Published:Updated:

“நாங்கள் ஊறுகாய் அல்ல!” - குமுறும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் - குழப்பத்தில் ரங்கசாமி....

“நாங்கள் ஊறுகாய் அல்ல!” - குமுறும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் - குழப்பத்தில் ரங்கசாமி....
பிரீமியம் ஸ்டோரி

புதுச்சேரி அரசியலில், என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் குழப்பங்களுக்கும் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், ஏற்கெனவே கட்சியிலிருந்து விரட்டப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைத்ததால், என்.ஆர் காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் உச்சத்தில் இருக்கிறது. இதை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறார் அந்தக் கட்சியின் தலைவர் ரங்கசாமி.

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சித் தொடங்கிய ரங்கசாமி, அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். காரியம் முடிந்ததும் கச்சிதமாக அ.தி.மு.க-வைக் கழற்றிவிட்டவர், சுயேச்சை ஒருவரின் ஆதரவுடன் ஆட்சியில் அமர, கொதித்துப்போய் கூட்டணி யிலிருந்து வெளியேறியது அ.தி.மு.க. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனை இழுத்து 2014 நாடாளு மன்றத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்தார் ரங்கசாமி.

“நாங்கள் ஊறுகாய் அல்ல!” - குமுறும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் - குழப்பத்தில் ரங்கசாமி....

15 எம்.எல்.ஏ-க்களை கையில் வைத்திருந்த ரங்கசாமி, 2015 ராஜ்யசபா தேர்தலில், தன் நண்பரும், தொழிலதிபருமான கோகுல கிருஷ்ணனை எம்.பி-யாக்க நினைத்தார். ஆனால், காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ-வான கல்யாணசுந்தரம், லாஸ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வான வைத்தியநாதன், ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ-வான கார்த்திகேயன் ஆகிய மூவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எதிரணியில் காங்கிரஸ் - தி.மு.க ஆதரவுடன் சுயேச்சையாக நிற்க நினைத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு வாக்களிக்க முடிவெடுத்தனர். சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களே தனது ஆட்சியைக் கவிழ்க்க முடிவு செய்திருப்பதைத் தெரிந்து கொண்ட ரங்கசாமி, ராஜ்யசபா எம்.பி பதவியை அ.தி.மு.க-வுக்கு விட்டுக்கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டார். தொடர்ந்து, 2016 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கல்யாண சுந்தரம், வைத்தியநாதன், கார்த்திகேயன் ஆகிய மூன்று பேருக்கும் கல்தா கொடுத்துவிட்டு, அந்தத் தொகுதிகளில் மாற்று வேட்பாளரை நிறுத்தினார். பதிலுக்கு இந்த மூவரும் சுயேச்சையாகப் போட்டியிட்டு ரங்கசாமி நிறுத்திய வேட்பாளர்களைத் தோற்கடித்தனர்.

இந்தநிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் ‘சீட்’ என்ற வாக்குறுதியுடன் அந்த மூவரையும் தங்கள் பக்கம் இழுக்கப் பல கட்டப் பேச்சு வார்த்தைகளை நடத்தியது காங்கிரஸ். அதை அறிந்த ரங்கசாமி அந்த மூவரையும் நேரில் சந்தித்து, ‘பழையபடி ஒற்றுமையாக இருப்போம். சீட் உங்களுக்குத்தான்’ என்று சமாதானம் பேசி உருகியிருக் கிறார். இதில் சமாதானம் அடைந்தவர்கள் மீண்டும் என்.ஆர் காங்கிரஸில் இணைந்து விட்டனர். இதுதான் தற்போது என்.ஆர் காங்கிரஸில் உட்கட்சிப் பூசலை ஊதிவிட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நாங்கள் ஊறுகாய் அல்ல!” - குமுறும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் - குழப்பத்தில் ரங்கசாமி....

