Published:Updated:

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

‘சரக்கு’ பத்து ரவுண்டு... துப்பாக்கிச்சூடு ஒன்பது ரவுண்டு! 
                             
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (காவல்) மேற்பார்வையாளராக ஹரியானாவைச் சேர்ந்த ஹேமந்த் கால்சன் ஐ.ஜி-யை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அரியலூர் சர்க்கியூட் ஹவுஸில் தங்கியிருந்த இவர், மார்ச் 30-ம் தேதி பின்னிரவு 1.30 மணிக்கு ‘தமிழகக் காவல்துறையினர் கொடுக்கும் பாதுகாப்பு போதவில்லை; சாப்பாட்டில் சிக்கன் நன்றாகவே இல்லை’ என்று அருகிலிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென்று, அவரது பாதுகாவலரின் துப்பாக்கியைப் பிடுங்கி, சடசடவென ஒன்பது ரவுண்டுகள் வானத்தை நோக்கிச் சுட்டார். உடனே அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடினார்கள். அதன்பின்பு அவர் படுத்துத் தூங்கிவிட்டார். இதுகுறித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸார் கூறுகையில், “சரக்கு ஓவரா அடிச்சிக்கிட்டிருந்தார். ‘பத்து ரவுண்டு தாண்டிருச்சு. போதுங்க’ன்னு அட்வைஸ் பண்ணதுக்கு, ‘பத்து இல்லை... ஒன்பது ரவுண்டுதான் அடிச்சேன்’னு சொன்னவரு, ‘இந்தா, எத்தனை ரவுண்டுன்னு எண்ணிக்கோ’ன்னு துப்பாக்கியைப் பிடுங்கி ஒன்பது ரவுண்டு சுட்டார்” என்றார்கள். இதைத் தொடர்ந்து பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஹரியானாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட கால்சன் மீது 336-ம் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது!

பறந்துவந்த செருப்பு... கடிந்துகொண்ட முதல்வர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரத்தநாட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது உப்புண்டார்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் முதல்வரை நோக்கிச் செருப்பை வீசினார். செருப்பு அவர்மேல் படாமல் வேனின்மீது விழுந்தது. இதை எடப்பாடி கவனிக்கவில்லை. ஆனால், இதைப் பார்த்த அ.தி.மு.க-வினர் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். முதல்வர் அருகில் நின்றுகொண்டிருந்த வைத்திலிங்கமோ, செருப்பை உடனே எடுத்தால், அசிங்கமாகிவிடும் என்று நினைத்து, செருப்பை முதல்வர் பார்க்காதபடி மறைத்து நின்றார். சிறிது நேரத்தில், செருப்பு வீசப்பட்டத் தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்துக் கோபம் அடைந்த எடப்பாடி, “என்ன வைத்தி... தொகுதியை இப்படி வெச்சிருக்கீங்க?” என்று கடிந்துள்ளார். வைத்தி எவ்வளவு சமாதானப்படுத்தியும் சமாதானம் ஆகவில்லையாம் எடப்பாடி!
                                                                                      
பொள்ளாச்சியைக் கலக்கும் கமல் வீடியோ!

பொள்ளாச்சிப் பாலியல் விவகாரம் தொடர்பாக, மய்யம் விசில் செயலியில் புகார்கொடுத்தார் மூகாம்பிகா. இதைத்தொடர்ந்து அவரையே வேட்பாளராக அறிவித்து விட்டார் கமல். விஜய் நடித்த, ‘தெறி’ படத்தில், பாலியல் குற்றம்செய்த வில்லனின் மகனைக் கொலைசெய்து பாலத்தில் தலைகீழாகத் தொங்க விடுவார்கள். இந்தக் காட்சியைப் பொள்ளாச்சிப் பாலியல் வழக்குடன் இணைத்துக் கமலும், பொள்ளாச்சி மக்களும் பேசுவதைப்போல மாற்றியுள்ளார் மூகாம்பிகா. “அவங்க எல்லாம் பெரிய இடத்து ஆளுங்க. நான் ஒரு சாதாரண வாக்காளன். நான் என்ன பண்ண முடியும்?” என்று பொள்ளாச்சி மக்கள் கேட்பதுபோல எடிட் செய்துள்ளனர். அதற்குக் கமல், “சரி, நீங்க ஒரு கட்சிக்குத் தலைவராக இருக்கீங்க. அப்ப என்ன பண்ணு வீங்க?” என்று கேட்க, “இந்தப் பிரச்னையை வெளிக்கொண்டுவந்த மூகாம்பிகா மேடத்தை வேட்பாளராக அறிவித்து, அவரை வெற்றிபெற வைத்து, அதிகாரம் கொடுத்து அதன் மூலம் தண்டிப்பேன்” என்று மக்கள் சொல்ல, “போய் எங்க வேட்பாளர் யார் என்று பாருங்கள்” எனக் கமல் சொல்வது போல வீடியோவைத் தயாரித்துள்ளனர். கடைசியாக, மூகாம்பிகா வாக்குக்கேட்பதுபோல முடிகிறது அந்த வீடியோ.

கவிழ்க்கும் ஐடியா?

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தி.மு.க ஒன்றியச் செயலாளர் பழனியாண்டி, “பிரசாரத் துண்டறிக்கைகள் கொடுத்தால் மட்டும் போதாது, துட்டை அள்ளிக் கொடுக்கணும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட என்னிடம் ஐம்பது லட்சம் ரூபாய் இருந்திருந்தால், நிச்சயம் வெற்றி பெற்று இருப்பேன்”என்று ஆதங்கத்துடன் பேசினார். அதைக்கேட்டுப் பதறிய நேரு, “ஜெயிக்க ஐடியா கொடுக்கிறதா நெனச்சு, கவிழ்க்கப் பாக்குறியா? தேர்தல் கமிஷனில் இருந்து  வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கிறாங்கய்யா” என்றதும் கூட்டம் கலகலத்தது.


