Published:Updated:

காங்கிரஸ் வியூகம்... கணக்குப் போடும் மோடி! - உளவுத்துறை சர்வே... உதறலில் பி.ஜே.பி.

காங்கிரஸ் வியூகம்... கணக்குப் போடும் மோடி! - உளவுத்துறை சர்வே... உதறலில் பி.ஜே.பி.
பிரீமியம் ஸ்டோரி
காங்கிரஸ் வியூகம்... கணக்குப் போடும் மோடி! - உளவுத்துறை சர்வே... உதறலில் பி.ஜே.பி.

- லியானா

காங்கிரஸ் வியூகம்... கணக்குப் போடும் மோடி! - உளவுத்துறை சர்வே... உதறலில் பி.ஜே.பி.

- லியானா

Published:Updated:
காங்கிரஸ் வியூகம்... கணக்குப் போடும் மோடி! - உளவுத்துறை சர்வே... உதறலில் பி.ஜே.பி.
பிரீமியம் ஸ்டோரி
காங்கிரஸ் வியூகம்... கணக்குப் போடும் மோடி! - உளவுத்துறை சர்வே... உதறலில் பி.ஜே.பி.
காங்கிரஸ் வியூகம்... கணக்குப் போடும் மோடி! - உளவுத்துறை சர்வே... உதறலில் பி.ஜே.பி.

‘‘மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுக்கு மீண்டும் தனிப்பெரும்பான்மை ஆதரவு கிடைக்காது. மற்ற கட்சிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே மீண்டும் மோடியால் பிரதமராக முடியும்” என்று பி.ஜே.பி தலைமைக்கு நெருக்கமானவர்களே இப்போது சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். இதனால், மாற்றுப்பாதையில் புதிய வியூகங்களை அமைத்துவருகிறது பி.ஜே.பி. இன்னொரு பக்கம்... தேவைப்பட்டால் பிரதமர் ரேஸிலிருந்து வெளியேறியாவது, ஆட்சியைத் தக்கவைக்கும் சூட்சுமங்களை வகுத்துவருகிறது காங்கிரஸ்.

இதுதொடர்பாகப் பேசிய பி.ஜே.பி கட்சியின் மேலிடத்துக்கு நெருக்கமான சிலர், “2014-ம் ஆண்டு இருந்த மோடி அலை இப்போது இல்லை என்பதை பி.ஜே.பி உணர்ந்துள்ளது. ‘தேர்தலில் பி.ஜே.பி-க்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?’ என்பதுகுறித்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே, மத்திய உளவுத்துறை ஒரு சர்வே எடுத்தது. அதில், ‘200 தொகுதிகளுக்கும் கூடுதலாக பி.ஜே.பி கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். ஆனால், தனிப்பெரும் கட்சியாக பி.ஜே.பி ஆட்சி அமைப்பது சாத்தியம் இல்லை’ என்று சொல்லப்பட்டிருந்தது. 

கடந்தத் தேர்தலில், பி.ஜே.பி-க்கு பக்கபலமாக இருந்தது உத்தரப் பிரதேசம். அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில், 71  தொகுதிகளை எங்கள் கட்சி கைப்பற்றியது. ஆனால், இந்தமுறை அங்கே மாநிலக் கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி எங்களுக்கு மிகப் பெரியப் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்தமுறை எங்கள் பக்கம் இருந்த சந்திரபாபு நாயுடு அணி மாறிவிட்டார். இதை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்பதுகுறித்து மோடியும் அமித்ஷாவும் இறுதிக்கட்ட யோசனையில் உள்ளார்கள்’’ என்றார்கள்.

காங்கிரஸ் வியூகம்... கணக்குப் போடும் மோடி! - உளவுத்துறை சர்வே... உதறலில் பி.ஜே.பி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுதொடர்பாகப் பேசிய அரசியல் பார்வையாளர்கள், “பி.ஜே.பி எடுத்ததாகச் சொல்லப்படும் அந்த சர்வேக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகளும், பி.ஜே.பி-க்குச் சாதகமாக இல்லை. புல்வாமாவில் எல்லைப் பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். ‘தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது’ என்ற பிரசாரத்தை முன்வைக்க பி.ஜே.பி திட்டமிட்டது. மேலும் இந்திய விமானப் படை பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்மீது நடத்திய தாக்குதலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. தவிர, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆறாயிரம் ரூபாய் திட்டமும் எதிர்பார்த்த அளவில் எடுபடவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சி அறிவித்த, ‘ஏழைகளுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகை’ திட்டம் நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுவிட்டது. அதற்குப் பதிலாக பி.ஜே.பி எந்தத் திட்டத்தை அறிவித்தாலும், அது ஏட்டிக்குப் போட்டியாக அறிவித்ததுபோல் ஆகிவிடும் என்று நினைக்கிறது பி.ஜே.பி. விண்வெளி ஏவுகணைத் தாக்குதல் குறித்துப் பிரதமர் பேசியதற்கும் மக்களிடம் பெரியதாகச் சலனம் இல்லை. மாறாக, சமூக ஊடகங்களில் பிரதமரின்  பேச்சு கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது” என்றார்கள்.

மத்திய உளவுத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “சமீபத்தில் எங்கள் உதவியுடன் மீண்டும் ஒரு சர்வேயை எடுத்தது, பி.ஜே.பி. ஆனால், அதிலும் பி.ஜே.பிக்கு சாதகமான முடிவுகள் வரவில்லை. ‘பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 195 முதல் 210 ஆக இருக்கும்’ என்று அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்னர், பெரும்பான்மைக்குத் தேவையான 273 இடங்களுக்கு, எந்தக் கூட்டணியிலும் இல்லாத தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், ஒடிசாவின் பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகளை பி.ஜே.பி நாடவேண்டி வரலாம். ஆனால், மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கையே ஆந்திரத்தில் 25, தெலங்கானாவில் 17, ஒடிசாவில் 21 என்று 63 மட்டுமே இருக்கின்றன. இதில் இந்த மூன்றுக் கட்சிகள் 63-ல் எத்தனைத் தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்கிற கவலையும் பி.ஜே.பி-க்கு உள்ளது. ஒருவேளை 220 இடங்களைத் தாண்டி பி.ஜே.பி வெற்றிபெற்றாலும், ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியுமா என்கிற சந்தேகம் இப்போது அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்கள்.

காங்கிரஸ் தரப்பில் பேசியவர்கள், “காங்கிரஸ் கட்சிக் கூட்டணி 150 இடங் களுக்குமேல் பெற்றுவிட்டாலே மாயாவதி, அகிலேஷ், மம்தா உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடம் தயாராக உள்ளது.அதாவது, ‘வெளியில் இருந்தோ அல்லது ஆட்சியில் பங்கெடுத்தோ அவர்கள் எதிர்பார்க்கும் ஆதரவைத் தரத் தயாராக காங்கிரஸ் இருக்கிறது.’ தேவைப்பட்டால், பிரதமர் ரேஸில் இருந்து வெளியேறி மம்தா, மாயாவதி அல்லது வேறு ஒரு தலைவரைப் பிரதமராக உட்காரவைக்கவும் காங்கிரஸ் தலைமை தயாராக உள்ளது” என்றார்கள்.

டெல்லி அரசியலை அவ்வளவு எளிதாக யாரும் கணித்துவிட முடியாது. மே 23-ம் தேதிவரை காத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism