Published:Updated:

`டிக் டாக் செயலியைத் தடை செய்தால் மகிழும் நபர்களில் நான் முதல் ஆளாக இருப்பேன்!’ - தமிழிசை

`டிக் டாக் செயலியைத் தடை செய்தால் மகிழும் நபர்களில் நான் முதல் ஆளாக இருப்பேன்!’ - தமிழிசை
`டிக் டாக் செயலியைத் தடை செய்தால் மகிழும் நபர்களில் நான் முதல் ஆளாக இருப்பேன்!’ - தமிழிசை

டிக் டாக் செயலியைத் தடைசெய்தால் மகிழும் நபர்களில் நான் முதல் ஆளாக இருப்பேன் என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ``ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொள்வார். அதேபோல தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதில் தேசிய தலைவர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள். மேலும் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள கன்னியாகுமரி நிகழ்ச்சி 19-ம் தேதியிலிருந்து மார்ச் 1-ம் தேதிக்கு தள்ளிப்போயிருக்கிறது. அது திட்டமிடப்பட்டுதான் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திடீரென தள்ளி வைக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது. தி.மு.க காங்கிரஸ் கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி மெகா கூட்டணி உருவாகியுள்ளது என அவர்கள் கூறி வரும் நிலையில் அந்தக் கூட்டணியைத் தோற்கடிக்கும் வகையில் வலுவான கூட்டணியைப் பாரதிய ஜனதா கட்சி அமைக்கும். தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், தம்பிதுரை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்து அ.தி.மு.க-வின் கருத்துதான். தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவை தொகைகள் கண்டிப்பாக வந்து சேரும். அதற்காக பதினைந்தாவது நிதிக் குழுவிடமிருந்து சரியான அறிக்கை பெறப்படும்'' என்றார். தமிழக அரசு சார்பில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுவது குறித்த கேள்விக்கு, ``தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் டிக்டாக் செயலியை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியது வரவேற்கத்தக்கது.வரம்பு மீறி டிக்டாக் பதிவுகள் உள்ளது. டிக் டாக் செயலியைத் தடைசெய்தால் மகிழும் நபர்களில் நான் முதல் ஆளாக இருப்பேன்'' என்று பதிலளித்தார்.