Published:Updated:

பா.ம.க.வினர் 3 பேர் தே.பா.சட்டத்தில் கைது

பா.ம.க.வினர் 3 பேர் தே.பா.சட்டத்தில் கைது
பா.ம.க.வினர் 3 பேர் தே.பா.சட்டத்தில் கைது
பா.ம.க.வினர் 3 பேர் தே.பா.சட்டத்தில் கைது

திருவண்ணாமலை: பா.ம.க.வினர் வீசிய பெட்ரோல் குண்டில் கண்டெய்னர் லாரி ஓட்டுனர் பலியான சம்பவத்தை தொடர்ந்து பா.ம.க.வினர் 3 பேர் இன்று தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனங்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது திருவண்ணாமலை அடுத்த ஐயம்பாளையம் ஏரிக்கரை அருகே 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டை வீசியது. இதில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ராஜஸ்தானை சேர்ந்த தக்கர்கான் படுகாயம் அடைந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 5ஆம் தேதி இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. முத்தரசியின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் பெரிய கோட்டாங்கல்லை சேர்ந்த ஏழுமலை, முருகன், பார்த்திபன் உள்ளிட 10 பேரை கைது செய்தனர். அவர்களை திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

##~~##
இந்த நிலையில் தற்போது அந்த 10 பேரில் பா.ம.க.வை சேர்ந்த முருகன், பார்த்திபன், ஏழுமலை ஆகிய மூன்றுபேரை திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்களே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில் மூன்று பேரும் இன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

- பா.கந்தகுமார்