அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஆட்டமா, தேரோட்டமா...

ஆட்டமா, தேரோட்டமா...
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்டமா, தேரோட்டமா...

ஆட்டமா, தேரோட்டமா...

ஆட்டமா, தேரோட்டமா...

நாம் தமிழர் கட்சியின்  திண்டுக்கல் வேட்பாளராகக் களத்தில் இருக்கிறார் மன்சூர் அலிகான். வாக்கு சேகரிக்கச் செல்லும் பகுதிகளில் ஹோட்டல்களில் பரோட்டா செய்வது, இளநீர் வெட்டுவது, ஷூ பாலிஷ் போடுவது, கொய்யாப் பழம் விற்பது, ரிக்‌ஷா ஓட்டுவது என அந்தந்த இடங்களில் உள்ள வியாபாரக் கடைகளில் புகுந்து வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்துவிடுகிறார்.

“திண்டுக்கல் நான் பிறந்த மாவட்டம். சொந்த ஊர் ஜவ்வாதுப்பட்டி. பள்ளப்பட்டியில்தான் வளர்ந்தேன். இது எல்லா வளங்களும் நிறைஞ்ச மாவட்டம். ஆனா மலைகளைக் குடைஞ்சி, ஆத்து மணலை அள்ளின்னு இதோட இயற்கை வளங்களை அரசியல்வாதிகள் அழிச்சிட்டாங்க. பல கிராமங்கள்ல இப்போ குடிக்கக்கூடத் தண்ணி இல்லை. இந்த நிலையை மாத்தணும்னு நினைக்கிறேன்.

ஆட்டமா, தேரோட்டமா...

அதுக்கு நாம் தமிழர் கட்சி எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கு. என் வாழ்க்கையிலேயே இப்பதான் நான் சந்தோஷமா உணர்றேன். என் தேர்தல் பிரசாரத்தை சிலர் விளம்பரம்னு சொல்றாங்க. என் மனசுக்கு என்ன தோணுதோ அதை நான் செய்வேன். எனக்கு விளம்பரம் தேவையில்லை. அதேபோல சிலர் என்னை ‘பாய்’னு சொல்றாங்க. ஆமாம், நான் பாய்தான்...ஆனா, யாருக்கும் காயா இருக்கமாட்டேன். இனிமையான கனியா இருப்பேன்.

எங்களுக்கு ‘விவசாயி’ சின்னம் கிடைச்சிருக்கு. கையில ரெட்டைக் கரும்பு. அந்தக் கரும்புபோல, என்னைச் சக்கையா பிழிஞ்சாலும் மக்களுக்கும் சமுதாயத்துக்கும் இனிப்பா இருப்பேன். இப்படி உங்கள்ட்ட பேசிட்டு இருக்கிற இந்த நேரத்துல வாக்கு கேட்டுப் போயிருந்தா இன்னொரு ஆயிரம் பேரைப் பார்த்திருப்பேன்’’ என்று நம்மை வாரிவிட்டு, வாக்கு சேகரிக்கக் கிளம்பினார் மன்சூர் அலிகான்.

-ஆர்.குமரேசன்

படம்: வீ.சிவகுமார்