Published:Updated:

`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்!’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்

`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்!’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்
`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்!’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்
`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்!’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தனது அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநர் மாளிகையின் முன்பு நடத்தி வரும் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இவர்களுடன் கூட்டணிக் கட்சியான தி.மு.க, கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் இந்தத் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே இரவில் ஆளுநர் மாளிகையின் முன் சாலையிலேயே படுத்து உறங்கி வருகின்றனர். 20-ம் தேதி புதுச்சேரி திரும்புவதாக இருந்த ஆளுநர் கிரண் பேடி இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகைக்குத் திரும்பினார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக நேரம் ஒதுக்கியிருப்பதாக முதல்வர் நாராயணசாமிக்குக் கடிதம் அனுப்பினார்.

`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்!’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்

இதற்கிடையில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரியை திஹாராகவும், மக்களைக் கைதிகளாகவும் நினைத்துக் கொண்டு அவர்கள் மீது வழக்குகளைப் போட்டு சிறையில் அடைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று நான் கருதுகிறேன். அவர், ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசுக்கு எந்தவித ஒத்துழைப்பையும் அளிக்காமல் இருந்து வருகிறார். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போட்டு தனது சர்வாதிகாரப் போக்கைக் காட்டி வருகிறார்.

39 கோப்புகளை கையெழுத்துப் போடாமல் நிறுத்தி வைத்திருக்கிறார். பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கும், ஜனநாயகத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதற்கு இதுவே ஒரு சான்று. பா.ஜ.க-வுக்கு புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இப்படிக் கொல்லைப்புறமாக வர முயற்சி செய்யக்கூடாது. அவர்களுக்கு தைரியமும், திராணியும் இருந்தால் மக்களைச் சந்தித்து தேர்தல் மூலம் வர வேண்டும். அது முடியாது என்று தெரிந்துவிட்டதால்தான் ஆளுநர் கிரண் பேடியை கையில் வைத்துக்கொண்டு இந்தக் கேவலமான செயலை புதுச்சேரி மாநிலத்தில் அரங்கேற்றி வருகிறது பா.ஜ.க. 

`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்!’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்

ஐந்தாவது நாளாக புதுச்சேரி முதல்வர் நடத்தி வரும் இந்தப் போராட்டத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். இதுவரை இந்தப் போராட்டம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காமல் இருப்பது வெட்கக் கேடான ஒன்று. தி.மு.க சார்பில் அதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். டாப்சிலிப்பில் இருந்த ஒரு யானை அங்கிருந்து தப்பித்து திருப்பூரிலுள்ள கண்ணாடிப்புதூர் கிராமத்தில் குடியிருக்கும் சூழல் ஏற்பட்டது. அதனால் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் பீதிக்கு ஆளானார்கள். தற்போது அந்த யானையைப் பிடித்து டாப்சிலிப் முகாமில் அடைத்திருக்கிறார்கள். அதேபோல, புதுச்சேரியில் இருக்கும் ஆளுநர் கிரண் பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஆளுநரைப் பற்றி நான் தவறாகப் பேசுவதாக நினைக்க வேண்டாம். ஆனந்தவிகடன் பத்திரிகையில் சின்னத்தம்பி யானையைப் பற்றி ஒரு தலையங்கமே தீட்டியிருக்கிறார்கள்” என்றார்.

அப்போது ”மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் உங்களைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த ஸ்டாலின், ``நான் இங்கே அரசியல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்’’ என்று கமல்ஹாசனை மறைமுகமாக விமர்சித்ததும் அங்கு பலமான சிரிப்பலை எழுந்தது.

இன்று காலை சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் பேசிய கமல்ஹாசன், ``நான் அரசியலுக்கு வந்துவிட்டதால் 4 படங்களுக்குப் பதில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறேன். சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொள்ள மாட்டேன். அப்படியே அங்கு சட்ட கிழிந்தாலும் நல்ல சட்டையைப் போட்டுக்கொண்டுதான் அங்கிருந்து வெளியே வருவேன்” என்று மறைமுகமாக ஸ்டாலினை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.