Published:Updated:

தேர்தல் மங்காத்தா to மோசடிகள்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 ஹைலைட்ஸ்!

தேர்தல் மங்காத்தா to மோசடிகள்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 ஹைலைட்ஸ்!
தேர்தல் மங்காத்தா to மோசடிகள்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 ஹைலைட்ஸ்!

இந்த வார ஜூனியர் விகடன்: https://bit.ly/2Sd9pUb

தேர்தல் மங்காத்தா to மோசடிகள்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 ஹைலைட்ஸ்!

``பி.ஜே.பி., அ.தி.மு.க மற்றும் ரஜினி என்று கூட்டணியை முடிவு செய்வது என்று பி.ஜே.பி தரப்பிலிருந்து கூறியுள்ளனர்... ரஜினியைச் சேர்த்துக்கொண்டால், அ.தி.மு.க என்கிற கட்சியையே அவர் கபளீகரம் செய்து விடக்கூடும் என்று பயந்த அ.தி.மு.க தரப்பினர், நாசூக்காக அவரைத் தவிர்க்கும் முயற்சியில் இறங்கினர். கடந்த வியாழனன்று இரவு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்திய கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ரஜினி விஷயமும் முக்கியமாக அலசப்பட்டுள்ளது. அப்போது என்ன பேசப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், அதைத் தொடர்ந்துதான் ரஜினி முகாமில் ஏகப்பட்ட உறுமல் சத்தம் எழுந்திருக்கிறது. பிறகுதான், மாவட்ட நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை, அதிரடி அறிக்கை எல்லாம்... 

...பி.ஜே.பி மீதான பாசத்தின் காரணமாக, அந்தக் கூட்டணியின் வெற்றிக்காக ஒருசில வேலைகளைச் செய்வாராம். தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்னையைக் கோடிட்டுக் காட்டியிருப்பதுடன், மிக முக்கியமாக 'எதிரணிக்கு வெற்றிவாய்ப்பை நாம் உருவாக்கிவிடக் கூடாது' என்றும் ரஜினி பேசியிருக்கிறார். 'எதிரணி' என்று கூறியிருப்பது, காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியைத் தான். ஆகக்கூடி, இந்தத் தேர்தலில் ரஜினியின் மங்காத்தா ஆட்டம் சூடுபிடிக்கும்... "

- அ.தி.மு.க. கூட்டணி அறிவிப்புக்கு முன் நடந்த இறுதிகட்ட களேபரங்களை 'பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா' என கச்சிதமாக நமக்கு வழங்கியிருக்கிறார் மிஸ்டர் கழுகு.  மேலும் படிக்க க்ளிக் செய்க....

தேர்தல் மங்காத்தா to மோசடிகள்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 ஹைலைட்ஸ்!

...இந்தத் தாக்குதலை நிகழ்த்திய ஆதில் அகமது தர், கிரிக்கெட் விளையாட்டில்கூட இந்திய அணியை ஆதரித்த இளைஞன். 2016-ல் திடீரென அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றபோது அகமது தர்ருக்குக் காலில் குண்டடிப்பட்டது. பிறகு படிப்பைத் துறந்து, தீவிரவாதியாக மாறினான். அப்படி மாற யார் காரணம் என்று ஆராய வேண்டும். தீர்வு அங்கேதான் இருக்கிறது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் பல நகரங்களிலும் தங்கிப் படிக்கும் காஷ்மீர் மாணவர்களுக்கு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. தங்கியிருக்கும் வீடுகளைக் காலிசெய்யச் சொல்கிறார்கள். ஊரிலிருந்து வெளியேறும்படி மிரட்டுகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம், காஷ்மீரின் வீதிகளில் நின்று ராணுவ வாகனங்கள் மீது கல்லெறியும் இளைஞர் கூட்டத்தைப் பெரிதாக்குகிறார்கள். எனவே, காஷ்மீர் இளைஞர்கள் அத்தனை பேரையும் தீவிரவாதிகளாகப் பார்க்கும் மனநிலை மாற வேண்டும்...

- புல்வாமா தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டது, நாடு முழுக்கத் தேசபக்தி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீதிகளில் தொடங்கி, வாட்ஸ்அப் குழுக்கள்வரை பலரும் எழுதும் தீர்ப்பு, `பாகிஸ்தான்மீது போர் தொடுக்க வேண்டும்' என்பதே! இந்தச் சூழலில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகளைத் தாண்டி, அரசும் மக்களும் என்ன செய்ய வேண்டும் என்பதை அழுத்தமாக அலசி உரைக்கிறது 'புல்வாமா தாக்குதல்... புரிந்துகொள்ள வேண்டியது என்ன?' என்ற சிறப்புக் கட்டுரை. மேலும் படிக்க க்ளிக் செய்க....

தேர்தல் மங்காத்தா to மோசடிகள்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 ஹைலைட்ஸ்!

