Published:Updated:

கூட்டணியும் குஸ்திகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 அம்சங்கள்!

கூட்டணியும் குஸ்திகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 அம்சங்கள்!
கூட்டணியும் குஸ்திகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 அம்சங்கள்!

இந்த வார ஜூனியர் விகடன்: https://bit.ly/2SPBAN6

கூட்டணியும் குஸ்திகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 அம்சங்கள்!

"திருப்பூர் அரசு விழா முடிந்தபிறகு அரங்கேறிய காட்சிதான், எடப்பாடி பழனிசாமி தரப்பைப் பீதியடைய வைத்திருக்கிறது என்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துடன் பேசிக்கொண்டே, பிரதமருடன் பன்னீர்செல்வமும் சென்றுவிட்டார். ஆனால், எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் முதல்வர் பழனிசாமி சில நொடிகள் பரிதவித்து நின்றார். பிறகு, சபாநாயகர் தனபால்தான் வேறொரு வழியாக அவரை அழைத்துச் சென்றார். பிரதமரும் பன்னீர்செல்வமும் பத்து நிமிடங்கள் தனியே பேசியிருக்கிறார்கள்...''

"...திருமாவளவன், தி.மு.க கூட்டணியில் தொடர்வது சந்தேகம்தான். தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் பலரும், விடுதலைச் சிறுத்தைகள் இருப்பதால் நமக்கு பிற சமூக வாக்குகள் விழாமல் போகிறது என்று சமூக ரீதியான வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களுடன் ஸ்டாலினிடம் எடுத்து வைத்திருக்கிறார்களாம். நாடார், தேவர், கவுண்டர், வன்னியர் என நான்கு தரப்பு வாக்குவங்கிகள் சிதறிவிடும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதனால், பா.ம.க-வை உள்ளே இழுத்துக்கொண்டு, விடுதலைச் சிறுத்தைகளை வெளியே அனுப்பிவிடலாம் என்று வாதிட்டிருக்கிறார்கள்!"

- அதிமுக, திமுக கட்சிகளில் நடக்கும் கூட்டணி உள்ளரசியல் வேலைகளை 'பற்ற வைத்த பன்னீர்... தெறிக்கவிடும் திருமா! - கூட்டணி குஸ்தி' என்ற தலைப்பில் பிரித்து மேய்ந்திருக்கிறது மிஸ்டர் கழுகு பகுதி.  மேலும் படிக்க க்ளிக் செய்க....

கூட்டணியும் குஸ்திகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 அம்சங்கள்!

மோடிக்கு மதுரையைவிட திருப்பூரில் இவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கும் என்று பி.ஜே.பி தேசியத் தலைமை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் இந்து அமைப்புகள் வலுவாக உள்ள பகுதிகளில் முக்கியமானது திருப்பூர். 'திருப்பூரில் எந்தச் சச்சரவும் இருக்காது' என்று பி.ஜே.பி மாநிலத் தலைவர்கள் உறுதியளித்த காரணத்தால்தான், திருப்பூர் பொதுக் கூட்டத்துக்கே ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அளவுக்கு மீறிப்போகவே, பி.ஜே.பி தலைவர்கள் அனைவருக்குமே அதிர்ச்சிதான். மோடியும் பொதுக்கூட்டம் முடியும்வரை இறுக்கமான முகத்துடனேயே காணப்பட்டார்.

...தற்போது திருப்பூரில் கிளம்பிய மோடி எதிர்ப்பைக் காரணம் காட்டியே, தொகுதிப் பங்கீட்டில் கொங்கு மண்டலத் தொகுதிகளைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்று கொங்கு அமைச்சர் ஒருவர்தான், அ.தி.மு.க தலைமைக்கு ஐடியா கொடுத்திருக்கிறார். அதனால்தான் இந்த ஏற்பாடு. மேடையில் மோடியுடன் அமர்ந்திருந்த முதல்வரின் முகத்தில் வெளிப்பட்ட இடிச் சிரிப்பே இதற்கு சாட்சி என்றார்கள்.

- திருப்பூர் நிகழ்வையொட்டிய காட்சிகளை அரசியல் பின்புலத்துடன் நோக்குகிறது 'இறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி! - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி?' எனும் செய்திக் கட்டுரை.   மேலும் படிக்க க்ளிக் செய்க....

கூட்டணியும் குஸ்திகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 அம்சங்கள்!

"சிறையில் சசிகலா ஊதுபத்தி செய்வதாகச் சொல்லப்பட்டதே?"

> "அதுவும் தவறு. சிறையில் இப்போதுதான் பெண்கள் சுயதொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. எதுவுமே தெரியாமல், சசிகலா ஊதுபத்தி தயாரிக்கிறார் என்று எழுதிவிட்டார்கள்."

"சசிகலா விவகாரத்தில் மிரட்டல் எதுவும் வந்ததா?"

