Published:Updated:

ராகுல் காந்தியின் வயநாடு டெஸ்ட்! - உற்சாக காங்கிரஸ்... அதிரும் மார்க்சிஸ்ட்

ராகுல் காந்தியின் வயநாடு டெஸ்ட்! - உற்சாக காங்கிரஸ்... அதிரும் மார்க்சிஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
ராகுல் காந்தியின் வயநாடு டெஸ்ட்! - உற்சாக காங்கிரஸ்... அதிரும் மார்க்சிஸ்ட்

டெல்லி பாலா

யலும், வனமும் நிறைந்த வயநாடு தொகுதி ஒரேநாளில் தேசமே உற்றுநோக்கும் வி.வி.ஐ.பி தொகுதியாகிவிட்டது. இங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறார்கள். மாறாக, மார்க்சிஸ்ட் கட்சியினரோ ராகுல் காந்தியை வறுத்தெடுத்துவருகிறார்கள்.

ராகுல் காந்தியின் வயநாடு டெஸ்ட்! - உற்சாக காங்கிரஸ்... அதிரும் மார்க்சிஸ்ட்

கேரளத்திலும் வயநாடு தொகுதியில் மட்டும் வேட்பாளர் யாரென்று அறிவிக்காமல் இருந்தது காங்கிரஸ். இதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியில், ‘ராகுல் போட்டியிட வேண்டும்’ என்ற கேரள காங்கிரஸ் கமிட்டியின் கோரிக்கை யும், எதிர்பார்ப்பும் அதிகமானது. ஒருவழியாக மார்ச் 30-ம் தேதி சனிக்கிழமை இரவு சோனியா காந்தியுடனான ஆலோசனைக்குப் பிறகு, வயநாடு டெஸ்டுக்கு ராகுல் காந்தி, ஓ.கே சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே, கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி 15 தொகுதிகள்வரை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ள சூழ்நிலையில், ராகுல் காந்தியின் இந்த முடிவால் இருபது தொகுதிகளையும் சுருட்டமுடியும் என்று நம்புகிறது காங்கிரஸ்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ராகுல் காந்தியின் வயநாடு டெஸ்ட்! - உற்சாக காங்கிரஸ்... அதிரும் மார்க்சிஸ்ட்

காங்கிரஸ் கட்சியின் எம்.ஐ.ஷாநவாஸ் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றிபெற்ற தொகுதி வயநாடு. ஷாநவாஸ் உடல்நிலை சரி இல்லாமல் சில மாதங்களுக்கு முன்பு இறந்ததால், இந்தத் தொகுதி காலியாக இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் முஸ்லிம் லீக், இந்தத் தொகுதியில் பலமாக இருப்பதால், லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது ராகுல் காந்திக்குப் பெரிய விஷயமாக இருக்காது. ராகுல் காந்தி வருகையால், கேரளத்தில் இருபது  தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளுவதுடன், எல்லை மாநிலங்களான தமிழகம், கர்நாடகத்திலும் கணிசமான தொகுதிகளில் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும் என்பது காங்கிரஸின் கணக்கு.

இதுதான் அங்குள்ள ஆளும் சி.பி.எம் கட்சியின் அச்சத்துக்கு முக்கியக் காரணம். ‘ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்’ என்ற கோரிக்கை வந்தபோதே முதலமைச்சர் பிரணாய் விஜயன் அதற்கு வெளிப்படையாக எதிர்ப்பைத் தெரிவித்தார். “ராகுல் காந்தி எதிர்ப்பது மோடியின் பி.ஜே.பி-யையா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையா?” என்ற கேள்வியை அவர் முன்வைத்தார். தற்போது, ராகுல் காந்தியின் அறிவிப்பு வந்தபிறகும் அதே கேள்வியை கேரள முதல்வர் எழுப்பியுள்ளார். மேலும், ‘எங்களது வேட்பாளரைத் திரும்பப் பெறப்போவதில்லை. ராகுல் காந்திக்கு எதிராகப் போட்டியிடுவோம்’ என்றும் கூறியுள்ளார் அவர். மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கைவசம் உள்ள இரண்டு தொகுதிகளிலும், காங்கிரஸ் வசமுள்ள நான்கு தொகுதிகளிலும் பரஸ்பரம் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று இரண்டு கட்சிகளும் சுயமாக ஒரு முடிவுக்கு வந்து, அறிவித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் வயநாடு டெஸ்ட்! - உற்சாக காங்கிரஸ்... அதிரும் மார்க்சிஸ்ட்

இதற்கிடையே சபரிமலை விவகாரத்தால், கேரளத்தில் சில தொகுதிகளைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்தில் முதன்முறையாகக் கால்பதிக்கலாம் என்று திட்டமிட்ட கேரள பி.ஜே.பி-க்கு ராகுல் காந்தியின் வருகையால் பெரும் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது. “ராகுல், வயநாட்டில் போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பலவீனம் வெளிப்பட்டுவிட்டது. ‘முஸ்லிம் லீக் கட்சி, செத்துப்போன குதிரை’ என்று நேரு கிண்டலடித்தார். இன்று அதே நேருவின் குடும்பம் முஸ்லிம் லீக்கின் கால்பிடித்து வயநாட்டில் போட்டியிடும் நிலை ஏற்பட்டிருக் கிறது. இதுவே காங்கிரசுக்குப் பெரிய தோல்வி தான்” என்கிறார் பி.ஜே.பி மாநிலத் தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை.

அதேநேரம் பி.ஜே.பி கூட்டணியும் வயநாட்டில் வேட்பாளரை மாற்ற முடிவு செய்துள்ளது. பி.ஜே.பி மாநிலங்களவை உறுப்பினரான நடிகர் சுரேஷ் கோபியை அங்கு வேட்பாளராக நிறுத்தலாமா என்றும் ஆலோசனையைத் தொடங்கியுள்ளனர். ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் இஸ்லாமியர்கள் வசிக்கும் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்ததைச் சுட்டிக்காட்டும் பி.ஜே.பி., அதன்மூலம் வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்து வாக்குகளை ஒன்று சேர்க்கும் முயற்சியையும் தொடங்கியுள்ளது.

தேசிய அளவில் பல மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள இடதுசாரி தலைவர் களுக்கு, ராகுல் காந்தியின் வயநாடு வருகை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக் கிறது. ‘கேரளத்தில் மட்டும்தான் சி.பி.எம் சற்று வலுவாக இருக்கிறது. அதையும் ஒழிக்கும் வேலையை காங்கிரஸ் செய்கிறது’ என்பது இடதுசாரி சிந்தனையாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

- ஆர்.சிந்து