Published:Updated:

கூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

கூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!
கூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

இந்த வார ஜூனியர் விகடன்: https://bit.ly/2IgGEWW

கூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

 அ.தி.மு.க-வுடன் கூட்டணி உறுதி என்று பி.ஜே.பி தமிழகத் தலைவர்கள் சொல்கிறார்கள். டெல்லி மேலிடத்துக்கு அவர்கள் அனுப்பியுள்ள 'நோட்'டில், அ.தி.மு.க., பி.ஜே.பி., பா.ம.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தால், இருபது தொகுதிகள் வரை கண்டிப்பாக வெல்லும்' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்! கூட்டணிக்குப் பிடிகொடுக்காமலிருந்த பா.ம.க., இப்போதுதான் வழிக்கு வந்துள்ளது. அந்தக் கட்சிக்கு, ஏழு தொகுதிகள் என்று முடிவாகி இருக்கிறதாம். ஆனால், தேர்தல் செலவு விஷயத்திலும் கைகொடுக்கவேண்டும் என்பதில் பா.ம.க தரப்பு கறாராக இருப்பதுதான், அ.தி.மு.க முக்கியப் புள்ளிகளையே கடுப்பேற்றியிருக்கிறதாம்."

கூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

> "தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆழ்வார்பேட்டை வீட்டுக்கே வந்து ஸ்டாலினைச் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, 'பத்திரிகை வைக்க மட்டுமா அம்பானி வந்திருப்பார். அதோடு சேர்த்து பல விஷயங்களையும் பேசாமலா இருந்திருப்பார்?' என்று தி.மு.க-வுக்குள்ளேயே கிசுகிசுக்கிறார்கள்." 

"ஒரு தொகுதிக்கு முப்பது கோடி வரை செலவாகும் என்று கணக்குப் போடப்பட்டு, அந்த அளவுக்குச் செலவழிக்கக்கூடியவர்களுக்குத்தான் வாய்ப்பு என்றும் தி.மு.க தரப்பில் பேச்சு ஓடுவதாகக் கூறுகிறார்கள். அப்படி வருபவர்களுக்கு 15 கோடி ரூபாய் வரை வெளியிலிருந்து சப்போர்ட் செய்வார்களாம்!''

- இரண்டு திராவிட கட்சிகளுமே, கூட்டணி வேலைகளைத் துரிதப்படுத்தியுள்ளன. அங்கே நடக்கும் உள் விவகாரங்களை நம்மிடம் 'காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி!' என்ற தலைப்பில் விரிவாகப் பகிரும் மிஸ்டர் கழுகு, நிர்மலா தேவி விவகாரத்தின் அப்டேஸ்களையும் தந்திருக்கிறார்.  மேலும் படிக்க க்ளிக்  செய்க...

கூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

"காங்கிரஸ் என்றாலே கோஷ்டிபூசல்தான். நீங்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள்?"

"எனக்கு கோஷ்டிபூசலில் எல்லாம் நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் இயக்கம் ஜனநாயகத் தன்மையுடன் கூடிய இயக்கம். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என்னால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக வர முடிகிறது என்றால், அதற்கு அந்த ஜனநாயகத் தன்மைதான் காரணம். மற்ற கட்சிகளில் இல்லாத ஜனநாயகம் இது. சில விஷயங்களில் கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதனால் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, தனிப்பட்ட விமர்சனங்களை வைக்கலாம். அதுவே கோஷ்டியாக மாறுகிறது. எனக்கு யாருடனும் எந்த முரண்பாடும் கிடையாது. எல்லோரையும் அரவணைத்து, சுமுகமாகப் பயணம் செய்வேன்."

- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரான கே.எஸ்.அழகிரியின் "கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை!" எனும் பேட்டியில் அவர் பல பளீச் பதில்களை அளித்திருக்கிறார்.   மேலும் படிக்க க்ளிக்  செய்க...*

கூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

தி.மு.க தலைவர் ஸ்டாலின், பொதுக் கூட்டங்களில் அடிக்கடி, 'வாய் புளித்ததோ.. மாங்காய் புளித்ததோ' என்கிற சொல்லாடலைப் பயன்படுத்துவார். சட்டசபையில் ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பத்துரை பேசியபோது அடிக்கடி ஸ்டாலினை இமிடேட் செய்து, "வாய் புளித்ததோ.. மாங்காய் புளித்ததோ என்று சொல்லவில்லை" என்றார். இது புரிந்ததாலோ என்னவோ, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இறுக்கமாக இருந்தனர்.  ஒருகட்டத்தில் இதைத் தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் குறுக்கிட்டு, "பேரவைத் தலைவர் அவர்களே... உறுப்பினர் பேசும்போது என்னைப் பார்த்தே பேசுகிறார். மரபுப்படி பேரவைத் தலைவரைத்தான் பார்த்துப் பேச வேண்டும்" என்றார் காட்டமாக...