> "மிரட்டல்கள் இல்லாமலா... அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், சசிகலா விஷயத்துக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து எனக்கு வாழ்த்துக் கடிதங்கள் குவிகின்றன. அதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது. நூற்றுக்கணக்கான கடிதங்களைக் கைப்பட எழுதி பலரும் வாழ்த்தியது, மகிழ்ச்சி அளிக்கிறது. இவை எல்லாம் என்னை மேன்மேலும் நேர்மையுடனும் துணிச்சலுடனும் செயல்படத் தூண்டுகின்றன. கர்நாடகத்திலிருந்துகூட எனக்கு இந்த மாதிரிக் கடிதங்கள் வரவில்லை." 

- தேர்தல் நெருங்கும் நிலையில், சசிகலாவைச் சிறையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சிறையின் விதிகளை சசிகலா மீறியது குறித்த விசாரணை அறிக்கை, அதைச் சந்தேகத்துக்குள்ளாக்கி இருக்கிறது. இந்தச் சூழலில், சசிகலாவின் சிறை விதிமீறல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரியான (ஊர்காவல் மற்றும் குடிமைப் பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி) ரூபா உடனான "லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு சிக்கல்தான்!'' எனும் சிறப்புப் பேட்டி பல தகவல்களை கூறுகிறது.   மேலும் படிக்க க்ளிக் செய்க....

கூட்டணியும் குஸ்திகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 அம்சங்கள்!

திருச்சி மாவட்டத்தில் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றிய காவலர் சமீம்பானு, தமது காதலரைத் திருமணம் செய்து கொள்ள முடியாத சோகத்தில் தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு சம்பவமாக திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஜெயதேவ் - திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையக் காவலர் செண்பகம் ஆகியோரின் காதலில் சாதி குறுக்கே வந்ததால், ஜெயதேவ் விஷம் குடித்து உயிரிழந்தார். இப்போது செந்தமிழ்ச்செல்வி என்ற பெண் காவலர் காதல் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

...நம்மிடம் பேசிய காவலர்கள் சிலர், "வெற்றியின் அண்ணனும் அண்ணியும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். இருந்தாலும், செந்தமிழ்ச்செல்வி - வெற்றிவேலின் காதலைச் சாதியைக் காரணம் காட்டி எதிர்த்ததுடன், வெற்றிக்கும் வேறு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்தனர். இவ்வளவுப் பிரச்னைக்கும் காரணம் இதுதான்" என்றார்கள்..

- காதல் பிரச்னைகளால் காவல் துறையில் தொடரும் தற்கொலைகள் குறித்த பின்னணியை விசாரித்து சொல்லியிருக்கிறது 'தற்கொலைகளால் தடுமாறும் திருச்சி காவல்துறை!' எனும் செய்திக் கட்டுரை.   மேலும் படிக்க க்ளிக் செய்க....

கூட்டணியும் குஸ்திகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 அம்சங்கள்!

'ஏழு பேர் விடுதலையில் விருப்பம் இல்லையெனில், கருணைக் கொலை செய்துவிடுங்கள். மௌனமாக இருக்க வேண்டாம்' என்று கடிதம் எழுதி, கவர்னர் மாளிகையை அதிரவைத்திருக்கிறார், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன். இவரது கடிதத்துக்கு, கவர்னர் மாளிகையிலிருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'கவர்னருக்கு மனு அனுப்புவதை இத்துடன் நிறுத்திக்கொள்' என்று முருகனை மிரட்டியதாகச் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் சிறைத்துறை டி.ஐ.ஜி-யான ஜெயபாரதி.

... கவர்னர் எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பதால், ஏழு பேரும் கடுமையான மனஉளைச்சலில் உள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில், வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த ஜனவரி 31-ம் தேதி 14 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை கவர்னருக்கு எழுதியிருந்தார்...

- அந்தக் கடிதத்தின் விவரத்துடன், சிறையின் பின்புலத் தகவல்களையும் திரட்டித் தருகிறது 'முன்விடுதலையைத் தடுக்க கவர்னர் மாளிகை சூழ்ச்சி! - வேலூர் சிறையில் கதறும் முருகன்...' எனும் சிறப்புச் செய்திக் கட்டுரை.   மேலும் படிக்க க்ளிக் செய்க....

கூட்டணியும் குஸ்திகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 அம்சங்கள்!

கும்பகோணம் அருகே திருபுவனம் மேல துண்டிவிநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பா.ம.க-வில் நகரச் செயலாளராக இருந்தவர். திருபுவனத்தில் 'தமிழன் கேட்டரிங்க் சர்வீஸ்' என்ற பெயரில் சமையல் தொழில் செய்து வந்தார். சமையல் பணிக்கு ஆட்களைக் கூப்பிடுவதற்காக, பாகனாந்தோப்பு பகுதிக்கு கடந்த 5-ம் தேதி சென்றார். அப்போது நடந்த வாக்கு வாதத்துக்குப் பின்னர், அன்று இரவு கொல்லப்பட்டார் என்கிறார்கள்.

