Published:Updated:

மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?

மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?

மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?

மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?

மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?

Published:Updated:
மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?

வாக்குப்பதிவு, கடைசிக்கட்ட அக்கப்போர்கள் என்று நள்ளிரவைத் தாண்டியும் சுற்றிச்சுழன்ற கழுகார், பரிதி தோன்றும் வேளையில் படுசுறுசுறுப்புடன் அலுவலகம் வந்தமர்ந்தார். சுடச்சுட நாம் கொடுத்த ஃபில்டர் காபியை ருசித்துக் குடித்தவரிடம், ‘‘72 சதவிகித வாக்குப்பதிவுக் கணக்கைப் பார்த்தால் ஆளும்கட்சிக்கு எதிரான அலையாக இது இருக்குமோ?’’ என்றோம்.

மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?

பலமாகத் தலையாட்டியவர், ‘‘அலையா... விலையா... என்றுதான் அனைத்துக் கட்சிகளுமே குழம்பிக் கொண்டிருக்கின்றன. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மோடி அலை வீசியது. ஆனாலும், தமிழகத்தில் வீசியதோ ‘லேடி’ அலை. அப்போது 73 சதவிகித வாக்குகள் பதிவாகின. இப்போது வாக்குப்பதிவு சதவிகிதத்தின் இறுதிகட்ட நிலவரம் இன்னமும் கிடைக்கவில்லை. என்றாலும் சுமார் 72 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. `இது, மோடிக்கு எதிரான அலையா, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எதிரான அலையா அல்லது வாரியிறைக்கப்பட்டதற்குக் கிடைத்த விலையா?’ என்று அ.தி.மு.க., தி.மு.க கூட்டணி என அனைவரையுமே குழப்பத்தில்தான் ஆழ்த்தி யுள்ளது.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?‘`இதிலென்ன குழப்பம்?’’

‘`மோடி மற்றும் எடப்பாடி ஆகியோரின் ஆட்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு இருந்தால், இது அலையாக இருக்கலாம். அதேசமயம், அ.தி.மு.க, தி.மு.க., அ.ம.மு.க என்று மூன்று தரப்பிலுமே பணத்தை வாரி இறைத்துள்ளனர். இதை வைத்துப் பார்த்தால், கிடைக்கும் முடிவு விலையைப் பொறுத்ததாகத்தானே இருக்க முடியும். அப்படியென்றால், அதிகமாகக் கொடுத்தவர்களுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால், கொடுத்ததை யெல்லாம் வாங்கிக்கொண்டு, இஷ்டப்பட்டவர் களுக்கு வாக்குகளைப் போட்டிருந்தார்கள் என்றால்?’’

மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?

‘`ஓவராகக் குழப்புகிறீர்களே...’’

‘`தேனி தொகுதியில் வாக்காளர்கள் சிலரிடம் உளவுத்துறையினர் பேசியபோது, ‘முன்பெல்லாம் இலைக்குத்தான் போடுவோம். ஆனால், இப்போது எல்லோருமே பணத்தை வாரிக் கொடுத்துள்ளனர். எனவே, யோசித்துதான் போடுவோம்’ என்று கிடைத்த பதில் ஆட்சி மேலிடத்தையும் யோசிக்க வைத்துள்ளது. ‘2014 ரிப்பீட் ஆகிவிடுமோ’ என்று தி.மு.க-வினரையும் திகிலில் ஆழ்த்தியுள்ளது.’’

‘‘இடைத்தேர்தல் நடந்த 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகமாகியிருக்கிறதே?’’

‘‘அ.ம.மு.க-வினரின் கடும்உழைப்பும் இதற்கு ஒரு காரணம். பல இடங்களில் ஆளும் அ.தி.மு.க-வினருடன் பலமாக மோதி மண்டையடி யெல்லாம் பட்டுள்ளனர். அதையெல்லாம் தாண்டி, ‘கட்டாய வெற்றி’ என்கிற வெறியோடு ஆளும்தரப்பினர் பொழிந்த பணமழை முக்கியக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.’’

‘‘அப்படியானால், இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும்கட்சிக்குச் சாதகமாக இருக்குமா?’’

‘‘கணிப்பதற்குச் சிரமமாகத்தான் இருக்கிறது என்கிறார்கள். பல தொகுதிகளில் வாக்களிக்க வந்த மக்களின் மனநிலையை ஓரளவு கணிக்க முடிந்தது. வாக்குப்பதிவு தொடங்கும் காலை நேரத்தில் வாக்காளர்கள் திரளாக வந்து வரிசையில் நின்றனர். குறிப்பாக, சிறுபான்மையினர் குடும்பத் துடன் வந்து வாக்குகளைப் பதிவுசெய்ததை அ.தி.மு.க தரப்பு கூர்ந்து கவனித்தது. நேரமாக... நேரமாக வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்து கொண்டே வந்ததையும் கவனித்திருக்கிறது!’’

மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?