- சட்டசபை என்றாலே சட்டைக் கிழிய வேண்டும் என்று அர்த்தமல்ல. பெரும் மாண்புகொண்ட அந்தச் சபையில், சில சமயங்கள் அப்படியான அசந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அனல் பறந்த விவாதங்களையேகூட சாதுர்ய வார்த்தைகளால் அலங்கரித்த சிறப்பைக் கொண்டது தமிழ்நாடு சட்டசபை. கருணாநிதி, எம்.ஜி.ஆர் தொடங்கி ஜெயலலிதா ஆட்சிவரை இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முறை. இவரது சட்டப் பேரவையிலும் சுவாரஸ்ய உரையாடல்களுக்குக் குறைவில்லை. இதைக் கச்சிதமாகத் தொகுத்து வழங்கியிருக்கிறது "போன மாதம் ஆயிரம் புன்னகை... இந்த மாதம் இரண்டாயிரம் புன்னகை!" - எனும் ஆர்ட்டிகிள். மேலும் படிக்க க்ளிக்  செய்க...

கூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

> "கொங்கு சமுதாயத்தை விமர்சித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தோழமையுடன் இருக்கிறீர்கள். ஆதித்தமிழர் பேரவை மாநாட்டில் பேசுகிறீர்கள். இவையெல்லாம் உங்கள் அரசியல் சுயலாபத்துக்காகத்தான் என்று உங்கள் சமூகத்தினரே விமர்சனம் செய்கின்றனரே?"

"அருந்ததியர்களுக்கும் கவுண்டர்களுக்கும் எப்போதுமே பிரச்னை வந்தது கிடையாது. வெளி மாவட்டங்களிலிருந்து பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஏதாவது பிரச்னை செய்ய வேண்டும் என்று பார்க்கிறார்கள். நாங்கள் ஒற்றுமையாக இருந்து அதைத் தடுக்கிறோம். விடுதலைச் சிறுத்தைகளுடன் தோழமையுடன் இருப்பதையும் ஆதித் தமிழர் மாநாட்டில் கலந்துகொள்வதையும் அப்படியான முயற்சிகளாகத்தான் பார்க்க வேண்டும்."

> "தி.மு.க-வுடன் தோழமை தொடர்கிறதா?"

"கூட்டணி முடிவாகும்வரை தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளுமே தோழமைக் கட்சிகள்தான். எங்களைப் பொறுத்தவரைத் தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே."

- மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையினர், 'கொங்கு சமுதாய மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் ஈஸ்வரனைத் தோற்கடிப்போம்' என்று தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்த நிலையில், ஈஸ்வரன் அளித்துள்ள 'எங்கள் நிபந்தனையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி!' எனும் பேட்டி பல விஷயங்களை டீல் செய்கிறது.  மேலும் படிக்க க்ளிக்  செய்க...

கூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

'பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்' என்று பி.ஜே.பி-யின் மகளிர் அணி சார்பாக மதுரையில் இருசக்கர வாகன யாத்திரை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், வெறும் 21 பெண்களுடன் புறப்பட்ட யாத்திரை, 18 பெண்களுடன் நிறைவடைந்தது. அவர்களிலும் பலரிடம் ஹெல்மெட் இல்லை. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் லைசன் எச்சரித்தார். உடனே சிலர் இரவல் ஹெல்மெட் வாங்கினர். ஹெல்மெட் இல்லாதது மட்டுமல்ல, சிலரிடம் லைசென்ஸே இல்லை. 'இதை முன்னாடியே சொல்லக்கூடாதா?' என்று பதற்றமடைந்தனர், லைசென்ஸ் இல்லாத பெண்கள். மகாலெட்சுமி டூவீலரின் பின்னால் அமர்ந்தவாறு போஸ் கொடுத்த தமிழிசை, பிறகு காரில் ஏறிச் சென்றுவிட்டார். ஒரு கையில் டூவீலரை ஓட்டிக்கொண்டே, மறு கையைத் தூக்கி 'பாரத் மாதாக்கி ஜே', 'மீண்டும் மோடி வேண்டும்' என்று கோஷமிட்ட யாத்திரை சென்ற பெண்கள், கடைசியில் செல்ஃபியுடன் யாத்திரையை நிறைவுசெய்தனர்.