காஷ்மீர் எல்லைப் பிரச்னை குறித்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. தொடரும் இந்தப் போராட்டத்தில், தங்களின் அடையாளங்களைத் தொலைத்து நிற்கும் காஷ்மீர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்கள். இந்த அழுத்தங்களிலிருந்து நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வழி என்று இளைஞர்களைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டன ஜிகாதி அமைப்புகள். அப்படி 2018-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சேர்ந்தவர்தான், புல்வாமாவில் தற்கொலை தாக்குதல் நடத்திய ஆதில் அகமது தர். 

- துயரில் துவண்டுபோயிருக்கிறது தேசம். போரில் அல்ல, ஒரு சாதாரணப் பயணத்தில் 44 வீரர்களைப் பறிகொடுத்துவிட்டுப் பதறிக்கொண்டிருக்கிறது இந்தியா. தீர்வுகள் எட்டப்பட வேண்டுமெனில், பிரச்னையின் வேர்கள் புரிந்திருக்க வேண்டும். இருபது வயதையே எட்டாத ஓர் இளைஞனை, தற்கொலைத் தாக்குதலுக்காகத் தயார்படுத்தியிருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பின்னணி என்ன? கோரிக்கைகள் என்ன? யார் இவர்கள்? எங்கு இருக்கிறார்கள்? முதலான கேள்விகளுக்கு விடை சொல்கிறது 'முடிவுக்கு வருமா முகமதுவின் போர்ப்படை அட்டூழியங்கள்?' எனும் செய்திக் கட்டுரை.  மேலும் படிக்க க்ளிக் செய்க....

தேர்தல் மங்காத்தா to மோசடிகள்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 ஹைலைட்ஸ்!

'ஜூ.வி சார்பில் ஆவின், ஆரோக்யா, ஹெரிடேஜ் மற்றும் அரோமா ஆகிய நிறுவனங்களின் பால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவற்றில் கலப்படம் ஏதுமில்லை என்று ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. இதுகுறித்த உங்களின் பதில்?' என்ற கேள்விக்கும் அமைச்சர் பதில் தரவில்லை.

நமக்குத் தலைதான் சுற்றியது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் இவரிடம்தான் உள்ளது. அதைச் செய்யாமல், அதிகாரிகள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்று கூறுவது பேரதிர்ச்சியே. 
உண்மையிலேயே பாலில் கலப்படம் இருக்கிறது என்றால், ஆய்வுகளை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அமைச்சரின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உட்பட்டவையாகவேதான் இருக்கும். தொடர்ந்து மக்கள் பீதிக்குள்ளாக்கப்படுவது மட்டும்தான் நடக்கும்.

- 'தனியார் பால் நிறுவனங்களை மிரட்டி தன் வலையில் விழ வைப்பதற்காகத்தான் பாலில் கலப்படம் என்கிற விஷயத்தையே அமைச்சர் கிளப்பிவிட்டார்' என்கிற பேச்சுக்கள் தொடர்ந்து அலையடிக்கின்றன. என்னதான் உண்மை என்பதைத் தெரிந்துகொள்ள, மீண்டும் களத்தில் இறங்கியது ஜூ.வி. அந்த ஸ்பெஷல் ஸ்டோரிதான்: கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?  மேலும் படிக்க க்ளிக் செய்க....

தேர்தல் மங்காத்தா to மோசடிகள்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 ஹைலைட்ஸ்!

``ஸ்டெர்லைட் பிரச்னையில் பி.ஜே.பி-யின் நிலைப்பாடு என்ன?"

``உச்ச நீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவே எங்கள் முடிவும். மத்திய அரசோ, மாநில அரசோ நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டியது அவர்களின் கடமை."

``அப்படியென்றால், சபரிமலை தீர்ப்பைச் செயல்படுத்திய கேரள அரசை ஏன் எதிர்க்கிறீர்கள்?"

``இது, மதம் சார்ந்த பிரச்னை. இந்து மதத்துக்குள் சண்டை வரவேண்டும் என்று திட்டமிட்டே இந்த வழக்கைத் தொடர்ந்தனர். அப்படியென்றால், மசூதிக்குள் பெண்களை அனுமதிக்கலாமே."

- என்ன கேள்வி கேட்டாலும் எகிறி அடிப்பதுபோல் பதில் தரக்கூடியவர், பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா. தமிழக பி.ஜே.பி-யைப் பரபரப்புடன் வைத்திருக்கும் அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவர். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அவரைச் சந்தித்து 'கறார்' கேள்விகளை நாம் அடுக்க, 'சுரீர்' பதில்களை அள்ளி வீசினார். ``கழகங்கள் என்பது தி.க., தி.மு.க-தான்... அதில் அ.தி.மு.க வராது!" எனும் அவரது பேட்டி வேற லெவல்.  மேலும் படிக்க க்ளிக் செய்க....

 
 

தேர்தல் மங்காத்தா to மோசடிகள்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 ஹைலைட்ஸ்!