லாஸ்பேட்டைத் தொகுதி யின் முன்னாள் எம்.எல்.ஏ-வான வைத்தியநாதனின் வரவால், அந்தத் தொகுதியைக் குறிவைத்துப் பணியாற்றி வந்த ரியல் எஸ்டேட் அதிபர் புவனா (எ) புவனரட்சகன், நந்தா ஸ்ரீதரன், கூட்டணிக் கட்சி என்பதால் உள் ஒதுக்கீட்டில் நமக்குத்தான் சீட் கிடைக்கும் என்று நினைத்திருந்த பி.ஜே.பி மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால், என்.ஆர் காங்கிரஸ் இங்கு மூன்று அணிகளாகப் பிரிந்துகிடக்கிறது.

அதேபோல, ஊசுடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான கார்த்திகேயனின் ரீ-என்ட்ரியால், ஏற்கெனவே அங்குப் போட்டியிட்ட வைத்தியநாதன், பி.ஜே.பி-யில் இருந்தாலும் ரங்கசாமியை முன்னிறுத்தி அரசியல் செய்துவரும் சாய் ஜெ.சரவணக்குமார் ஆகியோர் அதிருப்தியில் இருக்கிறார்கள். காலாப்பட்டு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான கல்யாணசுந்தரத்தின் வரவால் அதிருப்தியடைந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

திருபுவனைத் தொகுதியில், தற்போதைய என்.ஆர் காங்கிரஸின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான கோபிகாவை எதிர்த்து, கடந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டவர் முன்னாள் எம்.எல்.ஏ அங்காளன். இவர் தற்போது என்.ஆர் காங்கிரஸில் இணைந்திருப்பதால், உச்சக்கட்ட கடுப்பில் இருக்கும் கோபிகா, மக்களவைத் தேர்தலுக்காக தொகுதிக்குள் பிரசாரம் செய்யச் சென்ற ரங்கசாமியின் முன்னிலையிலேயே அங்காளனை வாகனத்தில் ஏறவிடாமல் கோபத்தை வெளிப்படுத்தினார். 

“நாங்கள் ஊறுகாய் அல்ல!” - குமுறும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் - குழப்பத்தில் ரங்கசாமி....

இது ஒருபுறமிருக்க, முத்தியால்பேட்டையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான வையாபுரி மணிகண்டனுக்கும், என்.ஆர் காங்கிரஸ் சார்பில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்குமாருக்கும் ஏழாம் பொருத்தம். இந்தத் தொகுதியிலும் வாக்கு சேகரிக்கச் சென்ற ரங்கசாமியின் வாகனத்தில் பிரகாஷ் குமாரை ஏற்றக்கூடாது என்று ரங்கசாமியிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் (கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வைச் சேர்ந்த) வையாபுரி மணிகண்டன். அவரிடம் சமாதானம் பேசி பிரகாஷ்குமாரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டார் ரங்கசாமி.

தொடர்ந்து, “இந்த மக்களவைத் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நம் வேட்பாளரை வெற்றி பெற வையுங்கள். உங்களுக்குள் நடக்கும் இந்தச் சண்டை எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாகிவிடும்” என்று அனைத்து நிர்வாகிகளிடமும் பேசினார் ரங்கசாமி. அதற்கு அவர்களோ, “சட்டமன்றத் தேர்தலில், ‘யாருக்கு சீட்’ என்று சொல்லுங்கள். எம்.பி தேர்தலுக்கு மட்டும் எங்களைப் பயன்படுத்திக்கொள்ள, நாங்கள் ஒன்றும் ஊறுகாய் அல்ல” என்று ஏகத்துக்கும் எகிற... குழப்பத்தில் இருக்கிறார் ரங்கசாமி.

இந்தக் குழப்பக் குட்டையில் மீன் பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பும், அதற்கு இடமளித்துவிடக் கூடாது என்று ரங்கசாமியும் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

- ஜெ.முருகன்

 படங்கள்: அ.குரூஸ்தனம்