Published:Updated:

தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்?

தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்?
பிரீமியம் ஸ்டோரி
தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்?

தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்?

தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்?

தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்?

Published:Updated:
தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்?
பிரீமியம் ஸ்டோரி
தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்?
தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்?

காட்பாடியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போது துரைமுருகனின் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனின் சிமென்ட் குடோனில், பத்து கோடியே 57 லட்சம் ரூபாய் சிக்கியதால், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலைத் தலைமைத் தேர்தல் ஆணையம் ரத்துசெய்துள்ளது. இதை எதிர்த்து ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தாக்கல்செய்த வழக்குகளில், ‘தேர்தல் ரத்து செல்லும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் ரத்து குறித்து வேலூர் தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள்? 

தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீர்த்தி, தனியார் நிறுவன ஊழியர்: ‘‘தேர்தல் ரத்து சரியான முடிவுதான். வேட்பாளர்கள் ஓட்டுக் காகப் பணம் கொடுப்பதைத் தடுக்க வேண்டும். நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தலை நடத்தவேண்டும். அரசியல்வாதிகளிடம் பிடிபட்ட பணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் நடப்பதற்கு முன்பே இவ்வளவு குளறுபடி என்றால், ஓட்டுப்போட்டுத் தேர்வுசெய்யப்பட்ட பிறகு என்னவெல்லாம் நடக்கும்? நேர்மையான நபர்கள் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. பணம் உள்ளவர்கள்தான் போட்டியிட முடிகிறது.’’

கந்தசாமி, டிசைனிங் இன்ஜினீயர்: ‘‘தமிழகத்தில் பல இடங்களில் புகார்கள் வந்தும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துரைமுருகன் மட்டும்தான் பணம் கொடுக்கிறாரா, மற்றத் தொகுதிகளில் வேறு எந்தக் கட்சியும் பணம் தரவில்லையா? இறுதிக்கட்ட பிரசாரம் முடிந்த நிலையில், தேர்தல் ரத்து என்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் மக்களின் வரிப்பணம்தான் வீணடிக்கப்பட்டுள்ளது.’’ 

தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்?

ஆனந்தன், தனியார் நிறுவன ஊழியர்: ‘‘வெளியூர்களில் தங்கி வேலைசெய்கிறோம். ஓட்டுப்போடுவதற்காகவே வேலூருக்கு வந்தோம். ஆனால், திடீரென தேர்தலை ரத்துசெய்துவிட்டார்கள். தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, மொத்த மாகத் தேர்தலையே ரத்துசெய்தால் எப்படி? இதெல்லாம் தேவையற்ற நடவடிக்கை. தேர்தலை நடத்தியபிறகு சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீதான குற்றம் குறித்து விசாரணை நடத்தியிருக்க லாம். எல்லாக் கட்சிகளும்தான் பணம் கொடுக்கிறார்கள்.’’

சந்திரன், அரிசி மண்டி வியாபாரி: ‘‘பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி திட்டமிட்டு சதி செய்திருக்கிறது. எதிர்க் கட்சிகளைக் குறிவைத்து மட்டுமே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் ஆளும்கட்சி பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களிடம் எந்தவிதமான சோதனைகளும் நடத்தவில்லை. இதுபோன்ற பாரபட்சமான சூழலில், வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து கண்டிக்கத்தக்கது. முன்கூட்டியே அறிவித்திருந்தால், பொதுமக்களுக்குச் சிரமம் இருந்திருக்காது.
 
சேகர், மூட்டைத் தூக்கும் தொழிலாளி: ‘‘வேலூர் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க இரண்டு கட்சிகளும் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள். ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும் தவறு, வாங்குவதும் தவறு. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதில்லை. காமராஜர் காலத்திலேயே இப்படித்தான் இருந்தது. அதேசமயம் இப்போதைய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை வரவேற்கிறேன்.’’

தேர்தல் ரத்து! - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்?

கோபால், கூலித் தொழிலாளி: ‘‘முதலீடு போட்டு லாபம் எடுக்கும் தொழிலைப்போல் தேர்தலும் வியாபாரமாகிவிட்டது. பத்து கோடி... இருபது கோடி ரூபாய் செலவுசெய்து, வெற்றிபெற்ற பிறகு ஆயிரம் கோடி... ஐந்தாயிரம் கோடி என கொள்ளை அடிக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது. அதேசமயம், ஜனநாயக நாட்டில் தேர்தல் ரத்துசெய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கைப்பற்றப்பட்ட பணம், துரைமுருகனுக்குச் சொந்தமானதா என்பதையும் உறுதிசெய்யவில்லை.’’

ஆறுமுகம், பூ வியாபாரி: ‘‘ஓட்டுப்போட முடியவில்லையே என்று வேதனையாக இருக்கிறது. பண வசதி இல்லாத சுயேச்சை வேட்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் அவர்கள் போட்டியிடுவதற்குத் தயங்குவார்கள். ஓட்டுக்குக் கொடுக்கும் பணத்தைவைத்து எத்தனை நாள் செலவுசெய்ய முடியும்... தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்திருக்கிறது. மத்திய அரசு, வருமானவரித் துறையை ஏவிப் பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.’’

கலைச்செல்வி, அரசு மருத்துவமனை ஊழியர்: ‘‘தேர்தல் ரத்துசெய்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் தேர்தல் நடத்தும்போதும் பணம் கொடுப்பார்கள். அப்போது என்ன செய்யும் தேர்தல் ஆணையம்? அ.தி.மு.க., தி.மு.க இரண்டு கட்சிகளுமே வேண்டாம். அவர்கள் மாறிமாறி ஆட்சியில் இருந்தும் நல்லது செய்யவில்லை.’’

பிரேமா, இல்லத்தரசி: ‘‘தேர்தல் ரத்து தவறுதான். பணம் பதுக்கியவர்களைத் தண்டித்திருக்க வேண்டும். எல்லாக் கட்சிகளும் ஊழல் செய்கிறது. ஆட்சிக் கட்டிலில் மாறிமாறி அமர்ந்து, தமிழகத்தை நாசப்படுத்திவருகிறார்கள்.’’

சதீஷ்குமார், ஆட்டோ ஓட்டுநர்: ‘‘ஆர்.கே நகர் ஃபார்முலாதான் இங்கேயும் நடக்கப்போகிறது. தேர்வில் ஒருவன் காப்பி அடிக்கிறான் என்றால் அவனை மட்டும் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றுவார்களா அல்லது ஒட்டுமொத்தமாகத் தேர்வையே ரத்துசெய்வார்களா? அதேபோல் ஒரு வேட்பாளர்மீதான குற்றச்சாட்டுக்குத் தேர்தலையே ரத்து செய்திருக்கிறார்கள். இது தவறு.’’

- கோ.லோகேஸ்வரன், படங்கள்: ச.வெங்கடேசன்