‘‘உளவுத்துறை ஏதேனும் தகவல் கொடுத்திருப் பார்களே!’’

‘‘நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளில், பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க கூட்டணியே முன்னிலையில் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்திருக்கிறதாம். ஆனால், இதைப்பற்றி அ.தி.மு.க தலைமை பெரிதாகக் கவலைப்படவில்லையாம். ஆட்சிக்கு ஏற்பட்ட கண்டத்திலிருந்து தப்ப வாய்ப்பு உள்ளதா என்றுதான் ஆர்வமாக விசாரித்திருக்கிறது!’’

‘‘என்ன தகவல் கிடைத்ததாம்?’’

‘`இடைத்தேர்தல் நடைபெற்ற 18 தொகுதிகளில் மானாமதுரை, பரமக்குடி, பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர், குடியாத்தம், சாத்தூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க-வுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை சொல்லியிருக்கிறதாம். 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் என்றபோது, 8 தொகுதிகளில் வென்றால் போதும் என்கிற நிலை இருந்தது. மேற்கொண்டு நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தால், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள மொத்தம் பத்து தொகுதிகளில் வெற்றிபெறவேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது. இதனால், டென்ஷனில் எகிறிக்கிடக்கிறது எடப்பாடி தரப்பு!’’

மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?

‘‘சரி!’’

‘‘ஆறு தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிய வந்திருப்பதால், தனியாக இடைத்தேர்தல் நடக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளை கட்டாயம் வென்றே ஆகவேண் டும். ‘ஆறும் நான்கும் பத்து... ஆட்சிக்கு இல்லை ஆபத்து’ என்று கணக்குப்போடுகிறது எடப்பாடி தரப்பு. எதிர் தரப்பிலோ, ‘எடப்பாடிக்கு இல்லை பத்து... ஆட்சிக்கு ஆபத்து’ என்று பிடில் வாசிக்கத் தொடங்கியிருக் கிறார்கள். இதுவரையிலும் பி.ஜே.பி தயவில் பல்வேறு தடைகளைத் தாண்டி ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டார் எடப்பாடி. ‘இனி அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுமோ’ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள்!’’

“மத்தியில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சிதான் என்று கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. ஆனால், பழனிசாமிக்கு அதில் நம்பிக்கையில்லையோ?’’

மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?

‘‘ஒருவேளை மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதன் மூலமாகவும் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று எடப்பாடி தரப்பு அச்சத்திலேயே இருக்கிறது. அதனாலேயே, காங்கிரஸ் கட்சியைத் தேர்தல் களத்தில் திட்டாமல் தவிர்த்தே வந்துள்ளார் எடப்பாடி என்று பி.ஜே.பி தரப்பில் கடுப்பில் இருக்கிறார்களாம்.’’

‘‘சரி, தமிழகத்தில் பி.ஜே.பி-யின் வெற்றிவாய்ப்பு எப்படியாம்?’’

‘`அக்கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டவர்கள் அத்தனை பேரும் முக்கியத் தலைவர்கள். கருத்துக்கணிப்புகளின்படி, கோவையைத் தவிர மற்ற நான்கு தொகுதிகளில் பி.ஜே.பி தேறுவது கஷ்டம். அப்படி அவர்கள் தோற்றுவிட்டால், அதற்கும் அ.தி.மு.க அரசின் ஊழல்கள்மீது பழி போடவும் வாய்ப்பு இருக்கிறது. அந்தச் சூழ்நிலை ஏற்பட்டால், அப்போதும் ஆட்சிக்கு ஆபத்துதான்!’’

‘‘கோவை நிலவரம் எப்படி இருக்கிறது?’’

‘‘அங்கு பி.ஜே.பி வேட்பாளர் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு இருந்த வெற்றிவாய்ப்பு கடைசி நேரத்தில் குறைந்துவிட்டதாம். காரணம், அ.தி.மு.க தரப்பில் பெரிய ஒத்துழைப்பு இல்லை யாம். அதேபோல நீலகிரியிலும் ராசாவுக்குக் கடும் போட்டி என்கிறார்கள். இந்தமுறை ராசா தரப்பில் பெரிதாகக் காசை இறக்கவில்லையாம். மாறாக, நீலகிரியின் கட்சி நிர்வாகிகளை செலவுசெய்யச் சொன்னாராம். இதில் அதிருப்தி அடைந்த உள்ளூர் கட்சியினர் சரியாக வேலை செய்யவில்லை என்கிறார்கள். இதனால், கோவை, நீலகிரி என இரண்டு தொகுதிகளிலும் நிலைமை மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு!’’

‘‘வேலூர் தொகுதியைப்போலவே, மேலும் மூன்று தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வதற்கு முயற்சிகள் நடந்ததாமே?’’

மிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா?

