Published:Updated:

காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே: யாசின் மாலிக்

காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே: யாசின் மாலிக்
காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே: யாசின் மாலிக்
காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே: யாசின் மாலிக்

கடலூர்: அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்கும்போது மேடைகளில்  பிரபாகரன் படம் போடப்பட்டிருந்தது.அப்போது பிடித்தது இப்போது பிடிக்கவில்லையா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே என யாசின் மாலிக் கூறியுள்ளார்.

 காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே

கடலூரில் இன்று நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் தடை செய்யப்பட்டதை அடுத்து, ஒரு திருமண மண்டபத்தில் உள்ளரங்கு கூட்டமாக அது மாற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவரும், பிரிவினைவாத இயக்கத் தலைவருமான யாசின் மாலிக், இந்த உள்ளரங்கு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசுகையில்,"இன விடுதலைக்கான போராட்டங்கள் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவதில்லை. அதுபோல், அடக்குமுறைகள் மூலம் இன விடுதலைக்கான போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதுமில்லை. காஷ்மீரில் நடைபெறும் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒரே மாதிரியானதுதான்.

தமிழர்களின் இந்த இன விடுதலைப் போராட்டம் வரவேற்கத்தக்கது. ஜனநாயக முறையில் நடக்கும் இந்தப் போராட்டத்தை ராணுவத்தைக் கொண்டோ,. போலீஸைக் கொண்டோ அடக்கி ஒடுக்க முடியாது. தமிழர்களின் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு தொடரும்" என்றார்.

'அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா?'

நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் பேசுகையில்,"சென்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக்

காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே: யாசின் மாலிக்

கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?

திமுக., அதிமுக., இரண்டுக்குமே இது கடைசித் தருணம். நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம்" என்றார்.