வேட்பாளரைப் பேசவிடும் கமல்!

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தென்சென்னையில், மக்கள் நீதி மய்ய வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரங்கராஜன் என்பவரை கமல்ஹாசன் நிறுத்தியிருக்கிறார். தி.நகரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தின்போது, இரண்டு நிமிடங்கள் மட்டுமே கமல் பேசினார். பின்னர், வேட்பாளரிடம் மைக்கைக் கொடுத்துப்பேசச் சொன்னார். வேட்பாளரோ பத்து நிமிடம்வரை பேசினார். பொறுமையாக வேட்பாளருடன் நின்று கொண்டிருந்தார் கமல். வழக்கமாக அரசியல் தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது தலைவர்கள்தான் பேசுவார்கள், வேட்பாளர்கள் வெறுமனே கும்பிட்டபடி வருவார்கள். ஆனால், அந்த மரபை உடைத்து வேட்பாளருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் கமல்!

ஆப்சென்ட் கோகுல இந்திரா; அப்செட் பா.ம.க.!

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

த்திய சென்னை தொகுதியில், அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளர் சாம் பால் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியின் பொறுப்பாளராக அ.தி.மு.க தரப்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா நியமிக்கப்பட்டிருக் கிறார். கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மட்டும் தலை காட்டிய கோகுல இந்திரா அதன்பின்னர் பிரசாரம், பொதுக்கூட்டம் என எதற்கும் தலைகாட்டவில்லையாம். இதனால், சுறுசுறுப்பாகப் பணியாற்றும் வேறு ஒரு பொறுப்பாளரை நியமிக்கும்படி பா.ம.க நிர்வாகிகள்  மேலிடத்தில் சொல்லிவருகிறார்களாம். எனவே, இறுதிக்கட்டப் பிரசாரத்துக்குள் கோகுல இந்திரா  மாற்றப்படுவார் என்கிறார்கள்.

“கேப்டன் பாட்டுக்கு ஆட மாட்டீங்களா?”

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

ஞ்சாவூர், மாரியம்மன் கோயில் பகுதியில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு வாக்குக்கேட்டு பிரசாரம் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவர் வருவதற்கு முன் நடனக் கலைஞர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாடல்களுக்கு நடனமாடித் தொண்டர்களை குஷிபடுத்திக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த தே.மு.தி.க தொண்டர் சிலர், “எங்க கேப்டன் நடித்த பாடல்களுக்கு ஆட மாட்டீங்களா,  நாங்க உங்க கூட்டணியில்தானே இருக்கோம்” என்று உரிமைக்குரல் எழுப்பினர். இதைக்கேட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், ‘‘விஜயகாந்த் பாட்டுக்கும் ஆடுங்கள்’’ என்று நடனக் கலைஞர்களிடம் உத்தரவிட்டனர். அதன்பிறகு ‘நீ பொட்டு வைத்த தங்கக் குடம்... ஊருக்கு நீ மகுடம்’ என்ற விஜயகாந்த் படப்பாடலுக்கு கலைஞர்களின் குத்தாட்டம் புழுதியைக்கிளப்ப... ஒருவழியாகச் சமாதானம் ஆனார்கள் கேப்டனின் தொண்டர்கள்.

நெகிழ்ந்த வாசன் குடும்பத்தினர்

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

றைந்த ஜி.கே.மூப்பனாரின் தம்பியும், ஜி.கே வாசனின் சித்தப்பாவுமான ரெங்கசாமி  மூப்பனாரின் 10-வது நாள் நினைவு தினம் மார்ச் 31-ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் தஞ்சாவூர் பகுதியில், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுந்தரபெருமாள் கோயில் அருகே உள்ள த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வீட்டுக்குத் திடீர் விசிட் அடித்தார். அங்கே ரெங்கசாமி மூப்பனாரின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியவர், ஜி.கே வாசன் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். வீடு தேடிவந்து ஆறுதல் கூறிய முதல்வரைப் பார்த்து ஜி.கே.வாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நெகிழ்ந்துவிட்டனர்!

‘வாக்குகள் விற்பனைக்கல்ல!’ நாடோடி குழுவினரின் ‘நச்’ அறிவிப்பு...

எலெக்‌ஷன் எக்ஸ்பிரஸ்

நோட்டுக்கு ஓட்டு என்ற நிலை புரையோடிப்போயிருக்கிறது. இந்தச் சூழலில் நெல்லை மாவட்டம் வள்ளியூர்  பூங்கா நகர் பகுதியில் வசிக்கும் நாடோடி இனத்தைச் சேர்ந்த 150 பேர், தங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் இடத்தில், ‘ஓட்டு எங்கள் உரிமை. ஓட்டுக்காகப் பணம் தராதீர்’ என ஃப்ளெக்ஸ் போர்டு வைத்துள்ளனர். அதில், ‘ஒரு சாண் வயிற்றுக்காகக் கையேந்துவோமே தவிர, ஓட்டுரிமையை விற்கமாட்டோம். விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். பணத்துக்காக ஓட்டுரிமையை விற்பவர்கள் நாங்கள் அல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளனர். ஊசி, பாசி விற்பனைசெய்து வாழ்க்கையை நடத்தும் நாடோடி சமூகத்தினரின் இந்த மன உறுதியையும், மான உணர்ச்சியையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டிவருகிறார்கள்!

- ஜூ.வி டீம்