Published:Updated:

`இது மெகா கூட்டணி!’ - 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கிடு

`இது மெகா கூட்டணி!’ - 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கிடு
`இது மெகா கூட்டணி!’ - 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கிடு

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு அ.தி.மு.க சார்பில் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலுக்கு மாநிலக்கட்சிகள் முழுவீச்சில் தயாராகிக்கொண்டிருக்கின்றன. தொகுதி ஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க, பா.ஜ.க இணையும் என்று கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக இன்று காலை சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கூடிய அ.தி.மு.க, பா.ம.க தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்தனர்.

அதன்படி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ம.க மெகா கூட்டணியாக இணைந்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 மக்களவை இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம் பா.ம.க போட்டியிடும் 7 தொகுதிகளும் எந்தெந்தத் தொகுதிகள் என்பதை பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து பா,ஜ.கவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஸ் கோயல், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸூடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பொன்னார், தமிழிசை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையைத்தொடர்ந்து பிஜேபிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகார்பூர்வ அறிவிப்பை இருகட்சிகளைச் சேர்ந்தவர்களும் அறிவித்தனர். `தே.மு.தி.கவுக்கு எத்தனை தொகுதிகள்’ என கேள்வி எழுப்பியதற்கு எந்த பதிலும் இரு கட்சியை சேர்தவர்கள் அளிக்கவில்லை. அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட தொகுதிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. தே.மு.தி.கவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீட்டித்து வருவதால், விரைவில் பேச்சுவார்த்தை முடிந்து அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.