Published:Updated:

எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்? - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்

எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்? - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்
எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்? - விரைவில் வெளியாகிறது அ.தி.மு.க - பா.ஜ.க பட்டியல்

ரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க - பி.ஜே.பி இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விரைவில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பது குறித்த தகவல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.  

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிகள் பங்கீடு குறித்து அ.தி.மு.க - பி.ஜே.பி கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்துநடைபெற்று வந்தது. அதோடு அந்தக் கூட்டணியில் தே.மு.தி.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் பி.ஜே.பி-யின் தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும் தே.மு.தி.க  தலைவர் விஜயகாந்த் தரப்பிலும் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அ.தி.மு.க - பி.ஜே.பி கட்சிகளுக்கிடையே தொகுதிகள் பங்கீடு குறித்து முடிவாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பி.ஜே.பி-யில் உள்ள முக்கிய பிரமுகரிடம் பேசியபோது, ``பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி வலுவுள்ள கூட்டணியாக அமைந்துவிட்டது. மேலும் பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளின் வருகையும் அணிக்கு பலம் சேர்த்துள்ளதால், எங்களுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. எங்களுடைய கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே போன்று பா.ம.க-வுக்கு 5 தொகுதிகளும், தே.மு.தி.க-வுக்கு 2  தொகுதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 25 தொகுதிகள் அ.தி.மு.க-வுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய தமிழகம் கட்சி அ.தி.மு.க-வில் போட்டியிடும் என்று தெரிகிறது. பெரும்பாலும் தொகுதிகள் முடிவாகிவிட்டதால், அது குறித்த அதிகாரபூர்வ பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகலாம். கூட்டணி குறித்து நேரடியாக யாரும் உட்கார்ந்து பேசவில்லை மிக  சைலன்டாகவே தொகுதிகளைப் பேசி முடித்துள்ளனர்’’ என்றார்.