- இது மட்டுமா? பிரியாணி போச்சே!, அதிர்ச்சி அளித்த ஆஸ்டின்!, கெஸ்ட் ஹவுஸில், 'கணக்கு வழக்கு', ராமநாதபுரம் பனிப்போர்... கலங்கும் அ.தி.மு.க தொண்டர்கள், கரைபுரளும் சாராயம், நிவாரணப் பொருள்கள் கொள்ளை முதலான உப தலைப்புகளில் உள்ளூர் அரசியல் மேட்டர்கள் பலவற்றையும் சுவாரசியாகத் தந்திருக்கிறது 'மினி மீல்ஸ்' தொகுப்பு.   மேலும் படிக்க க்ளிக்  செய்க...

கூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

பல ஆண்டுகளாகக் கணவன் மனைவியாக வாழ்ந்து, குழந்தைகளைப் பெற்று வளர்த்து, மணவாழ்வின் பாதியைக் கடந்துவிட்ட பிறகு, காதல் மனைவியையே கொடூரமாகக் கொலை செய்ததுடன், அவரது உடலைத் துண்டுத்துண்டாக வெட்டி வீசியிருக்கிறார் கணவர். எவ்வளவு ஒரு வன்மம்... கொலை செய்த பிறகும்கூட அவர் முகத்தில் பதற்றமோ, குற்ற உணர்வோ துளியும் இல்லை. மாறாக, இயல்பைத் தாண்டிய ஆசுவாசம் தென்பட்டது. இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல... கணவனை மனைவி கொல்வதும், மனைவியைக் கணவன் கொல்வதும்... பெற்றெடுத்த குழந்தைகளையே பெற்றோர் கொல்வதும் என்று குடும்பச் சிக்கல்கள், வன்முறை என்கிற வரையறையைத் தாண்டி, படுகொலை வரை நீள்கின்றன. உலகிலேயே தனித்துவம் வாய்ந்த இந்தியக் குடும்பம் என்கிற கட்டமைப்பு சிதைந்துவருகிறதா... இல்லை, தோல்வியடைந்துவிட்டதா? என்னதான் நடக்கிறது இங்கே? 

முன்பெல்லாம் ரவுடிகள் கொலை... வரப்புத் தகராறில் பங்காளி கொலை என்றுதான் செய்திகள் வரும். இன்றோ, தவறாமல் இடம்பிடிக்கின்றன, குடும்பக் கொலைகள். முந்தைய காலத்தில் இதுபோன்ற உறவுச் சிக்கல்கள், வன்முறைகள் இல்லையா என்று கேள்வி எழலாம். இருந்தனதான். ஆனால், கொலை அளவுக்கு அதிகம் நடக்கவில்லை. இப்போது மட்டும் ஏன் இப்படி வன்முறைகள்? - இது தொடர்பான 'அதிகரிக்கும் குடும்பக் கொலைகள்! - இந்தியக் குடும்பங்களுக்கு என்ன ஆனது?' எனும் ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரியை தவறவிடாதீர்கள்.  மேலும் படிக்க க்ளிக்  செய்க...

கூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

"சில நாள்களுக்கு முன்பு, போலீஸ் போன்ற மிடுக்குடன் என் கடைக்கு வந்த ஒருவர், "இங்கே கடை நடத்தணும்னா, தினமும் நூறு ரூபாய் கொடுக்கணும்" என்றார். "நீங்க யாருன்னே தெரியாது சார். நான் எதுக்கு நூறு ரூபாய் கொடுக்கணும்?" என்று கேட்டேன். பதிலேதும் சொல்லாமல் முறைத்துவிட்டுச் சென்று விட்டார். இந்த நிலையில்தான், எனது கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தேன். அதில், நள்ளிரவில் வெள்ளை நிற டாடா சுமோ காரில், காவலர் உடை அணிந்த ஐந்து பேர் இறங்கி, எனது கடையைச் சுற்றிலும் சி.சி.டி.வி கேமரா ஏதும் இருக்கிறதா என்று சுற்றிமுற்றிப் பார்க்கிறார்கள். பின்னர், கடையை அடித்து நொறுக்குகிறார்கள். கல்லைத் தூக்கிப் போட்டுத் தள்ளுவண்டியை உடைக்கிறார்கள்..." 

- சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர் பிழைப்புக்காக நடத்திவந்த தள்ளுவண்டிக் கடையை, நூறு ரூபாய் லஞ்சம் கொடுக்காததால், சற்றும் மனிதாபிமானம் இல்லாமல் அடித்து நொறுக்கியுள்ளனர் போலீஸார். ஆத்திரத்தில் அவர்கள் கடையை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. இதன் பின்னணியைச் சொல்கிறது 'நூறு ரூபாய்க்காக... நொறுக்கப்பட்ட தள்ளுவண்டி கடை!' எனும் செய்திக் கட்டுரை.  மேலும் படிக்க க்ளிக்  செய்க...

கூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

"கவர்னரின் இந்த நடவடிக்கையால் பிப்ரவரி 13-ம் தேதி காலையில் கடும் கோபத்துடன் புதுச்சேரி திரும்பிய நாராயணசாமி, தன் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் அவசர ஆலோசனையை நடத்தினார். கூட்டத்தில், 'நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், நமக்கு வேண்டுமென்றே நெருக்கடி கொடுக்க கிரண் பேடி இப்படிச் செய்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி போல மத்திய அரசு மீதான எதிர்ப்பைப் பதிவுசெய்ய வேண்டும். ஹெல்மெட் பிரச்னைக்காகப் போராடினால், அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். மக்கள் பிரச்னையை முன்வைத்துப் போராட்டத்தில் இறங்குவோம்' என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது..." 

- புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி - முதல்வர் நாராயணசாமி இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. 'மாநிலத்தின் 39 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என்ற நிபந்தனையுடன், பிப்ரவரி 13-ம் தேதி மாலை முதல்வர் நாராயணசாமி தன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுடன் கவர்னர் மாளிகை முன் முற்றுகையிட்டு கவர்னரைச் சிறைப்பிடித்தார். அன்று இரவு முழுவதும் தன் மாளிகையைவிட்டு வெளியேற முடியாமல் தவித்த கிரண்பேடியை, மறுநாள் காலையில் துணை ராணுவப் படை வந்து அழைத்துச்சென்றது. இதுதொடர்பான முழுமையான விவரத்தை அளிக்கிறது 'கவர்னரை சிறைப்பிடித்த புதுச்சேரி முதல்வர்! - உச்சத்தில் கிரண் பேடி - நாராயணசாமி மோதல்' எனும் செய்திக் கட்டுரை.  மேலும் படிக்க க்ளிக்  செய்க...

கூட்டணி முதல் குண்டர்கள் வரை: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

"...இன்னொரு பக்கம் குணாவின் கூட்டாளியான சுந்தரபாண்டியும் திருச்சியில் கோலோச்ச ஆரம்பித்துள்ளார். ராமஜெயம் கொலை பாணியில் நடந்த திண்டுக்கல் புல்லட் மனோகர் படுகொலை, திருச்சி ரவுடி சசிகுமார் கொலை என 18 கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் சுந்தரபாண்டிமீது உள்ளன. இவரை என்கவுன்டருக்கு போலீஸ் குறிவைப்பதாகக் கூறப்பட்டது. ராமஜெயம் கொலை வழக்கில், முட்டை ரவியின் கூட்டாளிகளான சாமி ரவி, மண்ணச்சநல்லூர் குணா, சுந்தரபாண்டி ஆகியோர்மீது இப்போதும் சந்தேகப்படலம் தொடர்கிறது. தற்போது சிறையில் இருந்தாலும் குணா, சுந்தரபாண்டி ஆகியோரின் செயல்பாடுகளை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதேநேரம், இவர்களின் சிஷ்யர்களாக, புதிய ரவுடிகள் டீம் திருச்சியில் உருவாகி வருகிறது..."

- இப்போது, திருச்சியில் மீண்டும் ரவுடிகள் ராஜ்ஜியம் தலையெடுத்திருப்பதாகப் புகார்கள் குவிகின்றன. திகில் நகரமாக திருச்சி மாறுவதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு இருக்கிறது என்ற பாட்டம்லைனுடன் தற்போதைய நிலவரத்தைச் சொல்லும் செய்திக் கட்டுரைதான்: 'திடீர்' ரவுடிகளால் 'திகில்' நகரமாகும் திருச்சி!  மேலும் படிக்க க்ளிக்  செய்க...

இந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2IjoTGj