Published:Updated:

``எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க கறுப்புப் பணத்தை இறைக்கிறார் மோடி” - சஞ்சய் தத் தாக்கு!

``எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க கறுப்புப் பணத்தை இறைக்கிறார் மோடி” - சஞ்சய் தத் தாக்கு!
``எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க கறுப்புப் பணத்தை இறைக்கிறார் மோடி” - சஞ்சய் தத் தாக்கு!

``எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க கோடிக் கணக்கில் கறுப்புப் பணத்தை இறைக்கிறார் மோடி” என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சஞ்சய் தத் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட குழுக்களின் ஆலோசனைக் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான சஞ்சய் தத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் தத், ``அ.தி.மு.க அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக விமர்சித்து வந்த பா.ம.க, தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்திருக்கிறது. அது சந்தர்ப்பவாத கூட்டணியே தவிர கொள்கைக்கான கூட்டணி இல்லை. அதேபோல் மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசு, சி.பி.ஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை கையில் வைத்துக்கொண்டு, அ.தி.மு.க-வினரின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்துவிடுவோம் என மிரட்டி அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கிறது.

ஆனால், காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி என்பது மக்கள் நலனுக்கான, கொள்கைக்கான கூட்டணி. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மக்கள், அவர்களின் நலனுக்காக செயல்படும் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு மாநில பிரச்னைகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்காத பிரதமர் மோடி, சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கர்நாடகாவில் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பா.ஜ.க தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதற்காக கோடிக்கணக்கில் மோடி கறுப்புப் பணத்தை இறைத்து வருகிறார்” என்றார்.