு பங்கேற்றுள்ளனர். இதன் பிறகும் நம் சகோதரிகளுக்கு நீதிகிடைக்கும் என்று நம்பமுடியுமா?

முதலில், சமூக வலைதளங்களின் வீச்சு எந்த அளவுக்கு ஒரு விஷயத்தைத் தவறாகத் திசை திருப்பவும் செய்கிறது என்பதற்கு உங்களின் கேள்வியே ஓர் உதாரணம். இதுதொடர்பாக உலாவும் ஒரு வீடியோவை வைத்துத்தான் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். உண்மையில் அது பொள்ளாச்சி ஜெயராமன் மகளின் திருமண வீடியோ. அதைத்தான் ‘பார்’ நாகராஜ் திருமண வீடியோ என்று தவறாகப் பரப்புகின்றனர். இப்படித் திரித்து வெளியிடுவதன் நோக்கம், சம்பந்தப்பட்டவர்கள்மீது மக்களுக்கு இன்னும் கோபம் அதிகமாக வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால், அந்தச் செய்தியில் உண்மை இல்லை என்று தெரிந்தால், அதுவே பூமராங் ஆகி உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கவோ, அவர்கள் மீது அனுதாபம் ஏற்படவோ செய்துவிடும்.

பின்குறிப்பு: இதை வைத்தே ‘பார்’ நாகராஜ் போன்றவர்களுக்கு அ.தி.மு.க பெருந்தலைகளின் ‘அருளாசி’கள் இல்லை என்கிற முடிவுக்கும் வந்துவிட வேண்டாம்.

@தட்டார்மடம் சித்தர்ராஜ், திருநெல்வேலி.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகச் சொல்லிச் சொல்லியே மக்களை ஏமாற்றுவது நம்பிக்கைத் துரோகம்தானே?

ரஜினி நடித்து 2008-ல் வெளியான ‘குசேலன்’ திரைப்படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகராகவே நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில், “அதென்ன அரசியலுக்கு வர்றேங்கறீங்க, வரலைங்கறீங்க, ‘வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேங்’கறீங்க, ‘நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது’ங்கறீங்க, மீறி ஏதாவது கேட்டா, வானத்தை நோக்கிக் கைகாட்டுறீங்க. நீங்களும் குழம்பி, எங்களையும் எதுக்காகக் குழப்புறீங்க. நீங்க வர்றீங்களா, இல்லையானு தெளிவா சொல்லுங்க” என்று ஒரு கேள்வி வரும்.

அதற்கு, “நான் அரசியலுக்கு வர்றேன்... வரல அதைப் பத்தி உங்களுக்கு என்ன அக்கறை... உங்க வேலையைப் பாத்துட்டு போயிட்டே இருங்க. அந்த வசனமெல்லாம் ஒரு படத்துக்காக யாரோ எழுதினது. அதை நான் அந்தப் படத்துல பேசியிருக்கேன். அதை நீங்க உண்மையா எடுத்துக்கிட்டா நான் என்ன செய்ய முடியும்” என்று பதில் சொல்வார்.

இப்போது சொல்லுங்கள்... நம்பியது யார் குற்றம்?

@இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை எளிதாகப் பிடிக்கக்கூடிய வாய்ப்புகள் கையிலிருந்தும் தேர்தல் களத்தில் கனிமொழி குதித்ததன் பின்னணி?

மக்கள் மனதில் ‘முன்னணி’க்கு வரவேண்டும் என்பதுதான்!

ஆர்.முரளி, மணப்பாறை.
தேர்தல் விதிமுறைகளைக் காரணம் காட்டி அரசியல் தலைவர்களின் சிலைகளை எல்லாம் மூடுகிறது தேர்தல் ஆணையம். உதயசூரியன், இலை, மாம்பழம், கை, தாமரை, கோயில், மசூதி, சர்ச், சைக்கிள் இதுபோன்றவற்றை யெல்லாம் என்ன செய்வார்களாம்?

சீப்பை ஒளித்துவிட்டால், கல்யாணம் நின்றுவிடுமாம்...!

@பல்லவ மன்னன், நெல்லை.
தி.மு.க., அ.தி.மு.க-வில் ஏழைத் தொண்டன் எம்.பி., எம்.எல்.ஏ-வாக எல்லாம் ஆகவே முடியாதா?

என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். நேற்றைய ஏழைத் தொண்டர்கள்தானே இன்றைய டி.ஆர்.பாலு, பொன்முடி, துரைமுருகன், எ.வ.வேலு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் எல்லாம். நம்பிக்கையோடு காத்திருங்கள். காத்திருக்கும் நேரத்தில், ‘அமைதிப்படை’ படத்தில் சத்யராஜ்-மணிவண்ணன் காம்பினேஷன் காட்சிகளை அடிக்கடி யூடியூபில் போட்டுப் பார்த்து, காலை வாரும் கலையையும் கற்றுக்கொள்ளுங்கள்.

@சேகர் பாலசுப்பிரமணியன்.
தி.மு.க-வில் ஆறு, அ.தி.மு.க-வில் நான்கு என்று வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதெல்லாம் தலைமையே விரும்பி அளித்ததா அல்லது மிரட்டி வாங்கப்பட்டதா?

வேண்டி விரும்பி, மிரட்டி, அன்போடு, உரிமையோடு வழங்கப்பட்டது, வாங்கப்பட்டது!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!