Published:Updated:

ஜெயலலிதாவின சாதனை மறையாது: சரத்குமார் புகழாரம்

ஜெயலலிதாவின சாதனை மறையாது: சரத்குமார் புகழாரம்
ஜெயலலிதாவின சாதனை மறையாது: சரத்குமார் புகழாரம்
ஜெயலலிதாவின சாதனை மறையாது: சரத்குமார் புகழாரம்

சென்னை: "காவிரியை மீட்டு தந்த ஜெயலலிதாவின் சாதனை தமிழ் வாழும் வரை மறையாது" என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் புகழ்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நோய் இல்லாமை, செல்வம், விளைபொருள் வளம், இன்ப வாழ்வு, நல்ல காவல் ஆகிய ஐந்தும் நாட்டுக்கு அழகு என்ற திருவள்ளுவரின் வாக்கியத் திற்கேற்ப தமிழகத்தை சீரும் சிறப்புமாக வழி நடத்தும் முதல்வரை பாராட்டுகிறேன்.

மின் உற்பத்தி, நிதி ஆதாரங்களை  திரட்டுதல், பேருந்து நிறுத்தும் வசதியுடன் அடுக்கடுக்காக வணிக வளாகம் கட்டி மேம்படுத்துதல் என அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டுக்குக்குரியது.

காவிரியை மீட்டு தந்து புரட்சித் தலைவி சாதனை படைத்துள்ளார். தமிழ் வாழும் வரை இச்சாதனை மறையாது. முதல்வரின் தொலைநோக்கு திட்டம் தமிழகம் முதன்மை மாநிலமாக தொடர்ந்து இருக்க வழி வகுக்கும். முதல்வரால் அரசினர் தோட்டத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை நடை பெறுகிறது.

##~~##
விலையில்லா அரிசி வழங்கும் முதல்வரை பசிப்பிணி மருத்துவர் எனலாம். மிக குறைந்த விலையில் சென்னையில் உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இட்லி 1 ரூபாய்க்கும், சாதம் 5 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.
சத்தான உணவுகள் ஏழைகளுக்கு கிடைக்க முதல்வர் வழி காட்டுகிறார். வரி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை. தமிழகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என்று முதல்வர் அறிவித்துள்ளார். மரக்காணம் அருகே நடந்த கலவரத்தை இருப்புக்கரம் கொண்டு அடக்கி உள்ளார்" என்று சரத்குமார் கூறி உள்ளார்.