Published:Updated:

காடுவெட்டி குருவுக்கு 29ஆம் தேதி வரை காவல் நீடிப்பு!

காடுவெட்டி குருவுக்கு 29ஆம் தேதி வரை காவல் நீடிப்பு!
காடுவெட்டி குருவுக்கு 29ஆம் தேதி வரை காவல் நீடிப்பு!
காடுவெட்டி குருவுக்கு 29ஆம் தேதி வரை காவல் நீடிப்பு!

செங்கல்பட்டு: காடுவெட்டி குருவுக்கு 29ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மாமல்லபுரம் சித்திரை பெருவிழாவிற்கு பிறகு காடுவெட்டி குரு மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. அதில் 2012ஆம் ஆண்டு சித்திரை பெருவிழாவில் நேரம் கடந்து பேசியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது, வன்முறையை தூண்டியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

##~~##
குருவைத் தவிர அதே வழக்கில் கைதானவர்கள் அனைவருக்கும் ஜாமீன் கிடைத்து விட்டது. இந்த நிலையில்  பல்வேறு வழக்குகளோடு தேசிய பாதுகாப்பு சட்டமும் குரு மீது பாய்ந்தது. இந்த வழக்கில் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த குரு இன்று திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
நீதிபதி சிவா 29ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து, குருவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச்செயலாளர் கிட்டு, காடுவெட்டி குரு மீது தொடர்ந்த வழக்கின் ஜாமீன் மனு மீதான விசாரணை இதே கோர்ட்டில் நாளை வருகின்றது.
இதனால் நாளையும் அவர் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜராகக் கூடும். இந்த வழக்குகளில் ஜாமீன் கிடைத்தாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் இப்போதைக்கு வெளியில் வரமுடியாது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
-பா.ஜெயவேல்