Published:Updated:

`புலியைக் கூண்டில் அடைத்தால் பாசமாக இருக்குமா?’ - கருணாஸை கலாய்த்த ஓ.பி.எஸ்

`புலியைக் கூண்டில் அடைத்தால் பாசமாக இருக்குமா?’ - கருணாஸை கலாய்த்த ஓ.பி.எஸ்
`புலியைக் கூண்டில் அடைத்தால் பாசமாக இருக்குமா?’ - கருணாஸை கலாய்த்த ஓ.பி.எஸ்
`புலியைக் கூண்டில் அடைத்தால் பாசமாக இருக்குமா?’ - கருணாஸை கலாய்த்த ஓ.பி.எஸ்

பட்ஜெட் உரை மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய தமிமுன் அன்சாரி, `ஆபாசமாகவும் சட்ட ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகை செய்யும் டிக் டாக் செயலியை மத்திய அரசுடன் பேசி மாநில அரசு தடை செய்ய வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் மணிகண்டன், `தமிழக கலாசாரத்தை சீர்கெடுக்கும் வகையில் டிக் டாக் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ப்ளூவேல் விளையாட்டை தடைசெய்தது போன்று இதற்கும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி அதைத் தடை செய்ய  தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்' என உறுதி தெரிவித்தார். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பேசுகையில், `இந்த ஐந்து ஆண்டுகள் உங்களுடையதுதான். அடுத்து வரும் ஆண்டுகள் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஐந்தாண்டுகள் என்னுடைய ஆதரவு உங்களுக்கு இருக்கும். நான் முக்குலத்து புலி என்றாலும் பாசப்புலி' என்று பேசினார்.

`புலியைக் கூண்டில் அடைத்தால் பாசமாக இருக்குமா?’ - கருணாஸை கலாய்த்த ஓ.பி.எஸ்

இதற்கு அமைச்சர் செங்கோட்டையன், `புலிப்படையாக இருந்தாலும் எந்தப் படையாக இருந்தாலும் எங்களை எப்போதும் வெல்ல முடியாது' என்றார். தொடர்ந்து துணை முதல்வர், ஓ.பன்னீர் செல்வம், ``இந்தப் பாசப்புலி கூண்டுக்குள் அடைத்து வைத்தால் பாசமாக இருக்குமா’’ என்று கேட்க அவையில் சிரிப்பலை எழுந்தது.

தலைமைச் செயலகத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ``என்னுடைய தொகுதியில் அரசு சார்பாக வழங்கக்கூடிய தொகுதி நிதி தவிர, புது திட்டங்கள் ஏதாவது செய்தால் வாக்களித்த மக்களுக்கு உதவும் என்றேன். 7-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பாடத்திட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயர் முழுமையாக இல்லை. சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திக்கு அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்தார். எனது கோரிக்கையை ஏற்று முத்துராமலிங்க தேவர் என்று வரும் என அறிவித்தார். பிரதமர் மோடி, வெங்கைய நாயுடு, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், மிகப்பெரிய பதவில் இருக்கும் தலைவர்கள் தங்கள் பெயருக்கு பக்கத்தில் அடையாளங்களை இணைக்கும்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என பெயர் குறிப்பிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

`புலியைக் கூண்டில் அடைத்தால் பாசமாக இருக்குமா?’ - கருணாஸை கலாய்த்த ஓ.பி.எஸ்

அதுக்கு அடுத்தாற்போல, மருது சகோதரர்கள் தியாகம் போற்றப்பட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அரசு இடங்களில் தனி நபர் இது போன்ற தலைவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உள்ளது. சொந்தமாக நிலம் வாங்கினால் அனுமதி தருகிறேன் என்றார். அதுபோல பல கோரிக்கைகளை வைத்து நன்றி தெரிவித்தேன்.

முதல்வரும் துணை முதல்வரும் சில கேள்விகளை எழுப்பும்போது, நான் சொன்ன பதில், இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. அப்படியிருந்திருந்தால் நான் கூவத்தூருக்கு சென்றிருக்க மாட்டேன். ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. ஆனால், அரசியலைப் பொறுத்தவரை காலமும் நேரமும்தான் முடிவு செய்யும். அந்தக் காலத்தைப் பொறுத்து என் நிலைபாடு மாறும். இன்னைக்கு ஒரு பேச்சு, நாளைக்கு ஒரு பேச்சு  பேசும் சராசரி அரசியல்வாதி நானில்லை. நான் ஒரு சமுதாயவாதி. காரியம்தான் எனக்கு பெருசு. என் சமூகம் சார்ந்த நலன் எனக்கு முக்கியம். இந்த அரசின் மீது நான் வைத்த விமர்சனத்துக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அன்றைக்கு வைத்த விமர்சனம்தான் இன்றைக்கும். சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொடுத்தேன்; வாபஸ் வாங்குனேன். நான் சரண்டர் ஆகவில்லை. நான் முக்குலத்தோர் புலிப்படைக்குதான் தலைவன். நான் அரசியல்வாதியில்லை. சமுதாயவாதிதான். என் மக்களுக்காகத்தான் என் அரசியல்’’ என்றார்.