“ஆமாம்... அதற்கு முன் வேறொரு விஷயத்தைச் சொல்கிறேன். வேலூர் முதல், தூத்துக்குடி வரை ‘போட்ட கணக்கு ஒன்று... நடந்தது ஒன்று’ என்று டெல்லி தரப்பு புலம்பிவருகிறது. வேலூர் விவகாரத்தில் படிப்படியாக நடவடிக்கை எடுத்து, தேர்தல் ரத்து அறிவிப்பை ஒரு வாரத்துக்கு முன்பே அறிவிக்க மத்திய சட்ட அமைச்சகம் முடிவு செய்திருந்ததாம். ஆனால், போதிய ஒத்துழைப்பை தேர்தல் ஆணையம் வழங்காமல், பிரசாரம் ஓய்ந்தபின்பு தேர்தல் ரத்து அறிவிப்பை வெளியிட்டது. இது தி.மு.க-வுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதைவிட, ஆளும்தரப்புக்கு எதிரான கருத்தை மக்களிடம் விதைத்துவிட்டதாக உளவுத் துறை நோட் அனுப்பியுள்ளதாம். அதேபோல, தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில், கடைசி நேரத்தில் ஐ.டி ரெய்டு போனதும் ஆளும்கட்சிக்குப் பாதகமாகி விட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்!’’

‘‘ஓ!’’

‘‘வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கத் திட்ட மிட்டிருந்தாலும், அதை வேட்பாளரே தன்னுடைய வீட்டில் வைத்திருப்பாரா? பிரசாரம் முடிந்த நேரத்தில் கனிமொழி வீட்டுக்குள் புகுந்து வெறுங்கையோடு திரும்பியதைப் பார்த்துவிட்டு, வருமானவரித் துறையின்மீது கடுப்பாகிவிட்டதாம் பி.ஜே.பி தலைமை. இதனால், அந்தத் துறையின் முக்கிய அதிகாரிகளை அழைத்து, ‘லெஃப்ட் அண்டு ரைட்’ வாங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொன்ன காரணத்தைக் கேட்டு ‘கப்சிப்’ ஆகிவிட்டார்களாம்!’’

‘‘அப்படி என்ன சொன்னார்களாம்?’’

‘‘வேலூரில் பணம் பிடிபட்டவுடன் தூத்துக்குடி யில் அனிதா ராதாகிருஷ்ணனை குறிவைத்து தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தியது. அப்போது எதுவும் சிக்கவில்லை. ஆனால், அந்தத் தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தரப்பு டெல்லி மேலிடத்துக்குத் தொடர்ந்து புகார் ஓலை கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறது. அதனால், வேண்டா வெறுப்பாக அந்த ரெய்டை நடத்தியதாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்படித் தான் தூத்துக்குடியில் தேர்தலை ரத்துசெய்ய தமிழக பி.ஜே.பி போட்ட கணக்கு தப்பாகிவிட்டது. அதே கணக்கை அ.தி.மு.க தலைவர் ஒருவரும் போட்டுப் பார்த்துள்ளார்.’’

‘‘என்னது... அ.தி.மு.க தலைவரா?’’

‘‘தேனியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். வெற்றி வாய்ப்பு எதிர்பார்த்தபடி இருக்காது என்று ஒரு தகவல் கிடைக்கவே, டெல்லிக்கு போன் போட்டு, ‘ஆண்டிபட்டி துப்பாக்கிச் சூட்டை காரணம் காட்டி தேனியில் தேர்தலை நிறுத்த வாய்ப்புள்ளதா?’ என்று பன்னீர் தரப்பில் கேட்டார்களாம். தொடர்ந்து, டெல்லியிலிருந்து தமிழகத் தேர்தல் ஆணையரிடமும் விளக்கம் கேட்கப்பட்டதாம். ஆனால், குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல்பெற காலதாமதமாகும் என்பதால், விட்டுவிட்டார்கள்!’’

‘‘கரூர் கலெக்டரும் தேர்தலை நிறுத்தி விடுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை போனில் எச்சரித்தாரே?’’

‘‘அங்கு நடந்த கல்வீச்சுப் பிரச்னையை வைத்து, கலெக்டர் அன்பழகன் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, அப்போதைக்கு அதை ஏற்கவில்லையாம்!’’

 ‘`அப்போதைக்கு என்று பூடகமாக எதையோ சொல்ல வருகிறீரே?’’

‘`டெல்லி பி.ஜே.பி தலைமையும், தமிழக அ.தி.மு.க தலைமையும் வாக்குப்பதிவு விவரங்களை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. ஒருவேளை, தங்களுக்குப் பாதகம் என்று அவர்கள் நினைக்கும் பட்சத்தில், தேனி, தூத்துக்குடி மற்றும் கரூர் மூன்று தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்தல் என்று அறிவிக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. இதற்குத் தோதாகத்தான் ஏற்கெனவே இந்த மூன்று தொகுதிகளிலும் சிலபல ஆதாரங்களை உருவாக்கி வைத்துள்ளனர்’’ என்ற கழுகார் ‘டக்’கென சிறகுகளை விரித்தார்.

படங்கள்: எம்.விஜயகுமார், நா.ராஜமுருகன், ப.கதிரவன்