சமையல் வேலைக்கு ஆட்கள் கூப்பிடப்போன இடத்தில் நடந்த வாக்குவாதம், மதமாற்றச் சர்ச்சையாக மாறி, கொலையில் முடிந்திருக்கிறது.  கொலைக் குற்றம் தொடர்பாக எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 'அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்லர். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்' என்று குரல் எழுப்பியுள்ளது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு. 

- அந்த வாக்குவாதத்தின்போது உடன் இருந்தவர், ராமலிங்கத்தின் மனைவி, சம்பவத்தன்று ராமலிங்கத்துடன் சென்ற அவரின் மகன் ஷ்யாம் சுந்தர், சம்பந்தப்பட்ட மதப் பெரியவர்கள், தஞ்சாவூர் எஸ்.பி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவரான எம்.முஹம்மது இஸ்மாயில் ஆகியோரை விசாரித்து விரிவான பின்னணி தகவல்களைத் தருகிறது 'ராமலிங்கம் கொலைக்குக் காரணம் மதமாற்றமா? - மன்னிப்புக் கேட்ட பிறகும் கொலை!' எனும் க்ரைம் ஸ்டோரி.  மேலும் படிக்க க்ளிக் செய்க....

கூட்டணியும் குஸ்திகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 அம்சங்கள்!

பொட்டுலுப்பட்டிக்குள் நாம் நுழைந்தபோது, குண்டும்குழியுமான அந்தச் சாலையின் இருபுறங்களிலும் சிறுவர்கள் இயற்கை உபாதையைக் கழித்துக்கொண்டிருந்தார்கள். பொதுக் கழிப்பறை வேண்டும் என்பது இந்தக் கிராம மக்களின் இருபது ஆண்டுகாலக் கோரிக்கை. சமீபத்தில், அங்கு கழிப்பறை கட்டுவதென்று பேரூராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது. ஆனால், மக்களுக்கு வசதியான இடத்தில் கழிப்பறையைக் கட்டாமல், சுடுகாட்டில் கட்டியுள்ளனர். இதனால், கொதிப்பில் இருக்கிறார்கள் பொட்டுலுப்பட்டி மக்கள்.

'பொதுக் கழிப்பறை வேண்டுமென்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்த எங்களுக்கு இப்போது சுடுகாட்டில் போய் அதைக் கட்டியிருக்கிறார்கள்' என்று குமுறலுடன் நமக்குத் தகவல் தெரிவித்தனர் பொட்டுலுப்பட்டி மக்கள். உடனே அந்த ஊருக்குப் பயணமானோம். வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு மிக அருகே பொட்டுலுப்பட்டி அமைந்துள்ளது. இங்கு, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அந்த ஏழை எளிய மக்கள், பொதுக்கழிப்பறை வசதி இல்லாததால் இயற்கை உபாதைகளைக் கழிக்க அருகில் உள்ள காட்டுப் பகுதியிலும், வயல்வெளி களிலும் ஒதுங்குகிறார்கள். தெருவோரமாகவோ, சாலையோரமாகவோ சிறு குழந்தைகள் ஒதுங்குகிறார்கள். பெண்களின் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது. 

- கள நிலவர அவலத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறது ஜூ.வி. டீம். தவறவிடக்கூடாத செய்திக் கட்டுரை: "பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க!'' - 'ஸ்வச் பாரத்' போகாத பொட்டுலுப்பட்டி  மேலும் படிக்க க்ளிக் செய்க....

கூட்டணியும் குஸ்திகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 அம்சங்கள்!

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி கிணறு அமைந்துள்ள இடத்தில் கடந்த ஜனவரி 31-ம் தேதி காலையில் புனரமைப்பு என்கிற பெயரில் ஓ.என்.ஜி.சி அலுவலர்கள் பெரும் போலீஸ் படையுடன் குவிந்தனர். அப்போது அங்கு வந்த பேராசிரியர் ஜெயராமன், அவரது மனைவி சித்ரா மற்றும் ராஜு, கலையரசி, ஜெயந்தி ஆகியோர் மீது கொலை மிரட்டல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து, பேராசிரியர் ஜெயராமன், ராஜு இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு கதிராமங்கலம் மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்...

சிறிது காலம் கொஞ்சம் அமைதியாக இருந்த கதிராமங்கலம் மீண்டும் தகிக்கத் தொடங்கியிருக்கிறது. " 'மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்' என்று சொல்லிக்கொண்டே எங்கள் நலனுக்கு எதிராகச் தமிழக அரசு செயல்படுகிறது'' என்று கொந்தளிக்கிறார்கள் கதிராமங்கலம் மக்கள். - தற்போதைய கள நிலவரத்தை உள்ளது உள்ளபடி விசாரித்துச் சொல்கிறது 'நிம்மதியாக வாழவிடாதா இந்த அரசு... கொந்தளிக்கும் கதிராமங்கலம் மக்கள்!' எனும் செய்திக் கட்டுரை.   மேலும் படிக்க க்ளிக் செய்க....

இந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2tlQJHL

அடுத்த கட்டுரைக்கு