Published:Updated:

விழுப்புரம் மாவட்டத்தில் பேசுவதற்கு திருமாவளவனுக்கு திடீர் தடை!

விழுப்புரம் மாவட்டத்தில் பேசுவதற்கு திருமாவளவனுக்கு திடீர் தடை!
விழுப்புரம் மாவட்டத்தில் பேசுவதற்கு திருமாவளவனுக்கு திடீர் தடை!
விழுப்புரம் மாவட்டத்தில் பேசுவதற்கு திருமாவளவனுக்கு திடீர் தடை!

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக் கூட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்கள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மரக்காணத்தில் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடந்த 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறைகளில், இதுவரை 340 க்கும் அதிகமான பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக அங்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு தற்போது வரை அமலில் உள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக் கூட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்கள் பேசுவதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

##~~##
பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், அமைதியை நிலை நாட்டவும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம், கருத்தரங்கில் பேசுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, முன்னெச்சரிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.