Published:Updated:

`டிக்டாக் தலைமுறையை சுதந்திரமாக விடுங்கள்!' - நியூ ஜெர்ஸியிலிருந்து ராமசுப்பு...

`டிக்டாக் தலைமுறையை சுதந்திரமாக விடுங்கள்!' - நியூ ஜெர்ஸியிலிருந்து ராமசுப்பு...
`டிக்டாக் தலைமுறையை சுதந்திரமாக விடுங்கள்!' - நியூ ஜெர்ஸியிலிருந்து ராமசுப்பு...

'டிக்டாக்'கை தடைசெய்வதுகுறித்து, சட்டமன்றம் தொடங்கி சமூக வலைதளங்கள் வரை கடந்த சில வாரங்களாக விவாதங்கள் நடைபெற்றன.

அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவுசெய்துகொண்டிருக்க, பிரபல அரசியல் விமர்சகரும் ஆடிட்டருமான ராமசுப்பு, டிக்டாக் குறித்த தன்னுடைய கருத்தை அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்திலிருந்து நமக்குத் தெரிவித்தார். டிக்டாக், உலகம் முழுக்க எல்லா இடங்களிலும் இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் எட்டு கோடி பேர் அந்த அப்ளிகேஷனை டவுண்லோடு பண்ணி யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. டிக்டாக், இசை ரசனை கொண்டவர்களுக்கான செயலி. இளைஞர்கள் ஆர்வமுடன் அதைப் பயன்படுத்திவருகிறார்கள்.

அந்தக் காலத்துல ஒரு கேமரா முன்னாடி பேசற வாய்ப்பு, நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே கிடைச்சது. ஆனா இன்னைக்கு, எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்போது ஏன் தவறவிடணும். ப்ளு வேல் விளையாட்டைப் போன்று இது ஆபத்தானது ஒன்றுமில்லை. இளைஞர்களை அவர்கள் போக்கில் இருக்க விடுங்கள். டிக் டாக் அப்ளிகேஷனைத் தடைசெய்வதால் எதுவும் மாறிவிடாது. டிக்டாக் தடை செய்வது பற்றி யோசிப்பதை விட்டு, வேறு ஏதேனும் பயனுள்ள விஷயத்தை சிந்திக்க முடியுமான்னு பாருங்க. டிக்டாக் பற்றிய என்னுடைய கருத்து, மக்களிடையே பரவலாகப் போய் சேரணும்னுதான் கடுமையான பனிப்பொழிவையும் பொருட்படுத்தாம நியூ ஜெர்ஸியில இருந்து இந்தக் கருத்தைத் தெரிவிக்கிறேன்" என்றார்.