Published:Updated:

மலேசியாவில் வாழும் தமிழர்களைக் காக்க பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

மலேசியாவில் வாழும் தமிழர்களைக் காக்க பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
மலேசியாவில் வாழும் தமிழர்களைக் காக்க பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
மலேசியாவில் வாழும் தமிழர்களைக் காக்க பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: "மலேசியாவில் வாழும் தமிழர்களைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் கடந்த மூன்று மாதங்களாக எவ்வித காரணங்களுமின்றி சுட்டுக்கொலை செய்யப்படுகின்றனர். இதுபோன்று அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன.

பல நூற்றாண்டுகளாக மலேசியாவில் வாழ்ந்து, மலேசிய இந்தியர்கள் என்று அழைக்கப்படும் தமிழர்கள், அந்த நாட்டின் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழர்கள். அந்த நாட்டின் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

##~~##
தமிழர்களுடைய நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் மத்திய காங்கிரஸ் அரசு பாராமுகமாகவே உள்ளது. இதனை ஒரு போதும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை தொடர்ந்து உலகத்தமிழர்களுக்கு பல பின்னடைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
மத்திய காங்கிரஸ் அரசு உடனடியாக இதை கைவிட வேண்டும். மலேசியாவில் வாழும் தமிழர்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு, அந்நாட்டின் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தமிழக முதல்வரும் மத்திய அரசின் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல வேண்டும்" என்று பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.