அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சிரிக்காமல் படிக்கவும்!

சிரிக்காமல் படிக்கவும்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிரிக்காமல் படிக்கவும்!

சனா

‘இந்தியக் குடியரசுக் கட்சி (அ)’ சார்பாக, தென்சென்னைத் தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடு கிறார், பவர் ஸ்டார் சீனிவாசன்.

“இரண்டு வருடமா இந்தக் கட்சியில இருக்கேன். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிச்சதும், கட்சியின் சார்பாகத் தென் சென்னையில் என்னைப் போட்டியிடச் சொல்லிக் கேட்டாங்க, அதனாலதான் நான் போட்டியிடுறேன். மக்கள் மத்தியில் எனக்குப் பெரிய பப்ளிசிட்டி இருக்குன்னு தலைமைக்குத் தெரியும். முக்கியமா, எனக்கு ரசிகர்கள் அதிகம். அதனால, இந்தத் தேர்தலில் எனக்கு வெற்றி கிடைக்கும். கட்சியிலும் நல்ல பெயர் இருக்கு” என்கிறார், பவர் ஸ்டார்.

சிரிக்காமல் படிக்கவும்!

“நான் நடிச்ச ‘லத்திகா’ படத்தின் வெற்றி விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் திருமா அண்ணன்தான் எனக்கு ‘பவர் ஸ்டார்’ பட்டத்தைக் கொடுத்தார். அவருடைய கட்சியில் இரண்டு வருடங்கள் இருந்தேன். அதைக் கட்சின்னு சொல்லமாட்டேன். அது என் குடும்பம். அங்கே எப்படி இருந்தேனோ,

சிரிக்காமல் படிக்கவும்!

அதேமாதிரிதான் இப்போ இந்தியக் குடியரசுக் கட்சியில இருக்கேன். விசிக-வுல இருந்தப்போ, பட வாய்ப்புகள் அதிகம் இருந்ததால, கட்சியில இருந்து வெளியே வந்துட்டேன். இப்போ, இந்தக் கட்சியில தீவிரமா வேலை பார்த்துக்கிட்டிருக்கேன்.

தேர்தல் களத்தில் என்னோட பிரசார வியூகம் ஆச்சரியப்படுத்தும். சாய்பாபாவை வணங்கிட்டு, பிரசாரத்தை ஆரம்பிப்பேன். மக்களுக்கு எந்த வேட்பாளர் நல்லது செய்வார்னு தோணுதோ, அவரையே அந்தந்தத் தொகுதிக்குத் தேர்ந்தெடுக் கட்டும். ஏன்னா, எனக்கு வெற்றி தோல்வியைவிட, யார் வந்தாலும் மக்களுக்கு நல்லது பண்ணணும்னு தான் எண்ணம்.

35 வருடமா சென்னையில இருக்கிற எனக்கு, சென்னையைப் பற்றி நல்லா தெரியும். இது வரைக்கும் 100 படங்களுக்குமேல் நடிச்சுட்டேன். தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் போனாலும், படத்தில் நடிக்கிறதை நிறுத்தமாட்டேன். முக்கியமா, அரசியலில் எனக்கு ரோல் மாடலா யாரையும் நினைக்கல. பவர்தான் எப்போவுமே ஸ்டார். பவர் ஸ்டாருக்குப் போட்டி பவர் ஸ்டார்தான்!” எனக் கலகலப்பாக முடிக்கிறார் சீனிவாசன்.

படம்: கே.ஜெரோம்