Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

ஓவியம்: அரஸ்

தேர்தல் நெருங்க நெருங்க, ‘எல்லாரையும் பயமுறுத்துறது இடி, அந்த இடிக்கே டப்பிங் கொடுக்குறது நம்ம மோடி’ ரக ஃபார்வேர்டுகள் வரிசைகட்டுகின்றன. கடந்தத் தேர்தலில், இவை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகின. ஆனால், இப்போது ஜனங்களுக்கு சூதுவாது தெரிந்து விட்டதால், உஷாராகி விட்டார்கள். ஆனாலும், சளைக்காமல் அனுப்பிக் கொண்டே இருக்கிறது பி.ஜே.பி-யின் டெக் டீம். நமக்கும் அப்படிக் கிடைத்த சில ஃபார்வேர்டுகள்...

ஐடியா அய்யனாரு!

• கடந்த யோகா தினத்தன்று மாண்புமிகு மோடி பாறையில் மிதப்பது உள்ளிட்ட அரிய பல ஆசனங்களை செய்துக்காட்டினார். தீரா முதுகுவலியால் அவதிப்பட்டுவந்த பார்சிலோனா கால்பந்து வீரர் மெஸ்ஸி ஆர்வமிகுதியில் அதை முயற்சிசெய்து பார்க்க, உடனே முதுகுவலி தீர்ந்தது. உடனே, விளையாடத் தொடங்கிய அவர் சமீபத்தில் ஹாட்ரிக் கோலும் அடித்தார். ஆட்டநாயகன் விருது வாங்கியவுடன் மெஸ்ஸியே சொன்ன தகவல் இது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• ஜோதிடத்தில் அதீத நம்பிக்கையுடைய கானா அதிபர், ஒருமுறை பூமியின் ஜாதகத்தை ஆராய்ந்தபோது அதில், முப்பது ஆண்டுகள் கழித்து ஒரு மகான் ‘சகலமும் செல்லாது’ என்ற மாபெரும் திட்டத்தை அறிவித்து புரட்சிசெய்வார். காலத்துக்கும் வரலாறு அதைச் சொல்லும் - எனத் தெரியவந்தது. அப்படியான பெயர் தனக்கு மட்டுமே வரவேண்டும் என நினைத்து அவர் 1984-லேயே டிமானிடிசேஷனை அறிவித்தார். ஆனாலும், மோடியைவிட அவருக்குக் குறைவானத் தோல்வியே கிடைத்தது! 

• ‘நாளுக்கு ஒரு நாடு, எனக்கு அடிக்காதே போரு’ திட்டத்தின்கீழ் மோடி ஜி 2015-ல் சிலி நாட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கிருக்கும் கல்புகோ எரிமலை வெடிப்பதற்குத் தயாராக இருந்தது. அந்நாட்டு அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்த நிலையில், ‘இங்க பாரு தம்பி! குபீர் குபீர்னு பொங்குறதெல்லாம் பி.ஜே.பி தலைவருங்க வேலை, நீ அதுக்கு சரிப்படமாட்ட’ என மோடி ஜி, தட்டிக்கொடுத்தவுடன் சாந்தமடைந்தது எரிமலை. உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது!

• காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸில் ஸ்டார்க் குடும்பத்துக்கும் லானிஸ்டர் குடும்பத்துக்கும் பகை ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே உச்சக்கட்ட மோதல் நடைபெறவிருந்த நிலையில், ஆட்சி மாற மோடி ஜி பிரதமரானார். ‘நான் இருக்குறப்பவே போரா?’ என்று மோடி ஜி உறும... இரு குடும்பங்களும் பயந்துபோய் சமாதானமாகின. ‘மோடி, அவர்கள் பக்கம் இருக்கிறார்’ எனத் தெரிந்தவுடன் பொது எதிரிகளான ஒயிட் வாக்கர்ஸும் சமாதானமடைந்துவிட்டார்கள். ஒன்பது ஆண்டுகளாக இவர்களுக்குள் நிலவிவந்த பகை, மோடி ஜி-யின் முயற்சியால் இந்த ஆண்டு முடிவடைந்தது.  

இதெல்லாம் உண்மையா பொய்யான்னே தெரியாத அளவுக்கு உழைக்கிறதுதான் பி.ஜே.பி டெக் டீமோட பலமே!