Published:Updated:

ரங்கசாமி் பதவி விலகக் கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ரங்கசாமி் பதவி விலகக் கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ரங்கசாமி் பதவி விலகக் கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி பதவி விலக்க கோரி  புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரங்கசாமி் பதவி விலகக் கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசு பதவியேற்று இன்றுடன் இரண்டாண்டை கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்த நிலையில், கடந்த இரண்டை ஆண்டுகால வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ரங்கசாமி பதவி விலக்க கோரி புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு உள்பட்ட 30 சட்டமன்ற தொகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, மத்திய அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ரங்கசாமி் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

##~~##
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் மின்சாரம், பால், பஸ் கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரேஷன் கடைகளில் தரமான அரிசி கூட கிடைப்பது கிடையாது. என்.ஆர் காங்கிரஸ் மூன்றாவது ஆண்டு விழா கொண்டாடுவதற்கு அருகதையே இல்லை.

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ரங்கசாமி அரசு நிறுத்திவிட்டதாக நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

அறவாழி

படம்: ஜெ.முருகன்