அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தே.மு.தி.க, அ.தி.மு.க, அ.ம.மு.க...

தே.மு.தி.க, அ.தி.மு.க, அ.ம.மு.க...
பிரீமியம் ஸ்டோரி
News
தே.மு.தி.க, அ.தி.மு.க, அ.ம.மு.க...

தே.மு.தி.க, அ.தி.மு.க, அ.ம.மு.க...

தே.மு.தி.க, அ.தி.மு.க, அ.ம.மு.க...

சினிமா, அரசியல் என்று  இரண்டு முகம் கொண்ட மைக்கேல் ராயப்பனுக்குப் பூர்வீகம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை. ‘நாடோடிகள்’, ‘தென்மேற்கு பருவக்காற்று’ ‘பட்டத்து யானை’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படங்களின் தயாரிப்பாளர். அ.ம.மு.க சார்பில் திருநெல்வேலித் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

“கடந்த 2009-ம் ஆண்டு நெல்லைத் தொகுதியில் தே.மு.தி.க சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றேன்.  2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி சார்பில் திருநெல்வேலி மாவட் டத்தில் உள்ள ராதாபுரம் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். பிறகு, எனக்கும் விஜயகாந்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, அம்மா முன்னிலையில் அ.தி.மு.க-வில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அம்மா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-விலிருந்து ஓ.பி.எஸ் பிரிந்தபோது, நான் சின்னம்மா அணியில் இருந்தேன். எடப்பாடியை முதல்வராக ஆக்கிய பின்னால் கட்சியில் பிரச்னை ஏற்பட்டபோது எனக்கு  அம்மா பேரவையின் மாநில இணைச் செயலாளர் பதவி கொடுத்தனர்.

தே.மு.தி.க, அ.தி.மு.க, அ.ம.மு.க...

இப்போது, என்னை அ.ம.மு.க கட்சியின் சார்பாக நெல்லைத் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக அறிவித்திருக்கிறார், துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். ஏற்கெனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது ஏராளமான அரசுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தியி ருக்கிறேன். அ.ம.மு.க சார்பில் பரிசுப்பெட்டிச் சின்னத்தில் போட்டியிடும் என்னை நெல்லைத் தொகுதி மக்கள் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் ஜெயிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களின் முதல் நோக்கமே 40 பாராளுமன்றத் தொகுதிக ளிலும் வெற்றி பெறுவதுதான். தேர்தலுக்குப் பிறகு, தங்களது தேவைக்காகத் திட்டங்களை அறிவிக்கும் மத்திய அரசை நிராகரிப்போம், மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தும் எண்ணமுள்ள நடுவண் அரசை ஆதரிப்போம்’’ என்கிறார், மைக்கேல் ராயப்பன்.

-கே.ஜி.மணிகண்டன்

படம்: எல்.ராஜேந்திரன்