``திறமையும், நேர்மையும் கொண்ட எத்தனையோ ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் 'டம்மி' பதவிகளில் ஓரங்கட்டிவிட்டு, அமைச்சர்களின் சொற்படி நடக்கும் அதிகாரிகளுக்கு மட்டும், நல்ல பொறுப்புகள் தொடர்ந்து தரப்படுகின்றன. சரிப்பட்டு வராத அதிகாரிகளைத் தூக்கியடிக்கிறார்கள். ஆட்சி மாறினால், பல அமைச்சர்கள் சிறைக்குப் போக வேண்டியிருக்கும். அப்போது இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் சேர்ந்து உள்ளே போகப் போவது உறுதி. இதற்குச் சாட்சிகளாக நிற்கப்போவது எங்களைப் போன்ற அதிகாரிகள்தான்" என்று கோபம் பொங்கச் சொல்கிறார்கள்.

- நாடாளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிவரும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கட்டாயத்தின் பேரில் தற்போது மாற்றியுள்ளது, தமிழக அரசு. அதன் பின்னணியைக் கேட்டறிந்து சொல்கிறது 'IAS - டிரான்ஸ்ஃபரோ டிரான்ஸ்ஃபர்... அமைச்சர்கள் காட்டில் அடைமழை!' எனும் சிறப்புச் செய்திக் கட்டுரை.  மேலும் படிக்க க்ளிக் செய்க....

தேர்தல் மங்காத்தா to மோசடிகள்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 ஹைலைட்ஸ்!

தமிழகத்தில் மோட்டார் வாகன விபத்துக் காப்பீடு கோரும் தீர்ப்பாயங்களில், சுமார் ரூ.60 கோடி அளவுக்கு காப்பீடு கோரும் 353 போலி மனுக்கள் தாக்கலானது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் தொடர்புடைய வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்பியது, சென்னை உயர் நீதிமன்றம். இந்தப் போலி மனுக்கள் அனைத்தையும் ஆராய்ந்து, இப்பிரச்னைக்கு உரிய தீர்வை வழங்குவதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துருவை நிபுணர் குழுவாக கடந்த ஜூலை மாதம் நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம். இப்படியான போலி மனுக்கள் நீதிமன்றங்களில் அதிகளவில் தாக்கலான மாவட்டங்களில் கடலூரும் ஒன்று. இந்த மோசடியில் வழக்கறிஞர்கள், காவல்துறையினர், காப்பீட்டு நிறுவனத்தினர் எனப் பல தரப்பினரும் சிண்டிகேட் அமைத்து செயல்பட்டுள்ளதாக பரவலாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

-  மோட்டார் வாகன விபத்துக் காப்பீடு என்ற பெயரில் நீண்டகாலமாக நடந்துவரும் மிகப்பெரிய அளவிலான மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அது தொடர்பான 'மோட்டார் வாகன விபத்துகளும் இன்ஷூரன்ஸ் மோசடிகளும்! - கடலூரைக் கதிகலங்க வைத்த மோசடி' எனும் செய்திக் கட்டுரை மிகவும் முக்கியமானது.  மேலும் படிக்க க்ளிக் செய்க....

தேர்தல் மங்காத்தா to மோசடிகள்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 ஹைலைட்ஸ்!

``எந்தத் துறையிலும் இல்லாத அளவில், வேளாண் துறையில் மட்டுமே இந்த விதிமீறல் தொடர்ந்து நடக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக, இத்துறையில் நேரடித்தேர்வு மூலமாகப் பணியாளர் நியமனம் நடக்கவே இல்லை. இப்போது நடந்திருப்பது அப்பட்டமான விதிமீறல். அமைச்சரின் மகனுக்காக, 64 வேளாண் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்காக, தலைக்கு ரூ.5,00,000 வசூலும் நடந்துள்ளது. இனிமேல், எந்தெந்த ஊரில் 'போஸ்ட்டிங்' வேண்டுமென்று கேட்டு, அதற்கும் தனியாக வசூல் நடத்துவார்கள்" 

- தேரை ஏற்றிக் கன்றுக்குட்டியைக் கொன்ற இளவரசனைத் தன் மகன் என்றும் பாராமல், அதே தண்டனையைத் தந்த மனுநீதிச் சோழன் வாழ்ந்த மண்ணில்தான், தன் மகனுக்குப் பதவி உயர்வு தர வேண்டும் என்பதற்காக, பலரது வேலைவாய்ப்புகளைக் காவு கொடுத்துள்ளார் ஓர் அமைச்சர். அதன் பின்னணியைச் சொல்கிறது 'அமைச்சரின் மகனுக்காக ஓர் அரசாணை! - வேளாண்துறையில் விதிமீறல்' எனும் செய்திக் கட்டுரை.  மேலும் படிக்க க்ளிக் செய்க....

இந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2BEX3yn