Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ஓவியம்: அரஸ்

ஐடியா அய்யனாரு!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

“அதாவது மக்களே... உங்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். மறக்காமல் ஆப்பிள் சின்னத்தில் ஓட்டுப்போடுங்கள்” என்று சொல்லி, மாம்பழ முகாமை நெளியவைத்திருக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ‘நமக்குத்தான் ஸ்கிரிப்ட்டா கொடுத்தாலே பேச வராதே... சொந்த டயலாக் எல்லாம் எதுக்கு?’ என்று வறுத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள். ஆளுக்கேற்றபடி நாங்களே எழுதிக்கொடுக்கிறோம். அப்படியே பேசிடுங்க!

ஐடியா அய்யனாரு!

ஜெயக்குமார்
தா
மரையைத் தாங்கிப்பிடிப்பது அதன் கீழிருக்கும் இலைகள்தான். அந்த இலைகள்தான் குட்டையில் இருக்கும் மீன்களுக்கும் வெயில் காலத்தில் நிழல் தரும். எப்படியோ தாமரை, இலை, நான் வகிக்கும் மீன்வளத்துறை என மூன்றையும் ‘சிங்க்’ செய்து பேசிவிட்டேன். இதற்கு மேலும் என்னிடம் எதிர்பார்க்காமல், ஓட்டுகளை எங்கள் கூட்டணிக்கே போட்டுவிடுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்!

செங்கோட்டையன்
பு
திதாக விளையாட்டுத்துறையையும் கவனிக்கிறேன். அதனால் விளையாட்டில் அதீத ஆர்வமுடைய அன்புமணியை ஆதரித்துப் பிரசாரம்செய்யும் தகுதி எனக்கு நிறையவே உண்டு. அன்புமணி பேட்மின்டன் விளையாட்டில் தீவிர ஆர்வமுடையவர். அவர் பேட்மின்டன் சங்கத்தலைவராக இருந்தபோது, வழக்கம்போல பஞ்சாயத்து ஆனதால், ஜாகையை மாற்றி இந்தத் தேர்தலுக்கு வந்துள்ளார். அவரின் விடாமுயற்சியைப் பாராட்டி அவருக்கு வாக்களியுங்கள்!

விஜயபாஸ்கர்
ண்ணன் அன்புமணி அவர்களும் என்னைப் போலவே சுகாதாரத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அவர் அமைச்சராக இருந்தபோது நோய்த்தாக்குதல்கள் மட்டுமல்ல, வருமானவரித்துறைத் தாக்குதல்கூட நடந்ததில்லை. அவர் மீண்டும் அமைச்சரானால் நாங்கள் கூட்டாகப்பேசி ரெய்டுகளைத் தடுக்க வசதியாக இருக்கும். மக்கள் பார்த்துச் செய்யவும்!

செல்லூர் ராஜு
கூ
ட்டுறவுத்துறை அமைச்சராக எப்படிச் செயல்படவேண்டும் என எனக்குக் கற்றுக் கொடுத்தது, கடந்த இரண்டரை ஆண்டுகளாக அ.தி.மு.க-வுக்கும், பி.ஜே.பி-க்கும் இருந்துவரும் கூட்டுறவுதான். ஊரே கழுவிக் கழுவி ஊற்றினாலும் ஒருவரை ஒருவர் கெட்டியாகப் பிடித்தபடி கிடக்கிறோம். எங்களுக்காகப் பிரத்யேகப் பிரச்னைகளை உருவாக்கி, அதிலிருந்து வெளியே கொண்டுவந்த பி.ஜே.பி-க்கு ஆதரவளிக்க வேண்டுகிறோம்!

ராஜேந்திர பாலாஜி
ண்ணன் சிறந்தப் பேச்சாளர். தேர்தல் அரசியலை நன்றாகப் புரிந்துகொண்டவர். எல்லாவற்றையும்விட இந்த ஊர்க்காரர். ஆகவே, அண்ணன் வைகோவுக்கு ஓட்டு... மன்னிக்கவும், அவர் கூட்டணியில் இல்லை என்பதை மறந்துவிட்டேன். முரசு சின்னமும் பம்பரமும் ஒரேமாதிரி இருப்பதால் வந்த குழப்பம் இது. நீங்களும் என்னைப் போலக் குழம்பிவிடாமல் முரசுக்கு ஓட்டுப் போடுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism