Published:Updated:

`டிக் டாக் தடைக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இருதரப்பும் சட்டசபையில் ஆதரவு!’ - தமிமுன் அன்சாரி

`டிக் டாக்' செயலியைத் தடை செய்ய வேண்டுமெனச் சட்டசபையில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ கோரிக்கை வைத்ததை முன்னிட்டு அமைச்சர் மணிகண்டன் தடை செய்ய வலியுறுத்துவோம் என்றும் இதுகுறித்து மத்திய அரசிடம் பேசுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார். இது சமூக வலைதளங்களில் டிக் டாக் செயலிக்குத் தடை என்கிற ரீதியில் பரவி டிக்டாக் தேவையா, கூடாதா என உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிறது.

`டிக் டாக் தடைக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இருதரப்பும் சட்டசபையில் ஆதரவு!’ - தமிமுன் அன்சாரி

இதற்கான ஆரம்பப் புள்ளியாக இருந்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரியிடம் பேசினோம். ``எந்தவொரு அறிவியல் சாதனமும் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். அறிவை வளர்க்க வேண்டும். நாகரிகமான பொழுதுபோக்காக இருக்க வேண்டும். ஆனால் டிக் டாக் அப்படி இருக்கிறதா என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

சிறு குழந்தைகள் முதற்கொண்டு முதியவர் வரை அவர்களை ஆபாசமாக வழிநடத்துகிறது. இது ஆபத்தான போக்கு இல்லையா? டிக்டாக் குடும்ப அமைப்பை சிதைத்துக்கொண்டிருக்கிறது. இது எல்லோருக்கும் தெரியும். ஆனால், வெளிப்படையாக யாரும் பேசவில்லை. ஆனால், நான் தைரியமாகப் பேசினேன். அதனால்தான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பினரும் இதற்குச் சட்டசபையில் ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள். நிறைய சமூக சேவை அமைப்புகளில் இருந்தும் குடும்பங்களில் இருந்தும் எனக்கு வாழ்த்துகள் குவிந்துக் கொண்டிருக்கின்றன. நான் செய்தது நல்ல விஷயமாகவே பார்க்கிறேன்’’ என்றார்.