Published:Updated:

``பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” - பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

``பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” - பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
``பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” - பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

புல்வாமா தற்கொலைப்படை தாக்குதல், இந்தியாவைத் தாண்டி உலக நாடுகளையும் உலுக்கியுள்ளது. ``பயங்கரவாதத்தை வேரறுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்” என்ற குரல்கள் வேகமெடுத்துள்ளன. 

``பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” - பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார், முதல்வர் அமரீந்தர் சிங். அவையில் அவர் நிகழ்த்திய உரையில், ``பொறுத்தது போதும். பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் கட்டத்தை எல்லாம் தாண்டிவிட்டோம். இப்போது, பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆம், எல்லாமே எல்லை மீறிவிட்டது. இனிமேலும் நாம் அமைதியாக இருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க வழிவகுத்தவர்களாவோம். இனிமேலேனும், பாகிஸ்தானின் மனவோட்டத்தை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். தக்க பதிலடி கொடுக்கவேண்டும்” என்று கொந்தளித்தார். 

தொடர்ந்து பேசியவர், ``பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், குருநானக் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்போவதாக கேள்விப்பட்டேன். அதாவது, ஒரு பக்கம் சீக்கியர்களிடம் பரிவுடன் நடந்துகொள்வதைப் போல காட்டிக்கொண்டு, மறுபக்கம் இந்திய மக்களை கொல்கிறார்கள். இப்படி, இரட்டை வேடம் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது பாகிஸ்தான். அவர்களின் பிரதமர் இம்ரான் கான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பேசுகிறார். ஆனால், அவர்களின் ராணுவ தளபதி ஜாவத் பாஜ்வா போர்வேண்டும் என்று விரும்புகிறார். இந்தியாவுடன் அமைதிப்போக்கை கடைப்பிடிப்பது தான் பாகிஸ்தானின் முடிவு என்றால், ஏன் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கின்றன?  

``பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்” - பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

பாகிஸ்தானில் இம்ரான் கான் பெயரளவுக்கு மட்டுமே பிரதமராக இருக்கிறார். மொத்த அதிகாரமும் ராணுவ தளபதி பாஜ்வாவிடமே இருக்கிறது. ஐ.எஸ்.ஐ அமைப்பும் அவரது கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டு வருகிறது. பஞ்சாபி பின்னணியில் இருந்துவந்த பாஜ்வாவுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் பஞ்சாப் பகுதியில் எதையேனும் செய்யும் திட்டம் வைத்திருந்தால்,  நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், நாங்களும் பஞ்சாபி தான்” என்று எச்சரித்தார்.

சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமரீந்தர் சிங், ``புல்வாமா தாக்குதலால் கர்தார்பூர் வழித்தடத் திட்டத்தில் எந்த பின்னடைவும் ஏற்படாது” என்றார். மேலும், ``ஐ.எஸ்.ஐ அமைப்பால் தூண்டிவிடப்படும் காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம். அதை முறியடிப்போம்” என்றும் கூறினார்.