தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரும், அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமியும், அ.ம.மு.க சார்பில் பரமசிவ அய்யப்பனும் போட்டியிடுகின்றனர்.

பட்டாசு உற்பத்தியில், பட்டையைக் கிளப்பிவந்த சிவகாசி, ஆலைகள் மூடப்பட்டதால் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. பல மாதங்களாகத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. உணவுக்கே அல்லாடும் நிலை. கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசுத் தொழிலில் இருப்பவர்கள் அ.தி.மு.க, பி.ஜே.பி அரசுகள்மீது கடும் கொதிப்பில் இருக்கிறார்கள்.

மாணிக் தாகூர் 2009-ம் ஆண்டு எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டவர். தொகுதி மக்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். பட்டாசுத் தொழிலாளர் பிரச்னை குறித்து மாணிக் தாகூர் மக்களவையில் குரல்கொடுப்பார் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள் பட்டாசு தொழில் தரப்பினர்.

தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி, அ.தி.மு.க, பி.ஜே.பி, புதிய தமிழகம் கட்சிகளின் வாக்குகளை நம்பியிருக்கிறார். இவர் வெற்றிபெற அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிகம் மெனக்கெடுகிறார்.

கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்புக்காக காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம் முழுமையாக நடைபெறுவதில்லை. எனவே, ‘மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால், அந்தத் திட்டம் முறையாக அமல்படுத்தப்படும்; படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என்று நம்புகிறார்கள் ஏழை மக்கள். முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் மீதான அதிருப்தியும், அ.தி.மு.க-வில் இருந்து அ.ம.மு.க-வுக்குப் பிரியும் வாக்குகளும் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமிக்கு மைனஸ். முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை அ.ம.மு.க பிரிக்கும். இவை எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு ‘கை’ கொடுக்கும்.

‘ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்’ என்கிற வாக்குறுதியை மாணிக் தாகூர் அளித்திருக்கிறார். மோடியால் சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, இந்தத் தொகுதிக்குள்தான் வருகிறது. ஆனால், அதற்கு நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என்பதும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இவை எல்லாமே காங்கிரஸின் மாணிக் தாகூருக்கு ப்ளஸ்.

காங்கிரஸுக்கு விருது அளிக்கக் காத்திருக்கிறது விருதுநகர்!