Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ரண்டு மாதங்களாக கோடை வெயிலைவிட வாட்டியெடுத்த தேர்தல் பிரசாரம் முடிந்தேவிட்டது. ரிசல்ட் தெரிய இன்னும் ஒரு மாதமாகும். கடந்த சில மாதங்களாகப் பரபரப்பாக சுற்றிவந்த தமிழக அரசியல் தலைவர்கள் இனி என்ன செய்வார்கள்? அதுக்குத்தானே நாங்க இருக்கோம். இதோ சொல்றோம்...

ஐடியா அய்யனாரு!

தங்கபாலு தி ட்ரான்ஸ்லேட்டர்

தங்கபாலுவின் சேவை மொத்த நாட்டுக்குமே தேவை. இங்கேதானே ராகுலின் பிரசாரம் முடிந்திருக்கிறது. இன்னும் பல இடங்களில் அவர் பிரசாரம் செய்யவிருக்கிறார். அங்கெல்லாம் தங்கபாலுவே ட்ரான்ஸ்லேட்டராக வேலைக்குப் போகலாம். ‘North east india is the gateway of south east asia’ என ராகுல் பேசினால் ‘இந்தியா கேட் என்ற கல்லு கட்டடம் டெல்லியில் உள்ளது’ என மொழிபெயர்ப்பார் பாலு. அவருக்கு பாஷையா முக்கியம்?

மதுரை டான் 


டி.ராஜேந்தர் தொடங்கி லேட் அட்டெண்டென்ஸ் போடும் நவரச நாயகன்வரை எல்லாரும் கருத்து சொன்னார்கள். ஆனால், அழகிரியோ செம சைலன்ட். இத்தனை நாள்களாக அமைதியாக இருந்து ரெஸ்ட் எடுத்தவர் இப்போது ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டு ஆனதால் மீண்டும் ரெஸ்ட் எடுக்கச் செல்வார்! வேற வழி?

உங்கள் நான் 

பிக் பாஸில் சூப்பராக அரசியல் பேசிய கமல், இப்போது அரசியல் மேடைகளில் பிக் பாஸ் வசனங்கள் பேசிக் கொண்டிருக்கிறார். ‘உங்கள் நான்’ அதில் ஒரு சாம்பிள். வழக்கமாக இந்த மாதத்தில்தான் பிக் பாஸ் பேச்சுகள் சேனலில் ஆரம்பமாகும். எனவே, வழக்கம்போல அடுத்த சீசனுக்கான ஸ்கிரிப்ட் பிளஸ் சீன்களைத் தயார் செய்யும் வேலையில் இறங்கிவிடலாம் ஆண்டவர்!

ஃபார்வேர்டுகளின் ராஜா 

காங்கிரஸுக்கு ஒரு தங்கபாலு என்றால், பி.ஜே.பி-க்கு ஒரு ஹெச்.ராஜா! இவரின் மொழிபெயர்ப்பு ஏலியன்கள்வரை பிரசித்தம். பிற மாநிலங்களில் வாக்குப்பதிவு இன்னமும் மிச்சமிருப்பதால், இவரும் இவரது குழுவும் வழக்கம்போல, ‘இந்தியா ராக்கெட் விட்டு சாட்டிலைட்டை போட்டுத்தள்ளுச்சுல, அந்த ராக்கெட்டை ஓட்டினது மோடிதான்’ என வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளை எல்லா மொழிகளிலும் தட்டிவிடலாம்.

பாம்பன்

சுணங்கிப் போயிருந்த இந்திய பி.ஜே.பி, சுப்ரீம் ஸ்டாரின் வருகைக்குப் பின்தான் சுர்ரென எகிறியது. வாக்குவங்கியும் இரண்டு சதவிகிதம் வரை உயர்ந்தது. பிரசாரம் முடிந்தநிலையில், சுப்ரீம் சரத் இப்போது தன் பழைய கமிட்மென்ட்டான ‘பாம்பன்’ படத்தில் நடிப்பார். ஹாலிவுட் அனகோண்டாவுக்கு சவால்விடும் இந்தப் படத்தில், நாககண்ணனாக அவர் நடிக்கிறார் என்பது தெரிந்த செய்திதான். படம் ரிலீஸாகும்போது கட்சிப் பொதுக்கூட்டத்தைப் போல தியேட்டர்களும் ‘செம கூட்டமாக’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!