Published:Updated:

ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்

ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்

வாஷிங்டன்: அதிபர் பராக் ஒபாமாவின் அழைப்பின்பேரில் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா செல்ல உள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க விருப்பம் தெரிவித்தே ஒபாமா இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் இந்த ஆண்டு இறுதியில் நியூயார்க் செல்ல உள்ளார்.

அநேகமாக செப்டம்பர் அல்லது டிசம்பர் மாதங்களுக்கு இடையே அவரது அமெரிக்க பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவு துறை துணை அமைச்சர் வில்லியம்பர்ன்ஸ் இதுகுறித்து இந்திய அதிகாரிகளிடம் பேசினார். அதையடுத்து இரு தலைவர்களின் சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்மோகன்சிங் - ஒபாமா சந்திப்பின் போது உள் நாட்டு அணு

##~~##
கொள்கை, தீவிரவாதம் தடுப்பு, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பிரச்னை, விண்வெளி துறை வளர்ச்சியில் நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் கல்வி குறித்து விவாதிக்கப்பட உள்ளது.